ஜெயலலிதாவின் சிகிச்சைக்கு ஆன செலவு?

முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவ மனையில் செப்டம்பர் 22 ஆம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார். அது முதல் தொடர்ந்து அவரை பற்றிய பல்வேறு தகவல்கள் பரவின.
ஜெயலலிதாவின் சிகிச்சைக்கு ஆன செலவு?
அந்த தகவலை வதந்திகள் என்றனர். அவை எல்லாம் வதந்திகள் தானா என்பதற்கு இப்போது வரை விடை இல்லை. 

இந்நிலையில் ஜெயலலிதா அனுமதிக்கப் பட்டிருந்த அறை மற்றும் ஒரு நாள் வாடகை விபரங்கள் வெளி வந்துள்ளன. 

ஆபத்தான நிலையில் உள்ளவர் களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் MDCCU என்ற வார்டில் தான் ஜெயலலிதா அனுமதிக்கப் பட்டிருந்தார். அந்த வார்டில் ஒரு அறையின் ஒரு நாள் கட்டணம் 25 ஆயிரம் ரூபாய்.

ஒரு சிறப்பு மருத்துவர் நோயாளி ஒருவரை ஒரு முறை பரிசோதிக்க 2 ஆயிரம் கட்டணம். எத்தனை முறை பரிசோதிக் கிறாரோ அதற்கேற்ப கட்டணம் வசூலிக்கப்படும். 

வெளியில் இருந்து சிறப்பு மருத்துவர்கள் வந்தால் அதற்கேற்ப கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படும். 
ஜெயலலிதா 75 நாட்கள் அந்த அறையில் இருந்த நிலையில் மொத்தம் 18 லட்சத்து, 75 ஆயிரம் ரூபாய் அறை வாடகையாக வசூலிக்கப் பட்டதாக கூறப் படுகிறது. 

மொத்த மருத்துவ கட்டணம் 1 கோடி ரூபாயை தாண்டி இருக்கும் என்றும் தெரிவிக்கப் படுகிறது.
Tags: