கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய முதல் உதவி சிகிச்சை !

விபத்து மற்றும் அவசர காலங்களில் முதல் உதவி சிகிச்சை அளிக்கும் முறைகள் பற்றிய விளக்கங்கள்.
நோய்க்குறி அறிதல்: 

1. விபத்து நடந்த இடத்தில் முதல் உதவியாளர் இருக்கிறார் என்று வைத்துக் கொண்டால் விபத்து எப்படி நிகழ்ந்தது என்ற விபரங்களை பாதிக்கப்பட்டவரோ அல்லது அதைப் பார்த்தவர்களோ சொல்லுவதாகும். 

விபத்து நிகழ்ந்த இடத்தில் உள்ள இரண்டு சக்கர வாகனம், உடைந்த தூண்கள், இடிபாடுகள் போன்றவைகளும் நடந்த சம்பவத்தை நமக்கு உணர்த்தும். 
2. அறிகுறிகள்: வலி, குளிரினால் நடுக்கம், மயக்கம் வரும் நிலை போன்ற உணர்ச்சிகளை பாதிக்கப்பட்டவரே முதல் உதவியாளரிடம் சொல்லுதல். வலி எடுக்குமிடம் பெரும்பாலும் பாதிப்புகளை வெளிப்படுத்தும். 

3. அடையாளங்கள்: முதல் உதவியாளரே கண்டும், உணர்ந்தும் அறிதல்- உதாரணமாக வெளுத்துப் போதல், வீக்கம், ரத்த ஒழுக்கு, முறிந்த எலும்புகள் உருமாறிப் போதல், சில்லிட்டுப் போதல் போன்றவைகள்.

பாதிக்கப்பட்டவரை சோதிப்பது எப்படி? 

நோயாளியை சோதிக்கும் போது அவர் சுயநினைவோடு இருக்கின்றாரா? இல்லையா? என்பதை கண்டறிந்து, உயிரை பாதிக்கக்கூடிய பாதிப்புகள் இருக்கின்றனவா என்றும் கண்டுபிடிக்க வேண்டும். 

சோதிக்கும் போது: 
1. தேவைக்கேற்ப அசைத்துப் பார்த்து- அதிக அசைவினால் ஏற்கனவே ஏற்பட்டுள்ள காயங்களுக்கு குந்தகம் விளைவிக்கக் கூடாது. 
2. உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை முறையாக சோதித்துப் பார்க்க வேண்டும். 3. உங்களின் புலன்களான – பார்த்தல், உணருதல், கேட்டல், முகருதல் போன்றவை களை முழுமையாக உபயோகிக்க வேண்டும்.

4. சோதனையின் போது அடிப்பட்ட பாகத்தை அடிபடாத பாகத்தோடு ஒப்பிட்டு- ஏற்பட்டுள்ள வீக்கம், அசாதாரண மாற்றங்களை கண்டு முதலுதவி செய்ய வேண்டும்.

குறிப்பு: 
கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய முதல் உதவி சிகிச்சை !
சோதனையின் போது சுவாசம் “கள கள” என்ற சத்தத்துடனோ, சிரமமாகவோ காணப்பட்டால் உடனடியாக மீட்பு நிலையில் படுக்க வைக்க வேண்டும். 

சிகிச்சை: சோதனையின் போது கண்டுபிடித்த வைகளுக்கு உரித்தான சிகிச்சைகளை கிரமமாகச் செய்யவும். 

அவருக்கு ஆதரவும் அன்பும் தரக்கூடிய வார்த்தைகளால் பேச வேண்டும். பொறுமை யாகவும், திறமை யாகவும் செயல்பட வேண்டும். 
ஏதாவது சொன்னாலோ, கேட்டுக் கொண்டாலோ, அவைகளை உடனடியாக கவனிக்க வேண்டும். அடிக்கடி கேள்விகள் கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது. 

இது அவருக்கு தொல்லையாக இருப்பதோடு அல்லாமல், முதல் உதவியாளரின் திறமையை சந்தேகிக்க நேரிடும். சிகிச்சை அளித்த பின் நிலைமைக்கேற்ப அவரை கிடத்த வேண்டும். 

அதோடு உதவி வரும் வரை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ள வேண்டும். முதலுதவியாளர் தன் குறிக்கோள்களை மறந்து விடக்கூடாது. 

1. உயிரைக் காக்க: 

1. காற்றும் செல்லும் பாதையில், எந்த நிலையிலும் அடைப்பு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 
2. சுவாசமும், இரத்த ஓட்டமும் இல்லையெனில் உடனடியாக செயற்கை சுவாசமும், வெளிப்புறமாக இருந்து மார்பில் இழுத்தி இருதயத்தை ஊக்கு வித்தலும் தொடர்ந்து மருத்துவ வசதி கிடைக்கும் வரை செய்ய வேண்டும். 

3. வெளிப்புற இரத்த ஒழுக்கை நிறுத்த வேண்டும். 

2. நோயாளியின் நிலை மோசமாகாமல் இருக்க: 
1. காயங்களு க்கு கட்டு போட வேண்டும். 

2. பெரிய காயங்களு க்கும்- எலும்பு முறிவுகளுக்கும் பாதிக்காம லிருக்க ஆதரவும் கட்டும் போட வேண்டும். 

3. பாதிப்புகளின் சிகிச்சைக்கு ஏற்றவாறு அவரை வசதியாக இருக்கையில் வைக்க வேண்டும். 
3.நோய் நீங்குதலை விரைவுபடுத்த: 
நோய் நீங்குதலை விரைவுபடுத்த:
1. என்ன நடக்குமோ என்ற அச்சம் நீங்க அவர்களுக்கு அன்பும், ஆதரவும் நிறைந்த வார்த்தைகளால் பேசி நம்பிக்கை உண்டாக்க வேண்டும்.

2. வலியிலிருந்தும் மற்ற உபாதைகளிலிருந்தும் மீட்க தொடர்ந்து செயல்பட வேண்டும்.
3. பொறுமையோடும், நிதானமாகவும் அவரை கையாள வேண்டும். 

4. குளிர்ந்து போகாமலும், ஈரமாக ஆகாமலும் நோயாளியை பார்த்து கொள்ள வேண்டும். 
Tags:
Privacy and cookie settings