ஆப்பிரிக்க ஹைனாக்கள் பற்றி தெரியுமா?

நள்ளிரவு நேரம். ஊர் அடங்குகிறது. ஊரைச் சுற்றியிருக்கும் காடுகளி லிருந்து பதுங்கிப் பதுங்கி ஒவ்வொன்றாக மெதுவாக வெளியேற ஆரம்பிக் கின்றன.
ஆப்பிரிக்க ஹைனாக்கள் பற்றி தெரியுமா?
ஹைனாக்கள் என்று சொல்லப்படும் கழுதைப் புலிகள். மிரட்டும் கண்கள், கொடூரமான பற்கள், ஆக்ரோஷமான முகம் என இருந்தாலும், வழக்கமான கழுதைப் புலிகளிடம் இருக்கும் ஒரு வேட்கை, 

கம்பீரம் இந்த ஹைனாக் களிடத்தில் இல்லை. காட்டில் வாழ்ந்தாலும், காட்டு வாழ்க்கையின் இயல்புகளை அவை இழந்திருந்தன.

ஆப்பிரிக்கா விலுள்ள எத்தியோப்பி யாவின் ஹாரார் நகரத்தின் கிழக்கி லிருந்து ஒரு ஹைனாக் கூட்டம் ஊருக்குள் புகுகிறது. 

அதே போல வடக்கிலிருந்தும். கூர்மையான பற்களுக் கிடையிலிருந்து நீளமான நாக்கு தொங்கிக் கொண்டிருக்கிறது. 
மஞ்சள் உடையணிந்த அந்த நபர், கையில் ஒரு பாத்திர த்துடன் வருகிறார். அவரைத் தொடர்ந்து, சில வெள்ளை யர்கள் பெரும் பரவச த்தோடு வருகி றார்கள். 

அந்த பச்சை மாமிசத்தை அவர் ஹைனாக் களுக்குத் தூக்கி எறிகிறார். வெள்ளை யர்கள் பணம் கொடுத்து அதைப் படமெடுத்துக் கொள்கிறார்கள். 

ஒரு கட்டத்தில், அந்த மஞ்சள் சட்டைக் காரன் மாமிசத்தைத் தன் வாயில் வைத்துக் கடித்த படியே, ஹைனாக் களிடம் செல்கிறான். அவன் வாயிலி ருக்கும் மாமிச த்தைத் தாவிக் குதித்து, கவ்வி இழுத்து உண்கிறது ஹைனா. 

சுற்றியிருப் பவர்கள் கைதட்டிக் கொக்கரிக் கிறார்கள். இந்தச் சம்பவம் சிலருக்கு பயமாக இருக்கலாம், சுவாரஸ்ய மாக இருக்கலாம்,. சிரிப்பாக இருக்கலாம்.
ஆப்பிரிக்க ஹைனாக்கள் பற்றி தெரியுமா?
ஆனால், எல்லா வற்றுக்கும் மேலாக இது ரொம்பவே சிந்திக்க வேண்டிய, வருந்தவேண்டிய விஷய மாகவே இருக்கிறது. காரணம், இது இயற்கையின் விதி மீறல்.

பொதுவாக, ஹைனாக்கள் என்பது பிற மிருகங்களால் வேட்டை யாடப்பட்ட உயிரினங்களை உண்ணும் துப்புறவாளர்கள் (Scavengers) என்றே பெரும்பாலும் நம்பப்படுகிறது. 

ஆனால், ஹைனாக்கள் சிறந்த வேட்டைக் காரர்களும் கூட. தங்கள் உணவில் கிட்டத்தட்ட 75 சதவிகிதம் அவை சுயமாக வேட்டை யாடுகின்றன. 60 கி.மீ வேகத்தில் ஓடும் திறன் பெற்றவை. 
வேட்டையாடு வதற்கான மிக நுட்பமான வியூகங் களை அமைத்து, வேட்டை மிருகத்தின் ரத்த நாளங் களைக் கடித்துக் கொன்று இரையாக்கும் பழக்கம் கொண்டவை. 

ஆண்களை விட, பெண் ஹைனாக்கள் வலிமை பொருந்தியவை. அதன் ஊளைச் சத்தம் 5 கி.மீ தூரம் கேட்கும். ஆனால், ஹாரார் பகுதியிலிருக்கும் ஹைனாக் களிடம் இந்த இயல்புகள் மாறு பட்டிருக் கின்றன. 

இரைக்காக வேட்டையாடும் நோக்கம் தொலைந்து, இறைச்சி க்காகக் கையேந்தும் நிலைக்கு அவைகள் தள்ளப் பட்டிருக் கின்றன. 
ஆப்பிரிக்க ஹைனாக்கள் பற்றி தெரியுமா?
ஹாரார் பகுதி காடுகளில் 500 ஆண்டு களுக்கும் மேலாக ஹைனாக்கள் வாழ்ந்து வருகின்றன. 

அவை, ஒருபோதும் நகருக்குள் நுழைந்த தில்லை. இந்தத் தலை முறையில் மக்கள் தொகை அதிகரிக்க, நகரம் விரிவடைய, காடுகள் அழிக்கப்பட அவ்வப் போது நகருக்குள் வலம் வர ஆரம் பித்தன ஹைனாக்கள். 

