வடிவேலு ஸ்டைலில் புகார்... இங்கிருந்த ரோட்டை காணமய்யா !

தெற்கு டெல்லியை சேர்ந்த மக்கள் சாலை ஒன்று காணாமல் போய் விட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஒரு படத்தில் வைகைப் புயல் வடிவேலு கிணற்றை காணவில்லை என்று புகார் கொடுப்பார்.
வடிவேலு ஸ்டைலில் புகார்... இங்கிருந்த ரோட்டை காணமய்யா !
அதே ஸ்டைலில் தெற்கு டெல்லியை சேர்ந்த மக்கள் சாலை ஒன்றை காண வில்லை என்று சி.ஆர். பார்க் காவல் நிலைய த்தில் புகார் அளித் துள்ளனர்.

கடந்த 2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் சாலையை காணவில்லை என்று அவர்கள் தங்களின் புகார் மனுவில் தெரிவித் துள்ளனர். 

மேலும் சாலையை காணவில்லை என்று கல்காஜி காவல் நிலையத் திலும் புகார் அளிக்கப் பட்டுள்ளது. ஆலக்நந்தா பகுதியை சேர்ந்த 33 பேர் கொளுத்தும் வெயிலில் காணாமல் போன சாலையை தேடினார்கள். 
மேலும் சாலையை நேற்று மாலை 6 மணிக்குள் கண்டுபிடித்து கொடுப்பவர் களுக்கு ரூ.10 ஆயிரம் சன்மானம் அளிக்கப் படும் என்று அறிவித்தனர்.

1.5 கிலோ மீட்டர் வரையிலான அந்த சாலை வரை படத்தில் உள்ளது நிஜத்தில் இல்லை என்கிறார்கள் மக்கள். அந்த இடத்தில் அரசு பள்ளி ஒன்றும், டிடிஏ காலனியும் வந்து விட்டதாம்.
Tags:
Privacy and cookie settings