கண்ணில் பிரஸர் என்பது குளுக்கோமா நோய்க்கான அறிகுறியாகும் !

பிரஸர் என்பது உயர் இரத்த அழுத்தம். இது பற்றி எல்லோருக்கும் தெரியும். ஐ (கண்) பிரஸர் பற்றியது அப்படியல்ல. ஐ (கண்) பிரஸர் என்று பலரும் சொல்லுவது குளுக்கோமா (Glucoma) என்ற நோயைத்தான். 
குளுக்கோமா
பொதுவாக கண்ணிலுள்ள திரவத்தின் அழுத்தம் (பிரஸர்) 21 mm Hg ற்குள் இருக்க வேண்டும். அதற்கு மேலே அதிகரிக்கும் போது அந்த அழுத்தமானது பார்வை நரம்பைப் (Optic Nerve) பாதிக்கிறது.

கண்ணினுள் அழுத்தம் அதிகரிப்பதே குளுக்கோமா நோய்க்கு முக்கிய காரணமாக இருந்த போதும் இதற்கு வேறு காரணங்களும் இருக்கலாம் என நம்பப் படுகிறது.

இது அமைதியாக ஆர்ப்பாட்ட மின்றி, தனது பார்வை பறி போகின்றது என்பதை நோயாளி உணராமலே பார்வையைப் பறிக்கின்ற ஒரு ஆபத்தான நோயாகும்.

பார்வை நரம்பு பாதிப்புருவதால் பார்க்கும் திறன் பாதிக்கப்பட்டு படிப்படியாக அதிகரித்து முழுமையாகக் குருடாக்கும்.

பார்வை நரம்பு என்பது நாம் பார்க்கும் போது எமது விழித்திரை யில் விழுகின்ற பிம்பங்களை மூளைக்குக் கடத்துகின்ற நரம்பாகும். 

நரம்பு என ஒருமையில் சொல்லப்பட்ட போதும் இது ஒரு மில்லியனுக்கும் அதிகமான நுண்ணிய பார்வை நாரம்புகளைக் (Optic Fibers) கொண்டதாகும்.
குளுக்கோமாவில் பல வகைகள் இருந்தாலும் மிக அதிகமானது திறந்த கோண குளுக்கோமா (Open angle Glucoma) தான்.

யாருக்கு வரும்

நெருங்கிய குடும்பத்தினிடையே இருந்திருந்தால் வருவதற்கான சாத்தியம் அதிகம்.

அதே போல 45 வயதிற்கு மேல் சாத்தியம் மிக அதிகம்.

வெள்யைர்களை விட கறுப்பு இனத்தவரிடையே அதிகம்.

நீரிழிவு இருந்தாலும் வாய்ப்பு அதிகம்.

ஸ்டிரோயிட் வகை மருந்துகளை மாத்திரைகளாக, ஊசியாக அல்லது கண் துளிகளாக அதிகம் உபயோகித்த வர்களுக்கும். கண்ணில் ஏதாவது அடிகாயங்கள் ஏற்பட்டிருந் தாலும் இது வருவதற்கு வாய்ப்பு அதிகம்.
நீரிழிவு இருந்தாலும் வாய்ப்பு அதிகம்
அறிகுறிகள் படிப்படியாக நீண்ட காலத்தில் ஏற்படுவதால் நோயாளி அதை உணர்ந்து கொள்ள மாட்டார். அதுவும் இப்பார்வை இழப்பானது வெளிப்புறத்தில் (Side Vision) ஏற்படுவதால் உணர்ந்து கொள்வது கடினம்.

பக்கப் பார்வை இழப்பு

அதாவது நீங்கள் நேரே கணினியைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது பக்கவாட்டில் ஏதாவது அசைந்தால் கூட அந்த அசைவை உங்களால் காண முடியும்.

ஆனால் குளுக்கோமா நோயளிகளுக்கு அவரது பார்வையின் பரப்பானது வெளிப் புறத்திலிருந்து குறைந்து கொண்டு வரும். ஆனால் நேர் பார்வை வழமை போல தெளிவாக இருக்கும்.

