பேரிடர்களில் கைகொடுக்கும் ஹாம் ரேடியோ !

'மான் கி பாத்' எனும் வானொலி நிகழ்ச்சியைக் கேட்டிருக் கிருக்கிறீர் களா? ஒவ்வொரு மாதமும் நம் இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி, வானொலி மூலம் நாட்டு மக்களிடம் பேசும் நிகழ்ச்சி அது.
ஹாம் ரேடியோதொலைக்காட்சி, இணையம், ஸ்மார்ட்போன் என பற்பல தொழில் நுட்பங்கள் வளர்ந்து விட்டன. ஆனாலும், இன்னும் ஏன் பிரதமரின் உரை பழைய தொழில் நுட்பமான வானொலி மூலமாக ஒலிபரப் பாகிறது என யோசித்த துண்டா?

காரணம் இதுதான். இன்றளவும் கூட வானொலி அளவுக்கு உலகம் முழுக்க பரந்து விரிந்திருக்கும் ஊடகம் என எதுவுமில்லை. இந்தியாவில் 99% அளவு மக்களைச் சென்றடையும் ஒரே ஊடகம் வானொலி தான். 
இணையம் இல்லாத இடங்கள், மின்வசதி கிடைக்காத இடங்கள், அலைபேசித் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கும் பகுதிகள், இந்தியாவின் வடகிழக்கு பகுதிகள் உட்பட அனைத்துத் தரப்பு மக்களுக்கும் ஊடகமாக இருப்பது வானொலி மட்டுமே.

இது தான் இதன் முக்கியத்து வத்துக்குக் காரணம். இந்த வானொலி அலை வரிசைகளை அடியொற்றித் தான். அடுத்தடுத்தக் கட்ட தகவல் தொழில் நுட்ப முன்னேற்றங்கள் அனைத்துமே சாத்தியமாகிக் கொண்டிரு க்கின்றன என்பதும் உண்மை!

சரி.., இப்போது வானொலிக்கு என்ன வந்ததது?


தொலைபேசி, இணைய வழி செய்திப் பரிமாற்றங்கள், தொலைக் காட்சிகள் என செய்திகளை பகிர்ந்து கொள்ளவும், தெரிந்து கொள்ளவும் பல நவீன ஊடகங்கள் நம்மிடம் இருக்கின்றன. 

ஆனால், கடந்த 2015-ம் ஆண்டு சென்னை உள்ளிட்ட தமிழகப் பகுதிகளைச் சீர்குலைத்த வெள்ளத்தின் போதும், சமீபத்தில் சென்னை, காஞ்சிபுரம்

அமெச்சூர் ரேடியோமற்றும் திருவள்ளூர் மாவட்டங் களை குலைத்துப் போட்ட வர்தா புயலின் போதும்... எத்தனை ஊடகங்கள் நமக்கு முழுமையாக கைகொடுத்தன? மின்வசதித் துண்டிக்கப் பட்டதால், தொலைக் காட்சிகள் இயங்க வில்லை;

மின்சார மில்லாமல் அலைபேசிச் சேவைக் கோபுரங்கள் இயங் காததால் அலைபேசிச் சேவைகள் முடங்கின;
40 வயதிலும் சிக்கென்று ஆரோக்கியமாக இருப்பது எப்படி?
பேட்டரி, இன்வெர்ட்டர் என்றெல்லாம் கொஞ்சநஞ்ச மின்சாரம் வைத்தி ருந்தாலும் டி.வி பார்க்கவோ... அலை பேசிகளைப் பயன் படுத்தவோ முடிய வில்லை. 

இணைய (இன்டர்நெட்) சேவையும் முடங்கிப் போனது... சிற்சில இடங்களில் அது கிடைத்தாலும் வேகம் பழைய நிலையை எட்ட வில்லை.

இத்தகைய சூழலில், உங்களின் பக்கத்து வீடு, எதிர்த்த வீடு என்று யாராவது ஒன்றிரண்டு பேர் சிறிய டிரான்ஸ்சிஸ்டர் ரேடியோவை வைத்துக் கொண்டு செய்திகளைக் கேட்டுக் கேட்டு உங்களுக்குச் சொல்லி யிருக்கக் கூடும். 

