பெண்கள் உஷார் - வீடு வீடாக வரும் அருள் வாக்கு சாமி !

வீடுவீடாக போய் அருள்வாக்கு சொல்லி பெண் களையும் அவர்களின் தாலியையும் அபகரிக் கும் ஒரு சாமியாரை மடக்கி பிடித்து ‘கவனித்த’ போது அவன் கக்கிய உண்மைகள் அவ்வளவு பகீர் ரகம்.

பெண்கள் உஷார் -  வீடு வீடாக வரும் அருள் வாக்கு சாமி !
அவனை போலவே இருபது பேர் ஏற்காடு மலை கிராமங் களில் இருந்து மொத்தமாக கிளம்பி வந்துள்ளார் களாம். இவர்களின் இலக்கு தனியாக இருக்கும் பெண்கள்.

ஒரே ஒரு வார்த்தை பெண்கள் பேசினால் போதும் அவர்கள் குடும்ப சூழ்நிலை மொத்த மாக எங்களுக்கு தெரிந்து போகும். அதன் பின் தான் தோஷம் அது என்று ஆரம்பிப்போம்.
கணவன் உயிருக்கு கண்டம் என்றாலே பெண்கள் பயந்து விடுவார்கள் காளி கோவிலுக்கு பரிகாரம் பண்ண வேண்டும் என்று கூறி பத்தாயிரம் ரூபாய் கேட்போம். 

ஆனால் ஐந்தா யிரமாவது கறந்து விடுவோம் .மீண்டும் மீண்டும் ஒரே வீட்டிற்க்கு சென்று மாற்று காரணங்கள் கூறி முடிந்த வரை பயம் காட்டி கறந்து விடுவோம் .

சில இடங்களில் மிரட்டி பெண் களையும் தொடுவோம் என்று கூற ஆடிப் போய் விட்டதாம் போலீஸ். 

நீங்களும் உஷாராக இருங்கள்
Tags:
Privacy and cookie settings