இதனால் தான் அவருக்கு தனது பார்வை இழப்பை உணர்ந்து கொள்ள முடியாதிருக்கிறது. இதனைக் கவனிக்காது விட்டால் பார்வை மேலும் குறைந்து வரும். 

சில காலத்தின் பின்னர் ஒரு குழாயினூடாகப் பார்ப்பது போல நேரே இருப்பவை மட்டுமே தெரியும். இறுதியில் முழுப் பார்வையும் பறிபோகும் அவலம் நேரும்
தடுப்பது எப்படி?

நோயின் தாக்கம் பார்வைiயில் சேதத்தை ஏற்படுவதற்கு முன்னரே நோயைக் கண்டுபிடித்து அதற்கான சிகிச்சையைச் செய்வது தான் ஒரே வழி.

கண் மருத்துவரிடம்

இந்நோய் வரக் கூடிய சாத்திய உள்ளவர்கள்

கண் மருத்துவரை அணுகி தமது கண்களைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது பாதிப்பு இல்லா விட்டாலும் அவர்கள் இரண்டு வருடங் களுக்கு ஓரு முறையாவது கண் மருத்துவரிடம் போவது அவசியம்.
சாத்திய உள்ளவர்கள்
கண்ணில் பார்வைக் குறைவு ஏற்பட்டால் நீங்களாக கடையில் மூக்குக் கண்ணாடி வாங்கி அணிவதைத் தவிர்க்க வேண்டும். அச் சந்தர்ப்பத்தை கண் மருத்துவரைச் சந்திப்பதற் கான வாய்ப்பாகப் பயன்படுத்துங்கள். 

அவர் உங்கள் கண்களின் உட்பகுதியை விசேடமான கருவிகள் மூலம் பரிசோதிக்கும் போது குளுக்கோமா ஆரம்ப நிலையில் இருந்தாலும் கண்டுபிடிக்க முடியும்.

1. ரோனோ மீற்றர் (Tonometer) என்ற கருவி உங்களது கண்ணினுள் இருக்கும் அழுதத்தை அளவிட உதவும்.

2. கண் பார்வையின் பரப்பை அளவிடும் (Visual field test) பரிசோதனை இது உங்கள் பார்வையின் பரப்பளவில் பாதிப்பு ஏற்கனவே ஏற்பட்டுள்ளதா என்பதை அறிய உதவும்.

3. (Dilated eye Exam) இது கண்ணின் ஒளி புகும் பாதையை விரிவித்து அதனூடாக விழித்தரை யையும், பார்வை சரம்பையும் பிம்பம் பெருக்குவிக்கும் கண்ணாடி ஊடாகப் பார்த்து அவற்றில் பாதிப்பு இருக்கிறதா எனக் கண்டறிவதாகும்.

சிகிச்சை

நோயின் நிலக்கு ஏற்ப சிகிச்சை முறைகளில் மாற்றம் ஏற்படலாம்.
சிகிச்சை
1. துளி மருந்துகள்

அதிகமா னோருக்கு இவை மட்டுமே கண்ணின் பிரசரைக் குறைத்து, பார்வை பறிபோகாமல் தடுப்பதற்குப் போதுமானது.

பிரஸர் சரியான நிலைக்கு வந்தாலும் தொடர்ந்து உபயோகிக்க வேண்டும். தினமும் ஒரு முறை உபயோகிக்கும் மருந்துகள் உள்ளன.

பலமுறை விட வேண்டிய வையும் உண்டு. இது அவரவர் நோயின் தன்மையைப் பொறுத்தது. அவற்றை மருத்துவர் கூறுவது போல சரியான முறையில் கண்ணில் சரியான நேர இடைவெளிகளில் விட வேண்டும்.

2. மாத்திரைகள்

தனியாக துளி மருந்துகளை உபயோகித்து கண் பிரசரைக் குறைக்க முடியா விட்டால் மாத்திரை களும் தேவைப் படலாம்.

3. சத்திர சிகிச்சை

இப்பொழுது லேசர் முறையிலேயே பெரும்பாலும் செய்யப் படுகிறது. கண்ணில் மேலதிகமாக நீர் தேங்காது தடுத்து கண் பிரசரைக் குறைப்பதே இதன் நோக்கமாகும்.
Tags: