இருதயத்தை அழுத்தி இரத்த ஓட்டத்தை உண்டாக்க - முதல் உதவி சிகிச்சை !

0
1. மார்பில் தெரியும் விலா எழும்பினை நடு விரலால் உணர்ந்து அது மார்பு எலும்போடு இணையும் இடத்தை அறியவும். அங்கிருந்து இரண்டு விரல் கனத்திற்கு அப்பால் உள்ளங்கையின் அடிப்பாகத்தை மார்பு எலும்பின் மீது வை.

முதல் உதவி சிகிச்சை !
2. மற்ற உள்ளங்கையின் அடிப்பாகத்தை முன் வைத்த கையின் மீது வைத்து, விரல்களை கோர்த்துப் பிடித்துக் கொள். முட்டி மீது நின்று, 

முழங்கையை மடக்காமல் நேராக வைத்து மார்பு எலும்பின் மீது 4 அல்லது 5 செ.மீ (1-2′) ஆழம் முதுகெலும்பை நோக்கி (கீழ்) செல்லும்படி அழுத்தவும். 30 முறை அழுத்தவும் (ஒரு நிமிடத்திற்கு 100 முறை). 

3. பிறகு 2 முறை ஊதவும். மீண்டும் 30 முறை அழுத்தவும். இம்மாதிரி 5 முறை செய்யவும். 
4. 6-வது முறை தொடங்கும் முன் 10 வினாடிக்குள் மீண்டும் கழுத்துத் தமனியை அழுத்தி ரத்த ஓட்டமும் பிறகு தாடையை மூச்சு பாதிக்கப் பட்டவரின் முகத்திற்கு அருகில் கொண்டு சென்று சுவாசமும் உள்ளதா என்று கவனிக்கவும். 
இருதயத்தை அழுத்தி இரத்த ஓட்டத்தை உண்டாக்க
5. இல்லை யெனில் தொடர்ந்து செயற்கை சுவாசமும், மார்பு எலும்பை அழுத்தி இரத்த ஓட்டத்தையும் உண்டாக்க வேண்டும். மருத்துவ ஊர்தியில் அழைத்துச் செல்லும் போது தொடர்ந்து செயல்படவும்.

6. விலா எலும்புகள் மீது அல்லது மார்பெலும்பின் அடிபாக நுனியில் அழுத்தம் செய்யாமல் எச்சரிக்கையோடு செயல்படவும். சுவாசம் மட்டும் தடைபட்டால் ஒரு நிமிடத்திற்கு 12 முறை வாயின் மீது வாய் வைத்து ஊதவும். 

நன்றாக சுவாசிக்க ஆரம்பித்த வுடன் அல்லது ரத்த ஓட்டமும் சீரடைந்த பின், உணர்வற்று இருந்தால் அவரை மீட்பு நிலையில் படுக்க வைத்து மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். 

ரத்த ஓட்டம் ஆரம்பித்தால்: 

ரத்த ஓட்டம் ஆரம்பித்தால்:
1. மறுபடியும் உடல் நிறம் பழைய நிலைக்கு வரும். 

2.கண்மணிகள் சுருக்க மடைந்து பழைய நிலையை அடையும். 

3. கழுத்திலுள்ள தமனிகளில் நாடித் துடிப்பையும் காணலாம். அனுப்புதல் மருத்துவரிடமோ, மருத்துவ மனைக்கோ அனுப்பும் முன் பாதிக்கப்பட்டவரிடம் கண்டறிந்தவைகளை எழுத்தில் குறிப்பிட வேண்டும்.
எவ்வளவு விரைவில் பாதிக்கப் பட்டவர் மருத்து சிகிச்சைக்கு அனுப்பப் படுகிறாரோ அது அவருக்கு நல்லது. உறவினர் களுக்கு சாதுரியமாக செய்தி அனுப்ப வேண்டும்.

அதோடு அவர் எங்கு அழைத்துச் செல்லப் படுகிறார் என்பதனையும் தெரிவிக்க வேண்டும். கூட்டத்தில் ஒருவரிடம் செய்தி சொல்லி அனுப்பலாம். இது விசயமாக காவலர் உதவியை நாடுவது நல்லது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)