ஆர்.கே.நகரில் ஜெயலலிதா முன்னிலை !

சென்னை டாக்டர்.ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜெயலலிதா முன்னிலை வகிக்கிறார். 5424 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதா முன்னிலை வகிக்கிறார்.

தமிழகத்தில் வாக்குப்பதிவு நடந்து முடிந்த 232 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கியது.

சென்னை டாக்டர்.ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி நட்சத்திர தொகுதிகளில் ஒன்றாக உள்ளது. இத்தொகுதியில் அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளர் ஜெயலலிதா போட்டியிடுகிறார். 

திமுக சார்பில் சிம்லா முத்துச்சோழன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வசந்தி தேவி ஆகியோர் போட்டியெடுகின்றனர்.
Tags:
Privacy and cookie settings