இது தான் ரேடியோவின் சக்தி. குறைந்த பட்ச மின்சாரம் அல்லது பேட்டரி இருந்தாலே ரேடியோ கைகொடுக்கும். 2004-ம் ஆண்டு தமிழகத்தைத் தாக்கிய சுனாமி, உத்தரகாண்ட் பெருவெள்ளம், குஜராத் பூகம்பம், சென்னை பெருவெள்ளம்,

வர்தா புயல் என பல்வேறு பேரிடர்களிலும் தகவல் தொடர்புக்கு உதவியவை ரேடியோக்கள் தான். 

ஆளாளுக்குக் கையில் வைத்திருக்கும் ரேடியோவைப் போலவே, ஹாம் ரேடியோக்கள் அல்லது அமெச்சூர் ரேடியோக்கள் எனப்படும் ரேடியோக்கள்... பலருக்கும் கைகொடுத்தது. 

ரேடியோ என்பது ஒரு வழிப்பாதை. அதைக் கேட்கத் தான் முடியும். ஆனால், 'ஹாம் ரேடியோ' என்பது இரு வழிப் பாதையாக பயன்படும். இதைத் தனிநபர்கள் தான் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
வெயில் காலத்தில் மாம்பழம் ஏன் சாப்பிடணும் தெரியுமா?
பேரிடர் காலங்களில் எத்தனை நவீன தொலைத் தொடர்பு வசதிகள் இருந்தாலும் கூட, அரசு இயந்திரமே அழைப்பது இந்த ஹாம் ரேடியோக்கள் வைத்தி ருக்கும் நபர்களைத் தான். 

அந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த தொழில் நுட்பம் பற்றி நம்மிடையே போதிய அளவு விழிப்பு உணர்வு கிடையாது என்பதே உண்மை. 

ஆனால், அடிக்கடி பேரிடர்களுக்கு ஆளாகும் சென்னை போன்ற நகரங்களில் இவற்றின் தேவை மிகமிக முக்கியம். 

அந்த வகையில், இந்த ஹாம் ரேடியோக்கள் குறித்து விரிவான விளக்கம் தருகிறார் தங்க. ஜெய்சக்திவேல். இவர், சென்னைப் பல்கலைக் கழகத்தின் ஊடகவியல் மற்றும் தொலைத் தொடர்புத் துறை உதவிப் பேராசிரியர். 


இவர் ஹாம் ரேடியோவைப் பயன் படுத்துவதோடு, நீண்ட காலமாக இதைப் பற்றிய ஆராய்ச்சி யில் இருப்பவர்.

ஹாம் ரேடியோக்கள் நமக்கு ஏன் தேவை?

"இணையம், தொலைபேசி போன்ற தகவல் தொடர்பு சாதனங்கள் பேரிடர் காலங்களில் நம்மை கை விட்டு விடும் போது, பேரிடர்கால தொடர்பு சாதனங்கள் தான் (Disaster Communication) கைகொடுக்கும். 
எனவே, இது போன்ற தொழில் நுட்பங்கள் மீதுதான் நாம் கவனம் செலுத்த வேண்டும். இது தான் 'ஹாம் ரேடியோ' எனப்படும் அமெச்சூர் ரேடியோ. ஹாம் ரேடியோ பயன் படுத்து பவர்கள் ஹாம்ஸ் என அழைக்கப் படுவார்கள்.

அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் இவை வெகுவாக பயன் படுத்தப் படுகின்றன. அங்கு பேரிடர் காலங்களில் இவை பெரிதும் உதவி கரமாக இருக்கின்றன.

இந்த ஹாம் ரேடியோக்கள் பேரிடர் காலங்கள் மட்டுமின்றி மற்ற நேரங்களில் சிறந்த பொழுது போக்கு சாதனமாக, அறிவார்ந்த விஷயங் களுக்கா கவும் பயன் படுகிறது.

இந்த ஹாம் ரேடியோக்கள் மூலம், நாமே செய்தியை ஒலி பரப்பலாம். இன்னொரு ஹாம் ரேடியோவுடன் தொடர்பு கொள்ள முடியும். நிறைய நண்பர்களை பெற முடியும். 
பேரிடர் காலங்களிலும் தடையின்றி பேச முடியும். மிகக் குறைந்த மின்சாரத்தை வைத்துக் கொண்டே உலகின் எந்த மூலைக்கும் செய்திகளை அனுப்ப முடியும். இது தான் ஹாம் ரேடியோவின் சிறப்பம்சமே.
Tags:
Privacy and cookie settings