போராட்டத்தின் ஹீரோவாக மாறிய போலீஸ் !

சென்னை மெரீனா கடற்கரையில் இன்று 4வது நாளாக ஜல்லிக்கட்டு அனுமதி கோரி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் லட்சக் கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தின் ஹீரோவாக மாறிய போலீஸ் !
ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு கைவிரித்ததை யடுத்து இன்று மேலும் சூடுபிடித்துள்ளது போராட்டக் களம்.

இந்நிலையில், தற்போது மெரீனா போராட்ட களத்தில், பாதுகாப்புக்காக அங்கிருந்த போலீஸ்காரர் ஒருவர் மீடியாக்களுக்கு திடீரென பேட்டி யளித்தார்.

அந்த பேட்டியில், எனது சொந்த ஊர் ராமநாதபுரம், விவசாயம் அழிந்ததால், பஞ்சம் பிழைக்க சென்னை வந்தோம். இதற்கு மேலும், பஞ்சம் பிழைக்க அமெரிக்காவிற்கா போகணும் என்று தெரிவித்தார்.
மேலும் உயர் அதிகாரிகளின் அழுத்தம் இருந்தாலும் எனக்கு பயமில்லை. இந்த போராட்டம் வெற்றி பெறும். 

அதனால், இதோடு நிறுத்தி விடாமல் மணல் திருட்டை ஒழிக்க போராடுவோம். பாரத் மாதாகி ஜே! என்று கோஷம் எழுப்பி சல்யூட் அடித்தார்.
Tags:
Privacy and cookie settings