மலேசியாவில் உயரிய விருது பெற்ற இந்தியர் !

ராமநாதபுரம் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட இளைஞருக்கு மலேசிய அரசின் உயரிய விருதான டத்தோ பட்டம் வழங்கப்பட்டுள்ளது. டத்தோ விருது மலேசிய அரசு வழங்கும் முக்கியமான விருதுகளில் ஒன்றாகும். 
மலேசியாவில் உயரிய விருது பெற்ற இந்தியர் !
மலேசியப் பேரரசர், மலேசிய மாநிலங்களின் சுல்தான்கள் மற்றும் ஆளுநர்களும் டத்தோ விருதை வழங்குகின்றனர். 

1965-ம் ஆண்டில் இருந்து அந்நாட்டு பொதுமக்களின் சேவைகளைப் பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

பெரும்பாலும் மலேசியாவை சேர்ந்தவர்கள் பெறக்கூடிய இந்த விருதை, வெளிநாட்டவர்களும் தங்களின் அரிய சேவைகளுக்காக பெற்றுள்ளனர். 

இந்த வகையில் 2015-ம் ஆண்டுக்கான டத்தோ விருதுகள் 12 பேருக்கு மலேசிய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது. 
இதில் ராமநாதபுரம் மாவட்டம், தினைக்குளத்தை பூர்வீகமாகச் கொண்ட கமால் பாட்சாவின் மகன் முகம்மது யூசுப்(35) என்பவரும் விருது பெற்றுள்ளார்.

இவர் சிறந்த குடிமகன், மனிதநேயம் மற்றும் வர்த்தகம் ஆகிய 3 பிரிவுகளில் டத்தோ விருதுக்காகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். 

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு தரப்பினரும் அவரை பாராட்டி வருகின்றனர்.
Tags:
Privacy and cookie settings