1960-களில் ஹாரார் நகர விவசாயி ஒருவர், தன் பொருட் களை அவைகள் வேட்டை யாடாமல் இருக்க வேண்டும் என்ற நோக்கில், மாமிச த்தைக் கொடுக்க ஆரம்பித்தார். 
குர்தாவுக்குள் பாம்பு சென்றது கூட தெரியாமல் தூங்கிய நோயாளி !
அவரைத் தொடர்ந்து, அவரின் பிள்ளைகள். கொஞ்ச காலத்தில் அது ஊர் முழுக்கப் பரவியது. இந்தப் பழக்கம், வேறு சில மூட நம்பிக்கை களுக்கு வித்திட்டது.

வருடத் துக்கு ஒரு முறை கொண்டா டப்படும் "அஷுரா" என்ற பண்டிகை நாளில், ஹைனாக் களுக்கு வெண்ணெய் கலந்து தயாரிக்கப் பட்ட கஞ்சியைப் படைப் பார்கள் உள்ளூர் மக்கள். 

ஹைனாக் கூட்டத் தலைவி முதலில் வந்து, பாதியள வுக்கேனும் அதைக் குடித்தால், அந்த வருடம் ஹாரார் மக்களுக்கு செழிப்பாக இருக்கும் என்று நம்புகி றார்கள். மேலும், ஹைனாக்கள் 'ஊ...வூ...ப்ப்ப்' என்று ஊளை யிடும். 

இதில் "ஊ...வூ..." எனும் போது கண்ணு க்குத் தெரியாத பிசாசுகளை அவை கொல்வதா கவும், "ப்ப்ப்..." எனும் ஒலியின் போது 

அந்தப் பிசாசுகளை ஹைனாக்கள் தங்கள் வயிற்று க்குள் கொண்டு போகின்றன என்றும் நம்பு கிறார்கள். 
ஆப்பிரிக்க ஹைனாக்கள் பற்றி தெரியுமா?
இந்த மூட நம்பிக் கைகள், ஹாராரில் ஒரு பெரும் வணிக த்தையும் ஏற்படுத்தி யிருக்கிறது. 

பல வெளிநாட்டவர் ஹைனாக் களை அருகிலி ருந்து போட்டோக்கள் எடுப்பது, அவை களுக்கு உணவளிப்பது போன்ற விஷயங் களுக்காக ஹாராருக்கு வருகி றார்கள். 

அவர்களுக் கான தங்கும் விடுதிகள், உணவ கங்கள், அவர்களை ஹைனாக் களிடம் அழைத்துச் செல்லும் கைடுகள் என ஹாராரில் ஹைனாவைச் சுற்றிய வணிகம் வளர்ந்துள்ளது.
கழுத்தெலும்பு அழற்சிக்கான அறி குறிகள் !
மண்ணில் ஊறும் புழுவில் தொடங்கி, வானில் பறக்கும் கழுகு வரை அவைகளுக் கேற்ற இயல்பு களை இயற்கை வடிவமைத் திருக்கிறது. 

அதை மீறும் இடங்களி லெல்லாம் இயற்கையின் இடர்பாடுகள் அதிகரிக்கவே செய்யும். 

ஹாராரின் ஹைனாக்கள் செய்தியையும், ஹாராரில் கடந்த 15 ஆண்டுகளாக நிலவி வரும் கடுமை யான தண்ணீர்ப் பஞ்சத்தையும், 

நகரில் ஏற்பட்டி ருக்கும் கடுமையான கூட்ட நெரிசலையும் 'கேயாஸ் தியரி' இல்லாமலேயே கூட இணைத்துப் பார்க்க முடியும்.

ஏனோ ஹாராரின் ஹைனாக் களைப் பற்றி எழுதும்போது, நம் ஊட்டி, கொடைக்கானல், ஒகனேக்கல் போன்ற பகுதிகளி லிருக்கும் குரங்குகள் என் ஞாபகத்துக்கு வருகின்றன. 

குரங்குகள் மரம் ஏறும், கிளைகள் தாவும், பழம் சாப்பிடும், காட்டுக்குள் இருக்கும் என்பதைச் சொன்னால், இந்தத் தலைமுறைக் குழந்தைகள் சிரிக்கிறார்கள். 
ஆப்பிரிக்க ஹைனாக்கள் பற்றி தெரியுமா?
குரங்குகள் ரோட்டில் உட்காரும், சிப்ஸ் சாப்பிடும், பெப்ஸி குடிக்கும், பிச்சை எடுக்கும் என்பதை உறுதி யாக நம்புகி றார்கள் 

அவர்கள். அல்லது நம்ப வைக்கப் பட்டிருக் கிறார்கள். குரங்குகளும் தங்கள் பழைய வாழ்வை மறந்து, தலைமுறைகள் கடந்து விட்டன.
கல்லீரலில் கொழுப்பு படிதல் !
ஹாரார் ஹைனாக்களின் நிலை, இந்தியக் குரங்கு களின் நிலை, தலை விரித்தாடும் தண்ணீர்ப் பஞ்சம், தலை உடைக்கும் வெயிலின் தாக்கம் போன்ற நிகழ்வுகளையும், 

உலக வெப்ப மயமாதல், இயற்கைப் பேரிடர்கள் போன்ற அழிவுகளையும் நேர்க்கோட்டில் வைத்துப் பார்க்க முடியும்.
Tags:
Privacy and cookie settings