கொசு விரட்டி மற்றும் ரூம் ஸ்பிரே அலர்ஜி !

கொசுவர்த் தியைத் தொடர்ந்து ரூம் ஸ்பிரே, ரூம் ஃப்ரெஷ்னர் போன்ற வாசனைத் திரவியங் களும் வீடுகளில் தவிர்க்க முடியா தவையாக மாறி விட்டன. கொசுத் தொல்லை யிலிருந்து தப்பிக்க, 
ரூம் ஸ்பிரே, ரூம் ஃப்ரெஷ்னர்
வாசனைக் காக என எதற்காகப் பயன் படுத்தினா லும், இவற்றி லிருந்து வெளிவரும் நறு மணங்கள் பலருக்கும் ஏற்றுக் கொள்வ தில்லை. 

உடனடி யாகத் தலைவலி, சுவாசிப் பதில் சிரமம் போன்ற பிரச்னை களையும் உருவாக்கி விடுகின்றன. 

கொசுவர்த் திகளும் வாசனை திரவி யங்களும் தவிர்க்க முடியாத நிலைமை யில் நாம் என்ன செய்ய வேண்டும்? விளக்கு கிறார் நரம்பியல் சிகிச்சை மருத்து வரான விஜய். 

‘கொசு வர்த்திகள், வாசனை திரவியங் களால் ஒற்றைத் தலைவலி, மூச்சு விடுவதில் சிரமம், அலர்ஜி போன்ற தும்மல் என 3 முக்கிய மான பிரச்னைகள் ஏற்படுகிறது.

இவை முழுக்க முழுக்க வேதியியல் பொருட் களால் உருவா கின்றன என்பதும், அந்த வேதிப் பொருட்களின் வீரியத்தை நம்மால் தாங்கிக் கொள்ள முடிவ தில்லை என்பதும் தான் காரணம்.
கொசு வர்த்திச் சுருள், ஸ்பிரேக் களால் ஏற்படும் பாதிப்பை கிட்டத் தட்ட சிகரெட் பிடிப்பதற்கு இணையாகச் சொல்லலாம். 

லிக்யூட் வடிவத்தில் பயன் படுத்தும் எலெக்ட் ரானிக் கொசு விரட்டிகள் உடன டியாக பாதிப்பை ஏற்படுத்தா விட்டாலும் நீண்ட நாட்களு க்குப் பிறகு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.

சிகரெட்டில் கார்பன் புகை, கொசுவர்த்தி மற்றும் வாசனை திரவிய ங்களில் வேறு வேதிப் பொருட்கள் என்பது மட்டும் தான் வித்தியாசம்.

இத்தனை சிக்கல்கள் இருப்பதால் அளவோடு, கவன மாகவே இவற்றைப் பயன் படுத்த வேண்டும். கொசு வர்த்திச் சுருளைப் படுக்கை க்குப் பக்கத்தில் வைத்துத் தூங்கக் கூடாது.

முடிந்த வரை சற்று தொலை வான தூரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். கொசு வர்த்தியைத் தவிர்க்க முடிகிற பட்சத்தில், கொசு விரட்டப் பயன்படும் Mosquito bat பயன் படுத்துவதும் நல்ல மாற்று வழிதான்.

எலெக்ட் ரானிக் கொசு விரட்டியை 10 மணிக்கு ஆன் செய்தால், 11 மணிக்கு ஆஃப் செய்து விட்டு தூங்குவதே நல்லது. 

இரவு முழுவதும் ஆன் மோடிலேயே இருந்தால், அதிலிருந்து வெளிவரும் காற்றைத் தான் சுவாசிக்க வேண்டி யிருக்கும்.
கதவுகள், ஜன்னல் எல்லாம் சார்த்தப் பட்டிருக்கும் அறையில், எலெக்ட் ரானிக் கொசு விரட்டியின் பாதிப்பு அதிக மாகவே இருக்கும். 

அதனால் தூங்கச் செல்லும் ஒரு மணி நேரத்துக்கு முன்போ, எலெக்ட் ரானிக் கொசு விரட்டியை அணைத்த ஒரு மணி நேரம் கழித்தோ தூங்கச் செல்லலாம்.

இல்லா விட்டால் பிரச்னை கள் உருவாகும். தும்மல், அலர்ஜி, ஆஸ்துமா, வீசிங் போன்ற தொல்லை கள் இருக்கிற வர்களுக்கு பிரச்னைகள் மேலும் அதிகமாகலாம். 

