இந்த அறிகுறிகள் இருந்தா உங்க கண் பார்வை மங்கலாகப் போகுது !

0
தேசிய கண் தானம் முகாம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி லிருந்து செப்டம்பர் 8 ஆம் தேதி வரை கண் தானம் குறித்த விழிப்புணர்வை நடத்துகிறது. 
இந்த அறிகுறிகள் இருந்தா

இந்த 12 நாட்களும் அவர்கள் கண்தானம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி வருகிறார்கள். இந்தியாவில் கிட்டத்தட்ட 5 ல் 1 வருக்கு கண் பார்வை இழப்பு இருப்பதாக அதிர்ச்சி ரிப்போர்ட் கூறுகிறது. 


கிட்டத்தட்ட 46 லட்சம் இந்தியர்கள் கண்பார்வை இழப்பை பெற்றவர்களாக இருக்கிறார்கள். எனவே மக்களுக்கு விழிப்புணர் வையும் எச்சரிக்கையும் ஊட்டும் வகையில் இந்த முகாம் செயல்பட்டு வருகிறது. 

எந்த மாதிரியான காரணங்கள் கண்பார்வை இழப்பை ஏற்படுத்து கின்றன. நமது கண் பார்வை ஆரோக்கி யத்தை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பது குறித்த விவரங்களை அவர்கள் கூறியுள்ளனர்.

நிரந்தர கண் பார்வை இழப்பு

நிரந்தர பார்வை இழப்பை கண்ணாடி யாலோ, கான்டாக்ட் லென்ஸ் களாலோ சரி செய்ய இயலாது. கண்பார்வை இழப்பு என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்க கூடிய ஒன்று. 
இதில் கண்புரை, மெகுலர் டிஜெனரேசன் போன்றவை வயதை பொருத்து வருகின்றனர். வயதானவர்கள் இதனால் பெரிதும் பாதிப்படை கின்றனர்.

கண் பார்வை குறைபாடு

உங்களுக்கு மங்கலான பார்வை தெரிந்தால் முதலில் உங்கள் கண் பார்வையில் குறைபாடு இருப்பதை புரிந்து கொள்ளுங்கள். அதற்கான சிகிச்சை களை உடனே செய்வதன் மூலம் நீங்கள் கண் பார்வை இழப்பு முற்றிலுமாக போவதை தடுக்கலாம். 

ஒரு ஆரோக்கியமான கண் பார்வை உடையவர் 200 அடி தூரத்தில் இருக்கும் பொருளைக் கூட பார்க்க முடியும். ஒரு கண்பார்வை அற்ற நபரால் 20 அடி தூரத்தில் இருக்கும் பொருளைக் கூட காண இயலாது.

கண் பார்வை இழப்பு 

தற்போதைய கணக்கெடுப்பின் படி கண் பார்வை இழப்பு அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தற்போது 0.4 % முதல் 6% வரை கண் பார்வை இழப்பு அதிகரித்துள்ளது. 

வாழ்க்கை முறை மாற்றம். ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் போன்றவை காரணங் களாக அமைகிறது.

கண் பார்வை இழப்பு வகைகள்

பார்வை குறைபாட்டின் நிலையை பொருத்து இது வகைப் படுத்தப் படுகிறது.

ஒட்டு மொத்த இழப்பு

முழுமையான கண்பார்வை இழப்பு ஏற்படுதல். ஒரு நபரின் கண் பார்வை திறன் 20/200 விகிதத்தில் இருந்தாலே அவர் ஒட்டுமொத்த கண் பார்வையும் இழந்து விட்டார். 

குறிப்பாக 60 வயதை கடந்த பெரியவர் களுக்கு இந்த மாதிரியான கண் பார்வை இழப்பு ஏற்படுகிறது.

நிறக்குருடு

இதை டிஸ்க்ரோமடோப்சியா என்று அழைக்கின்றனர். இந்த கண் பார்வை இழப்பில் பச்சை, சிவப்பு பிற நிறங்கள் தெரியாமல் போய் விடும். 
கண் தானம் முகாம்

இதனால் இவர்களால் நிறங்களை பிரித்தறிய தெரியாது. இதில் சில பேருக்கு பிறவிலயே குறைபாடு நேரலாம்.


இரவுக் கண் பார்வை இழப்பு

இந்த மாதிரியான கண் பார்வை இழப்பு இரவு நேரங்களில் வெளிச்சம் குறைந்த நேரங்களில் மட்டும் ஏற்படும். இதில் முழுமையாக பார்வை போகாது ஆனால் பார்வையை பாதிக்கிறது.

கண்புரை ஏற்படக் காரணங்கள்

வயதான காலத்தில் ஏற்படும் கண் புரையால் இந்த இழப்பு ஏற்படுகிறது.

மெகுலர் டிஜெனரேசன்

இந்த கண் பார்வை இழப்பு பொதுவாக 60 மற்றும் 60 வயதை கடந்தவர் களுக்கு ஏற்படுகிறது. இது கண்ணின் மையப் பகுதியை பாதித்து பார்வை இழப்பை உண்டாக்குகிறது 
இதனால் பாதிக்கப் பட்டவர்கள் சரியாக படிக்க, எழுத மற்றும் வாகன ஓட்ட முடியாமல் அவதிப்படுவர்.

குளுக்கோமா
இந்த நோய் கண்ணின் முக்கியமான நரம்புகளை பாதித்து கண் பார்வை இழப்பை ஏற்படுத்துகிறது. கண்களில் ஏற்படும் அதிக இரத்தம் அழுத்தம் காரணமாக நரம்புகள் சேதமடை கின்றன.

டயாபெட்டிக் ரெட்டினோபதி

கண்ணில் உள்ள ரெட்டினா பகுதி பாதிப்படைவ தால் ஏற்படுகிறது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், நீரிழிவு நோயாளிகள் இந்த பாதிப்பை அடைகின்றனர்.

ரூபெல்லா

இந்த நோய் தாயிடமிருந்து வயிற்றில் உள்ள குழந்தைக்கு பரவக் கூடும். இந்த மாதிரியான ஜெர்மன் அம்மை நோயால் கண்பார்வை இழப்பு உண்டாகலாம். 

இதற்கு சரியான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டாலே போதும். குழந்தையை பாதிக்காத வண்ணம் காத்து விடலாம்.

ஆப்தலமியா நியோனடோரம்
கண் பார்வை இழப்பு

பிறந்த குழந்தைக்கு கண்ணில் ஏற்படும் அழற்சியால் இந்த நோய் உண்டாகிறது. தாயின் பிறப்புறுப்பு வழியாக குழந்தை பிறக்கும் போது இந்த வைரஸ் குழந்தையின் கண்களில் அழற்சியை உண்டாக்கலாம்.


ஆப்டிக் நரம்பு ஹைப்போ பிளாசியா

இந்த நோய் பாதிப்பில் கண் நரம்பு களுக்கு போதுமான இரத்த ஓட்டம் இல்லாமல் பார்வை இழப்பு ஏற்படுகிறது. இது பெரும்பாலும் மரபுரிமை சார்நது வருகிறது.
பார்வை நரம்புச் சிதைவு

கண்ணில் உள்ள நரம்பு இழைகளில் எதாவது குறைபாடு இருந்தாலோ அல்லது கண்ணில் பாதிப்பு இருந்தாலோ பார்வை இழப்பு ஏற்படுகிறது.

மையோபியா

இந்த நிலையால் பாதிக்கப் பட்டவருக்கு நெருங்கிய பொருட்கள் தெளிவாகவும் தொலைவில் உள்ள பொருட்கள் மங்கலாகவும் தெரியும். இதற்கு குவி, குழி போன்ற லென்ஸ் உள்ள கண்ணாடி களை அணிவதன் மூலம் பார்வை குறைபாட்டை சரி செய்யலாம்.

கண்ணில் ஏற்படும் காயங்கள்

கண்ணில் ஏற்படும் காயங்கள் மற்றும் விபத்துக்க ளால் பாதுகாப்பு சுரப்பிகள் தேய்ந்து போக வாய்ப்புள்ளது. இதனால் பார்வை இழப்பு ஏற்படும்.


விழித்திரை பிளவுகள்

வயதான அல்லது மரபியல் ரீதியான காரணங்களால் விழித்திரையில் பிளவு ஏற்படலாம். இதனால் பார்வை இழப்பு ஏற்படும். விழித்திரை சிதைவும் பார்வை இழப்பை உண்டாக்குகிறது.

பாதிக்கும் காரணிகள்

அம்ப்லியோபியா அல்லது சோம்பேறி கண்

அழற்சி, கண்கள் சிவந்து போதல்

பார்வை கவனமின்மை அல்லது கண்களின் வளர்ச்சி தடைபடுதல்
கண்ணீர் குழாய்களில் ஏற்படும் அடைப்பு

கண்புரை

ஸ்ட்ராபிஸ்மஸ் அல்லது மாறு கண்

கண் பாகங்கள் போதிய வளர்ச்சி இல்லாமல் இருத்தல்

பிடோசிஸ் அல்லது கண் இமை மூடி இருத்தல்

பிறவி குளுக்கோமா

பார்வை குறைபாட்டின் அறிகுறிகள்

உங்களுக்கு கண் மங்கலாக தெரியும் போதே மருத்துவரை அணுகி சோதனை பெற்று கொள்வது நல்லது. இல்லை யென்றால் காலப்போக்கில் முழுவதுமாக பார்வை இழப்பு நேரிடலாம்.
ஜெர்மன் அம்மை நோய்

குறுகிய பார்வை


மோசமான இரவு பார்வை

உருவங்களை பார்க்க முடியாத தன்மை

நிழலாடுதல்

மங்கலான பார்வை

குழந்தைகளுக்கு ஏற்படும் அறிகுறிகள்

கருவிழியில் வெண் புள்ளிகள் தோன்றுதல்

அடிக்கடி கண்களை தேய்த்துக் கொண்டே இருத்தல்

6 மாதத்திற்கு பிறகு மாறு கண் தோன்றுதல்

வெளிச்சத்தை கண்டால் அதிக கூசுதல்

நாள்பட்ட கண் சிவப்பு

கவனத்தில் குறைபாடு
மோசமான காட்சி கண்காணிப்பு, அல்லது கண்களால் ஒரு பொருளைப் பின்தொடர்வதில் சிக்கல்

கண்களில் உள்ள நீண்ட கால சிதைவு


அபாயக் காரணிகள்

நீரிழிவு நோய்

மாகுலர் டிஜெனரேசன், குளுக்கோமா இருப்பவர்கள்

கண் அறுவை சிகிச்சை நோயாளிகள்

நச்சு வாய்ந்த கெமிக்கல் கம்பெனிகளில் வேலை செய்தல்

குறைப் பிரசவ குழந்தைகள்

கண்டறிதல்

உங்களுக்கு கண் பார்வை குறைபாடு இருக்கிறதா என்பதை கண் பரிசோதனை செய்வதன் மூலம் கண்டறியலாம். 

இதில் உங்கள் பார்வையின் தெளிவு, கண் தசைகளின் செயல்பாடு, ஒளியை எவ்வாறு பிரதிபலிக்கிறது, நரம்புகளின் ஆரோக்கியம் இவற்றை பொருத்து சோதனைகள் மேற்கொள்ளப் படும்.

பிறகு ஒரு ஒளி நுண்ணோக்கி கொண்டு உங்கள் கண்களில் உள்ள பாகங்களின் ஆரோக்கியம் பார்க்கப்படும். 
இதுவே குழந்தைக ளுக்கு என்றால் பிறந்த உடனே கண் பார்வை பரிசோதனை செய்யப்படும்.ஆறு மாதங்களுக்கு பிறகு குழந்தையின் கண் பார்வை கூர்மை, கவனம் மற்றும் செயல்திறன் சோதிக்கப்படும்.

சிகிச்சைகள்
குழந்தையின் கண் பார்வை

பொதுவாக கண் பார்வை குறைப்பாட்டை போக்க கண்ணாடிகள், லென்ஸ்கள், மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சைகள் மேறகொள்ளப் படும். 


மேற்கண்ட முறைகளைக் கொண்டு கண் பார்வை குறைபாட்டை சரி செய்ய முடியுமே தவிர முழுவதுமாக இழந்த கண் பார்வையை திருப்பி தருவது கடினம். பாதிக் குறைபாடு இருப்பவர்கள் பெரிய கண் கண்ணாடிகளை பயன்படுத்தி பலன் அடையலாம். 
ஆனால் முழுவதுமாக பார்வை அற்றவருக்கு இது சாத்தியமாவது கஷ்டம். அவர் தன்னுடைய வாழ்க்கை முறை, சூழல்களை மாற்றிக் கொண்டு வாழ வேண்டி யிருக்கும்.

கீழ்க்கண்ட வழிகளை பின்பற்றலாம் கண் பார்வை இழப்பு உள்ளவர்கள் பிரெய்ல் எழுத்துகளை கற்றுக் கொண்டால் எளிதாக இருக்கும்.

இதன் மூலம் தடவிப் பார்த்து தான் நினைப்பதை அவர்கள் சொல்லலாம். அவர்கள் நடப்பதற்கு பயன்படுத்துவதற்கு ஏற்ற மாதிரி பொருட்களை வீடுகளை அமைத்துக் கொள்ளலாம்.

உபயோகிக்க பயன்படுத்தும் பணத்தின் மதிப்பை கண்டறிய அதை வெவ்வேறு விதமாக மடித்து பர்ஸில் வைத்துக் கொள்ளலாம். மொபைலின் கீபோர்டு பயன்பாட்டை மனப்பாடம் செய்து கொள்ளலாம். 
துணைக்கு யாரையாவது அருகில் வைத்துக் கொள்ளலாம், வீட்டில் வளர்க்கும் நாய்களைக் கூட வெளியே செல்லும் போது துணைக்கு அழைத்துச் செல்லலாம்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings