ஜெ, சசி, இளவரசி, சுதாகரன் சொத்துக்களை விற்று ரூ.140 கோடி அபராதம் !

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோரி டமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை விற்று அவர்களுக்கு விதிக்கப் பட்ட மொத்தம் ரூ. 140 கோடி அபராதத் தொகையை கோர்ட் வசூலிக்க வுள்ளது. 
ஜெ, சசி, இளவரசி, சுதாகரன் சொத்துக்களை விற்று ரூ.140 கோடி அபராதம் !
வருமான த்திற்கு அதிகமாக சொத்துக்கள் வாங்கி குவித்த வழக்கில் பெங்களூர் தனி நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா கடந்த 2014 செப்டம்பர் 27ம் தேதி தீர்ப்ப ளித்தார். 

ஜெயலலிதா, சசிகலா, இளவரசன், சுதாகரன் ஆகிய நால்வரும் குற்றவா ளிகள் என்று கூறிய குன்ஹா அனைவருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார்.

மேலும் ஜெயலலிதா வுக்கு ரூ. 100 கோடியும், மற்ற மூவருக்கும் தலா ரூ.10 கோடியும் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இந்தத் தீர்ப்பைத்தான் தற்போது உச்சநீதி மன்றம் உறுதி செய் துள்ளது. 

இந்த வழக்கில் தற்போது ஜெயலலிதா இறந்து விட்டதால் அவருக்கான சிறைத் தண்டனையை மட்டும் விட்டு விட்டு அபராதத் தொகையை உச்சநீதி மன்றம் உறுதி செய்துள்ளது. 
இதனால் அவருக்கு விதிக்கப் பட்ட ரூ. 100 கோடி அபராதமும் அமலுக்கு வருகிறது. மற்றவர்கள் தங்களுக்கான அபராதத் தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 1 ஆண்டு சிறைவாசம் அனுபவிக்க வேண்டும். 

தற்போது மொத்தம் உள்ள ரூ. 140 கோடி அபராதத் தையும் அவர்களி டமிருந்து ஏற்கனவே பறிமுதல் செய்யப் பட்டுள்ள சொத்து க்களை விற்று அதிலிருந்து நீதிமன்றம் வசூலிக்க வுள்ளது.
Tags: