ஆண் துணை இல்லாமலே முட்டையிடும் லியோனி !

ஆண் துணை யின்றியே முட்டை இட்ட சுறா மீன் ஒன்று ஆய்வாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி யுள்ளது.
ஆண் துணை இல்லாமலே முட்டையிடும் லியோனி !
அவுஸ்திரேலி யாவின் பண்ணை யொன்றில் வாழ்ந்து வரும் ‘ஸீப்ரா ஷார்க்’ எனப்படும் சுறா வகையைச் சார்ந்த பெண் சுறாவே கலவியில் ஈடுபடா மலேயே முட்டை இட்டுள்ளது.

‘லியோனி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் பெண் சுறா, ஆரம்பத்தில் மற்றொரு ஆண் சுறா ஒன்றுடனேயே வளர்க்கப் பட்டு வந்தது. 

அப்போது இவை இரண்டும் கலவியில் ஈடுபட்டு இனப்பெருக்கம் செய்து வந்தன. ஆனால், மூன்று வருடங்களுக்கு முன்பு இவை இரண்டும் பிரிக்கப்பட்டன. 

அன்று முதல் இந்தப் பெண் சுறா தனித்தே வாழ்ந்து வருகிறது.  இந்த நிலையில் தான் இந்தச் சுறா தற்போது முட்டைகளை இட்டிருக்கிறது.

ஏற்கனவே லியோனி ஈன்ற குஞ்சுகளில் பெண் குஞ்சு ஒன்றும் லியோனியுடன் சேர்த்து வளர்க்கப்பட்டு வந்தது. இதுவும் தனது தாயைப் போலவே கலவி யின்றி முட்டைகளை ஈன்றுள்ளது.
ஆரம்பம் முதலே தனிமைப் படுத்தப்படும் சில வகை உயிரினங்கள் கலவியில் ஈடுபடா மலேயே முட்டை யிடுவது உண்டு. என்றாலும், அது இயற்கையின் விதியாகவே அமைந் திருந்தது.

ஆனால் ஏற்கனவே தன் இனத்தைச் சார்ந்த மற்றொரு இணையுடன் சேர்ந்து இனப்பெருக்கம் செய்த பின், மூன்று வருடங்கள் தனித்திருந்து விட்டு 

மீண்டும் இனப்பெருக்கம் செய்திருப்பது இதுவே முதன் முறை என்று ஆய்வாளர்கள் தெரிவித் துள்ளனர்.
Tags: