ஹாம் ரேடியோக்களை அனைவரும் வைத்துக் கொள்ளலாமா?

12 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தாரளமாக ஹாம் ரேடியோக் களை வைத்துக் கொள்ளலாம். ஆனால், இதற்கு அரசின் அனுமதி பெற வேண்டும்.
ஹாம் ரேடியோக்களை அனைவரும் வைத்துக் கொள்ளலாமா?

இதற்கு மத்திய அரசின் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சகம் அனுமதி அளிக்க வேண்டும். அரசின் அனுமதி பெற்றபின்னரே நாம் பயன்படுத்த முடியும். 
அதே சமயம் இதனை வணிக ரீதியாக, தவறான நோக்கங் களுக்காக நாம் பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத் தக்கது.

நமது அலைபேசி எண் போலவே, ஹாம் ரேடியோவில் உங்களுக்கென ஒரு பிரத்யேக குறியீடு ஒதுக்கப்படும். இதற்குக் கால் சைன் என்று பெயர். இதன் மூலமே ஒருவரை நாம் அடையாளம் காண முடியும். இதனையும் அரசு மூலமே பெற முடியும்.

அரசின் அனுமதி பெற என்ன செய்ய வேண்டும்?

இதற்கான உரிமம் பெறுவதற்கான தேர்வை, மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சக த்தின் கீழ் இயங்கும் வயர்லஸ் பிளானிங் மற்றும் கோ ஆர்டினேஷன் அமைப்பானது நாடுமுழுக்க நடத்துகிறது. 
சென்னையில் இதற்கான மையம் பெருங்குடியில் அமைந் துள்ளது. இந்தத் தேர்வில் தகவல் தொடர்பு, தொலைத் தொடர்பு தொழில் நுட்பங்கள் குறித்த அடிப்படை கேள்விகள் கேட்கப்படும்.

மேலும் ஹாம் ரேடியோவில் பயன் படுத்தப்படும் மோர்ஸ் கோடுகள் குறித்த கேள்விகளும் கேட்கப்படும். ஒலியின் எழுத்துரு தான் இந்த மோர்ஸ் (morse) கோட் எனலாம். 

எனவே, இந்த அடிப்படை விஷயங்கள் பற்றி நாம் முன்னரே அறிந்து கொள்ள வேண்டியதும், படிக்க வேண்டியதும் அவசியம். இதில் இரண்டு வகை லைசென்ஸ்கள் இருக்கின்றன.
இந்த மாம்பழம் சாப்பிடுவதற்கு முன்னாடி இத தெரிஞ்சிக்கிட்டு சாப்பிடுங்க !
அவை குறிப்பிட்ட அலை வரிசையில் மட்டுமே பேசக் கூடியது மற்றும் எல்லா அலை வரிசைகளிலும் பேசக் கூடியது என இரண்டு வகைப்படும். இரண்டுக் குமே தேர்வு எழுத வேண்டும்.

இதற்கென பாடத்திட்டங்கள் ஏதேனும் இருக்கிறதா?
ஹாம் ரேடியோ

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் அமெச்சூர் ரேடியோ என்னும் அமைப்பானது ஐதராபாத்தில் இயங்குகிறது. இதன் இணைய தளத்தில் தேர்வு குறித்த தகவல்கள், பாடத் திட்டங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. 
மேலும் தேர்வுக்கான பயிற்சிகளை பெற கொடுக்க ஹாம் ரேடியோ கிளப்கள் இயங்குகின்றன. அவற்றின் மூலமாக ஹாம் குறித்து அறிந்து கொள்ளலாம்.

அத்துடன் ஏராளாமான இணைய தளங்கள், புத்தகங்கள் ஆகிய வையும் ஹாம் ரேடியோக்கள் குறித்து கிடைக் கின்றன. 
அத்துடன் தமிழ்நாட்டில் பல இடங்களிலும் நீண்ட காலங் களாக ஹாம் ரேடியோக்கள் பயன் படுத்துபவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மூலமும் இதனைப் பற்றி முழுதாக தெரிந்து கொள்ளலாம்.
Tags: