ரூ.570 கோடி பணம் பறிமுதல் செய்த விவகாரம்.. சுப்ரீம்கோர்ட் விசாரிக்க மறுப்பு !

திருப்பூர் அருகே ரூ.570 கோடி பணம் பிடிபட்டது தொடர்பான மனுவை விசாரணைக்கு ஏற்க சுப்ரீம்கோர்ட் மறுத்துவிட்டது. கோவையிலிருந்து, ரூ.570 கோடி பணத்தோடு, விசாகபட்டிணம் நோக்கி சென்ற 3 கன்டெய்னர் லாரிகள், 
திருப்பூர் அருகே கடந்த சனிக்கிழமை மடக்கிப் பிடிக்கப்பட்டன. தக்க ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட இந்த பணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் வெடித்தன. 

இந்நிலையில், சுமார் 18 மணி நேரம் கழித்து, எஸ்.பி.ஐ வங்கி அப்பணம் தங்களுக்கு உரியது என்று கூறியது. இதில் சந்தேகம் நிலவுவதால், சிறப்பு புலனாய்வு குழுவை உச்சநீதிமன்றம் அமைத்து, விசாரிக்க உத்தரவிடக்கோரி,

பொதுநல மனு ஒன்று சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த சுப்ரீம்கோர்ட், தேர்தல் ஆணையம் பணத்தை கைப்பற்றியுள்ள நிலையில், 

இதுகுறித்து தமிழக ஹைகோர்ட்டில்தான் மனு தாக்கல் செய்ய முடியும். இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
Tags:
Privacy and cookie settings