ஹைட்ரஜனில் இயங்கும் டிரக் அறிமுகம் !

அதிசக்தி வாய்ந்த, அதிக தூரம் பயணிக்கும் ஹைட்ரஜனில் இயங்கும் புதிய டிரக் மாடலை அமெரிக்காவை சேர்ந்த நிகோலா நிறுவனம் அறிமுகம் செய்திருக் கிறது. 
புகையற்ற பூமியை உருவாக்கும் நோக்கில் தயாரிக்கப் பட்டிருக்கும் இந்த டிரக் குறித்த பல வியக்க வைக்கும் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
நிகோலா ஒன் என்ற பெயரில் இந்த ஹைட்ரஜனில் இயங்கும் டிரக் அறிமுகம் செய்யப் பட்டு இருக்கிறது. 

இதன் வடிவமைப்பே மிக பிரம்மாண்ட மாகவும், தனித்துவ மாகவும் இருக்கிறது. இந்த டிரக்கில் பல வசதிகள் இடம் பெற்று இருக்கின்றன. 

நிகோலா ஒன் டிரக்கில் பொருத்தப் பட்டிருக்கும் 320 kWh லித்தியம் அயான் பேட்டரியின் மூலமாக மின் மோட்டார்க ளுக்கு மின்சாரம் பெறப் படுகிறது. 

இதிலிருக்கும் மின் மோட்டார்கள் அதிகபட்சமாக 1,000 குதிரை சக்தி திறனை [986 பிஎச்பி] வழங்க வல்லது.
சுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய விஷயங்கள் !
இந்த டிரக்கின் சக்தி வாய்ந்த லித்தியம் அயான் பேட்டரியை எலக்ட்ரிக் கார்கள் போன்று ப்ளக்- இன் முறையில் சார்ஜ் ஏற்ற முடியும். 
அதே நேரத்தில், லித்தியம் அயான் பேட்டரிக்கு தேவை யான மின்சாரம் ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் மூலமாக பெறப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
பெட்ரோல் டேங்கில் தண்ணீர் புகுந்தால் என்ன தீர்வு !
ஒரு முறை ஹைட்ரஜன் ஃப்யூவல் செல்லை சார்ஜ் ஏற்றினால், குறைந்தது 1,300 கிமீ முதல் அதிகபட்சமாக 1,900 கிமீ தூரம் வரை பயணிக் குமாம்.

அதாவது, தற்போது பயன்பாட்டில் உள்ள டீசல் டிரக்குகளை விட இரு மடங்கு தூரம் பயணிக் கும் வல்லமை கொண்டதாக தெரிவிக்கப் பட்டு இருக்கிறது. 

மேலும், கழிவாக நீராவி மட்டுமே வெளியாகும். புகை இருக்காது என்பதால் சுற்றுச் சூழலுக்கும் மிக உன்னதமான மாடலாக தெரிவிக்கப் படுகிறது.
முதல் நாள் உணவை மறு நாள் சாப்பிடக் கூடாது ஏன்?
இந்த டிரக்கில் ஓட்டுனர்கள் ஓய்வுக்காக இரண்டு சொகுசான படுக்கைகள் கொடுக்கப் பட்டுள்ளன. 
அத்துடன், ஸ்மார்ட் டிவி, வைஃபை இன்டர்நெட் வசதி, 4ஜி இன்டர்நெட் வசதியுடன் மிக அசத்தலாக வருகிறது. 

மைக்ரோவேவ் அவன், குளிர் சாதனப் பெட்டியும் பொருத்தப் பட்டிருக் கிறது.

இந்த டிரக்கை குத்தகை அடிப்படை யில் விற்பனை செய்ய நிகோலா நிறுவனம் திட்ட மிட்டுள்ளது.

மேலும், டிரக்கிற்கு 10 ஆண்டு களுக்கு தேவை யான எரிபொருள் மற்றும் வாரண்டி உள்ளிட்ட அனைத்தும் விலையில் சேர்த்து வாங்கப் படுகிறது. 
எனவே, டிகோலா நிறுவனத் தின் எரிபொருள் நிலையங் களில் ஹைட்ரஜனை இலவச மாக நிரப்பிக் கொள்ளலாம். 

மேலும், தனது டிரக்குகளுக் காக 364 ஹைட்ரஜன் ஃப்யூசல் செல் சார்ஜ் ஏற்றும் நிலையங் களையும் அமைக்க நிகோலா ஒன் நிறுவனம் திட்ட மிட்டுள்ளது.
Tags:
Privacy and cookie settings