அக்டோபர் 17 மற்றும் 19-ல் உள்ளாட்சி தேர்தல்.. நாளை முதல் வேட்புமனு தாக்கல் | Local elections on October 17 and 19.. The first nominations close tomorrow !

தமிழகத் தில் வரும் அக்டோபர் 17 மற்றும் 19-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங் களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் சீத்தா ராமன் தெரிவித் துள்ளார்.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்பு களுக்கான உறுப்பி னர்களை தேர்வு செய்வத ற்கான தேர்தல் தேதியை இன்று மாநில தேர்தல் ஆணையர் சீத்தா ராமன் அறிவித்தார்.

தமிழகத்தில் தற் போதுள்ள உள்ளாட்சி அமைப்பு களுக்கான பதவிக் காலம் அடுத்த மாதம் அக்டோபர் 24-ஆம் தேதியுடன் முடிவ டைகிறது. எனவே, தேர்தல் நடத்து வதற்கான ஆலோசனை களில் தமிழக தேர்தல் ஆணையம் மற்றும் நகராட்சி நிர்வா கத்துறை ஆகியவை ஈடுபட்டு வந்தன.

இந்நிலை யில், இன்று செய்தி யாளர்கள் சந்திப்பில் தமிழகத் தலைமை தேர்தல் ஆணையர் கூறிய தாவது:

தமிழகத் தில் மாநக ராட்சி, நகராட்சி, மூன்றாம் நிலை நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி களில் உள்ள உள்ளாட்சி பதவிக ளுக்கான நேரடித் தேர்த ல்கள் அக்டோபர் 17 மற்றும் 19-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங் களாக நடை பெறும்.

காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடை பெறும். மொத்தம் 91,098 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடை பெறுகிறது. உள்ளா ட்சித் தேர்தலில் 4 விதமான வாக்குச் சீட்டுகளை பயன்படுத்த திட்ட மிடப்பட் டுள்ளது.

இதற்கான வேட்பு மனுக்கள் நாளை (26.09.2016) முதல் பெறப்படும். நாள் தோறும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படும். வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய அக்டோபர் 3-ஆம் தேதி கடைசி நாளாகும். 

தாக்கல் செய்யப் பட்ட வேட்பு மனுக்கள் அக்டோபர் 4-ஆம் தேதி பரிசீலனை செய்யப் படுகிறது. வேட்பு மனுக்களை திரும்பப் பெற அக்டோபர் 6-ஆம் தேதியே கடைசி நாளாகும்.

வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 21-ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங் குகிறது. இந்த தேர்தலில் 5 கோடியே 80 லட்சம் வாக்கா ளர்கள் வாக்களிக்க உள்ளனர். நேரடி தேர்தல் அனைத் தையும் அக்டோபர் 26-ஆம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப் பட்டுள்ளது. 

நேரடித் தேர்தலுக்குப் பின்னர் மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் என 13,362 பதவிக ளுக்கான மறைமுகத் தேர்தல் நடத்த ப்படும். வெற்றி பெற்றவ ர்களின் பதவி ஏற்பு மற்றும் முதல் கூட்டம் 26-ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவித்தார்.

முதல் கட்டமாக அக்டோபர் 17-ஆம் தேதி 10 மாநகராட் சிகளுக்கும், திண்டு க்கல், சென்னை மாநகராட்சி களுக்கு அக்டோபர் 19-ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும். தேர்தல் நடத்தை விதி முறைகள் உடனே அமலுக்கு வந்து ள்ளன.

தமிழ்நாட்டில் 12 மாநகரா ட்சிகள், 124 நகராட்சிகள், 31 மாவட்ட பஞ்சாய த்துகள், 385 பஞ்சாயத்து யூனியன்கள், 528 பேரூராட்சிகள், 12,524 கிராம பஞ்சாய த்துகள் உள்ளன.

அனைத்து மாநகராட்சி களிலும் 919 வார்டு களும், நகராட்சி களில் 3,613 வார்டு களும், பேரூரா ட்சிகளில் 8,288 வார்டு களும், மாவட்ட பஞ்சாய த்துகளில் 655 வார்டுகளும், 

பஞ்சாயத்து யூனிய ன்களில் 6,471 வார்டுகளும், கிராம பஞ்சாயத்து வார்டுகள் 99,324 என மொத்தம் 1 லட்சத்து 19 ஆயிரத்து 399 பதவிகள் உள்ளன.

இந்த முறை வார்டு கவுன் சிலர்கள், கிராம பஞ்சா யத்து தலை வர்கள் ஆகிய பதவிக ளுக்கு மட்டும் நேரடித் தேர்தல் நடக்கிறது. மேயர்கள், நகராட்சி, பேரூராட்சி, 

மாவட்ட பஞ்சாயத்து மற்றும் பஞ்சாயத்து யூனியன் தலைவர்கள் ஆகியோர் கவுன்சி லர்கள் மூலம் மறைமுகமாக தேர்வு செய்யப்ப டுகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
Tags: