புதிய விசா கொள்கை... முதல் இந்தியருக்கு துபாயில் வரவேற்பு !

அமெரிக்க விசா வைத்து இருக்கும் இந்தியர்கள் அமீரகத்தில் தங்க அனுமதிக்கும் வருகை விசாவை நேற்று முன்தினம் முதல் அமீரகத்தின் அனைத்து குடியுரிமை வழங்கல் பிரிவு 
புதிய விசா கொள்கை... முதல் இந்தியருக்கு துபாயில் வரவேற்பு !
அலுவல கங்களிலும் பெற்றுக் கொள்ளலாம் என்று அமீரக வெளியுவுத் துறை அறிவித்து இருந்தது. 

அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இந்தியாவை சேர்ந்த ஒருவர் வருகை விசா பெறுவதற் காக அமெரிக்க விசாவுடன் துபாய் சர்வதேச விமான நிலையம் வந்து இறங்கினார்.

அவருக்கு குடியுரிமைத் துறை அதிகாரிகள் வரவேற்பு அளித்து அமீரகத்தில் தங்க அனுமதி க்கும் வருகை விசாவை வழங்கினர். 
அமீரக அரசு புதிதாக அனுமதித்த திட்டத்தின் கீழ் விசா பெற்ற முதல் இந்தியர் இவர் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த தகவலை குடியுரிமைத் துறை அதிகாரிகள் தங்களது சமூக வலை தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

இந்த புதிய கொள்கையானது ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியா ஆகிய இரண்டு நாடுகளுக்கு இடையிலான உறவில் ஒரு புதிய அத்தியா யத்தை ஏற்படுத்தும் என எதிர் பார்க்கப் படுகிறது. 

இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையில் பொருளாதாரம், அரசியல் மற்றும் வர்த்தகத்தில் மேலும் முன்னேற்றம் ஏற்படும்.
புதிய விசா கொள்கையின் கீழ் விசா பெற்ற முதல் இந்தியருக்கு துபாய் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. 

அவரின் புகைப் படத்தை துபாய் வெளியுறவு அமைச்சகம் டுவிட்டரில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.
Tags: