”மணல், சுண்ணாம்புக் கல், பாறை எனப் பல்வேறு அடுக்குக ளால் ஆனது நிலப்பரப்பு. ஆறு போன்ற 
நீர்நிலைப் பகுதிகளில் உள்ள நிலப்பரப்பின் அடிப்பகுதியில், சுண்ணாம்புப் பாறைகள் அதிகமாக இருக்கும்.

மணல் பகுதியை ஊடுருவிச் செல்லும் நீரானது, இந்தச் சுண்ணாம்புப் பாறைகளை சிறிது சிறிதாகக் கரைக்கும். 


ஆண்டுக் கணக்கில் இப்படி நிகந்து, அந்த இடத்தில் குழிகள் ஏற்படும்.

இவையே புதை குழிகள். 6,000 மீட்டர் ஆழம் கொண்ட புதை குழிகள் கூட உள்ளன. 
இது, பெரும்பாலும் இயற்கையாக நிகழ்வது என்றாலும், கனிமங்களை வெட்டி எடுப்பது,

நீர்நிலைப் பகுதிகளில் வீடுகள் மற்றும் தொழிற் சாலைகள் கட்டுவது போன்ற மனிதர்களின் செயல் களாலும் புதை குழிகள் உண்டா கின்றன.”