இதை சமாளிக்க, முடிந்தவரை கொசு வர்த்தியின் தேவை யைக் குறைக்கும் அளவுக்கு மாற்று வழி களையும் கையாள வேண்டும்.

வீட்டில் கொசு அதிக மாக வருகிற நேரம் மாலை 5 மணியி லிருந்து 7 மணி வரை என்று வைத்துக் கொள்வோம். 

முக்கிய மான அந்த நேரத்தில் தூங்கும் அறையின் ஜன்னல், கதவு களை சாத்தி வைத்துக் கொண்டு அதன் பிறகு திறந்து கொள்வது ஒரு வழி.

கொசு வளர் வதற்கு வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில், வீட்டுக்கு அருகில் தண்ணீர் எதுவும் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 

தேங்காய் ஓடு, பிளாஸ்டிக் கப்புகளில் தேங்கி இருந்தால் கூட அதில் கொசு வளரலாம்.

அதனால் கொசு உருவாகும் இடத்திலேயே இவற்றைத் தடுக்க முயற்சிக்க வேண்டும். ஹேங் கரிலோ, கொடியிலோ உடைகள் அதிகம் இருந்தால் அவற்றில் கொசு ஒளிந்து கொள்ளும்.
கொசு விரட்டி மற்றும் ரூம் ஸ்பிரே அலர்ஜி
அதனால், வீட்டை சுத்தமாக வைத்துக் கொள் வதும் கொசு வராமல் தடுக்கும். வாய்ப்பு இருந் தால் நொச்சி செடி வளர்க் கலாம். 

ஏசி அறையில் கொசு அதிகம் இருக்காது என்பதால், ஏசி பயன் படுத்துகிற வர்கள் கொசு வர்த்தியைத் தவிர்க் கலாம்.

பெர்ஃப்யூமை பொறுத்த வரையில் நேரடியாக உடலில் பாதிப்பை ஏற்படுத்தா விட்டாலும் மைக்ரேன், அலர்ஜி போன்ற பிரச்னை களை ஏற்படு த்தும். 

நீண்ட நாட்க ளாகப் பயன்ப டுத்திக் கொண்டிரு ந்தால் சரும நோய்கள், சுவாச நோய்கள், புற்று நோய் கூட வரலாம்.
இந்த நறுமணம் வேண்டும் என்று வாசனை கள் அதிகம் கொண்டதாக விரும்பி வாங்கு கிறோம். 

எந்த அளவுக்கு அதிக வாசனை கொண்ட தாக ஸ்பிரேக்கள் இருக்கின்றனவோ, அந்த அளவுக்கு வேதிப் பொருட்கள் நிறைந்த தாக இருக்கும்.

அதனால், அதிக வாசனை கொண்ட வற்றையும், தரம் குறைந்த பெர்ஃப்யூம் களையும் பயன் படுத்து வதைத் தவிர்க்க வேண்டும். 

ரூம் ஸ்பிரேக் களில் 2 வகைகள் இருக்கி ன்றன. சில ரூம் ஸ்பிரேக்கள் நாள் முழுவதும் வாசனை யோடு இருக்கும்.

சில ரூம் ஸ்பி ரேக்கள், தற்காலி கமாக சில மணி நேரங்களுக்கு மட்டும் வாசனை யாக இருக்கும். இவற்றில், நாள் முழுவதும் வாசம் வீசுகிற ரூம் ஸ்பிரேக்கள் அபாயகர மானவை. 

அதிலிருந்து வெளி வருகிற வேதிப் பொருட்க ளையே நாள் முழுவதும் நாம் சுவாசித்துக் கொண்டே இருப்போம் என்பதால், ஆபத்து அதிகம்.
கொசு வர்த்திப் பயன் பாட்டைத் தவிர்க்க இயற்கை யான வழிகளைக் கையாள வேண்டும் என்று சொன்னதைப் போல, 

ரூம் ஸ்பிரே பயன்படுத்து வதற்கும் மாற்று வழியாக அறையை முடிந்த வரை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

ரூம் ஸ்பிரே பயன் படுத்தினால் குறைந்த அளவு வீரியம் கொண்ட, குறைந்த நேரம் மட்டுமே வாசம் தருகிற தரமான ஸ்பிரேக் களையே பயன் படுத்த வேண்டும்.’’
Tags: