ரஜினியின் மனிதன் டைட்டில் ஏன்? உதயநிதி இயக்குனர் !

ரஜினி பட டைட்டில்களை பெரும்பாலும் தனுஷ் பயன்படுத்தி வருகிறார். இவரைத் தொடர்ந்து விஜய்சேதுபதி, ஜீவா உள்ளிட்ட பலரும் இந்த பார்முலாவுக்கு திரும்பினர்.
ரஜினியின் மனிதன் டைட்டில் ஏன்? உதயநிதி இயக்குனர் !
தற்போது இதில் உதயநிதியும் இணைந்துள்ளார். இயக்குனர் அஹ்மத் இயக்கத்தில் உதயநிதி நடித்து வரும் படத்திற்கு ரஜினி படத்தலைப்பான மனிதன் என்ற பெயரை பயன்படுத்தி பர்ஸ்ட் லுக் போஸ்டரை பொங்கல் அன்று வெளியிட்டனர்.

இப்படத்தில் உதயநிதியுடன் ஹன்சிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இப்படத்தின் தலைப்பு குறித்து இயக்குனர் அஹ்மத் கூறியதாவது… 

இந்த படத்தின் நாயகன் முதலில் பல தவறுகளை செய்து பின்னர் மனம் திருந்தி நல்ல மனிதனாக மாறுகிறான். எனவே இக்கதைக்கு பொருத்தமான மனிதன் என்ற தலைப்பு தேர்ந்தெடுத்தோம்.
இதற்கான அனுமதியை மனிதன் படத்தை தயாரித்த ஏவிஎம் நிறுவனத்திடம் முறைப்படி பெற்றுள்ளோம் என்றார். 

இப்படம் இந்தியில் சூப்பர் ஹிட்டான ‘ஜாலி எல்.எல்.பி’ படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags: