சிறுவயதில் வறுமை' மரபணுக்களில் தெரியும் !

தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்; இது சில பழக்க வழக்கங்களுக்கு அடிமை யாவதை குறிப்பிட்டுச் சொல்லப் பயன்படும் ஒரு பழமொழி, ஆனால், நம் பழக்க வழக்கங்கள், 
குணாதிசயங்கள், ஆரோக்கியம் என இவை அனைத்துக்கும் டி. என். ஏ. எனும் மரபுப் பொருளாலான நம் மரபணுக்களே காரணம் என்கிறது மூலக்கூறு அறிவியல்.

இது ஒருபுறமிருக்க ஒருவரின் இளமைக்காலம் வறுமையில் கழிந்ததா அல்லது செல்வச் செழிப்பில் நகர்ந்ததா என்பதைத் தெரிந்து கொள்ள அவரது மரபணுக்களை ஆராய்ந்தாலே போதும் என்று ஆச்சரியப் படுத்துகிறது இங்கிலாந்து நாட்டின் சமீபத்திய ஆய்வு ஒன்று!

கட்டுரைச் செய்தியை முழுமையாகத் தெரிந்து கொள்வதற்கு முன்பு டி. என். ஏ. மற்றும் மரபணுக்களைப் பற்றிய அடிப்படையைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

ஒரு காலத்தில், ஒருவரின் குணம், திறமை, அறிவு என எல்லா வற்றுக்கும் அவரவர் மூளை தான் காரணம் என்று மேலோட்டமாக சொல்லிக் கொண்டிருந்தோம். 

அதேபோல ஒருவரின் குணாதிசயம், அறிவு எல்லாம் அவரது சந்ததிக்கு போகும் என்று நம்பப் படுகிறது.
உதாரணமாக,

‘அவன் அப்பா மாதிரி மிகக் கோபக்காரன்’, அவள் தாத்தா மாதிரி பயங்கரப் புத்திசாலி’ என சிலர் சொல்வதை பார்த்திருப்போம்.

இந்தக் கூற்றுகளில் உண்மை யிருப்பினும், இதன் அடிப்படை இன்னதென்று யாருக்குமே தெரியாது என்பது தான் நிதர்சனம். இதற்கெல்லாம் விளக்கமாக வந்தது கடந்த 1950 களில் கண்டு பிடிக்கப்பட்ட மரபுப் பொருளான
டி. என். ஏ.மரபியலின் அடிப்படை மூலக் கூறுதான் இந்த டி. என். ஏ. ‘டீ. ஒக்சி ரிபோ நியூக்ளிக் எசிட் என்பதுதான் டி. என். ஏ. என்பதன் விரிவாக்கம். ஓர் ஏணியைக் கயிறு போல முறுக்கினால் உருவாகும் வடிவம் தான் டி. என். ஏ. வின் வடிவம்.

மனித உடலின் ஒவ்வொரு உயிரணுவிலும் டி. என். எ. வால் ஆள குரோமோசோம்கள் என்னும் மரபணுச்சுருள்கள் உண்டு. மனிதனுடைய ஒவ்வொரு உயிரணுவிலும் உள்ள குரோமோ சோம்களின் எண்ணிக்கை 46.

ஒவ்வொரு குரோமோ சோமிலும் பல நூறு முதல் பல்லாயிரக்கணக்கான மரபணுக்கள் உண்டு. 

இந்த மரபணுக்கள் ஒவ்வொன்றிலும் நமது குணாதிசயங்கள், திறமைகள், நோய்கள் ஏற்படும் வாய்ப்பு, உடல் ஆரோக்கியம் என எல்லாம் இரசாயன குறியீடுகளாகக் பதிவு செய்யப் பட்டுள்ளன. 

உடலிலுள்ள பல்வேறு இரசாயன சமிக்ஞைகளின் கட்டளையின் படி, தேவையான போது டி. என். ஏ. விலுள்ள இரசாயனக் குறியீடுகளை புரதங்களாக மாற்றி மொழி பெயர்த்து, உடலின் பல்வேறு செயல்பாடுகளை ஒவ்வொரு உயிரணுவும் மேற்கொள்கின்றன.

ஒருவருக்கு குழந்தை பிறக்கும் போதும், இந்த டி. என். ஏ. தாய் தந்தை யிடமிருந்து குழந்தைக்குச் செல்கிறது.
இப்படித் தான் ஒருவரது திறமைகள், குணாதிசயங்கள், நோய்கள் என எல்லாம் ஒரு சந்ததியி லிருந்து மற்றொரு சந்ததிக்குக் கடத்தப்ப டுகின்றன.

பெற்றோரிடமிருந்து குழந்தைக்குச் செல்லும் டி. என். ஏ. வில் இரு விதமான இரசாயன மாற்றங்கள் இருக்கும். ஒன்று, டி. என். ஏ. வின் உட்புறத்திலுள்ள இரசாயன மூலக் கூறுகளில் ஏற்படும் மாற்றங்கள். 

மற்றொன்று டி. என். ஏ. வின் வெளிப் புறத்தில் ஏற்படும் இரசாயன மாற்றங்கள். இவ்விரு வகையான இரசாயன மாற்றங்களும் டி. என். ஏ. விலிருந்து உருவாகும் புரதங்களைப் பாதிக்கின்றன.

இவ்விரு மாற்றங்களும் மரபணு செயல் பாடுகளைத் ‘தூண்டி விடுவது’ அல்லது ‘முற்றிலும் தடுப்பது’ என இருவிதமான பாதிப்புகளை ஏற்படுத்து கின்றன. 
அதனால், பெற்றோரிட மிருந்து மரபணுக்கள் குழந்தைக்குச் செல்லும் போது அந்த மரபணுக்களில் ‘மரபணுச் செயல்பாட்டைத் தூண்டி விடுவது தடுப்பது’ என இரு வகையான இரசாயன மாற்றங்களில் எது இருக்கிறதோ அதுதான் குழந்தைக்குச் செல்லும்.

ஒருவரது குணாதிசயம் அவரது சந்ததிக்கு மரபியல் அடிப்படையில், டி. என். ஏ. மூலம் எப்படிச் செல்கிறது என்பது பற்றிய அடிப்படைப் புரிதல் உங்களுக்கு இப்போது ஏற்பட்டிருக்கும்.

சரி, நாம் இப்போது கட்டுரைச் செய்திக்கு வருவோரும். அதாவது ஒருவரது குணாதிசயங்கள், திறமைகள், நோய்கள், போன்றவை தான் டி. என். ஏ.

மரபணுவில் பதியப்பட்டு அவரது சந்ததிக்குச் செல்கிறது என்று நமக்கு தெரியும். ஆனால், சிறுவயதில் ஒருவரது வாழ்க்கை.

சூழல் வறுமையாக இருந்ததா அல்லது செல்வச் செழிப்பாகத் திகழ்ந்ததா என்பது அவரது மரபணுக்கள் அல்லது ஜீன்களில் பதிவாகி விடுகிறது என்கிறது இங்கிலாந்தின் பிரிஸ்டல் பல்கலைக் கழகத்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று.

செல்வச் செழிப்பான வாழ்க்கை முறையும் வறுமையான வாழ்க்கை முறையும் ஒருவரின் மரபணுக்களை எதிர் பாராத விதங்களில் பாதிக்கிறது.

ஆடம்பரமான வாழ்க்கை வாழும் குழந்தைகளுக்கு ஒரே வகையான மரபணுக்கள் இருந்தாலும், எந்த மரபணு தூண்டப்பட வேண்டும், எந்த மரபணு தடுக்கப்பட வேண்டும்

என்பதை அவர்களது வாழ்க்கை சூழலே நிர்ணயிக்கிறது என்கிறார் ஆய்வாளர் மார்கஸ் பெம்ப்ரே. மரபணுக்களை பாதிக்கும், ஒரு டி. என். ஏ. வின் மேற்புறத்தில் ஏற்படும் இந்த வகை இரசாயன மாற்றங்கள் ‘எபிஜெனசிஸ்’ என்றழைக்கப் படுகிறது.
மேலும் இந்த வகையான மாற்ற ங்களுக்கும் உளப்பிணி (Psychosis) மனச்சிதைவு நோய் (Schizophrenia) மற்றும் இரு முனையப் பிறழ்வு Bipolar disorder) ஆகிய சில நோய்களுக்கும் தொடர்பி ருக்கிறது என சமீபத்தில் ஆய்வுகளில் கண்டறியப் பட்டுள்ளது.

கடந்த 1958ம் ஆண்டு பிறந்த 3 ஆயிரம் பேரில், பணக்கார வீட்டில் பிறந்த 20 பேர் மற்றும் ஏழை வீட்டில் பிறந்த 20 பேர் என மொத்தம் 40 பேரின் இரத்தத்தி லிருக்கும்

வெள்ளை இரத்த அணுக்க ளிலிருந்து டி. என். ஏ. வை பிரித்தெடுத்து, அதில் டி. என். ஏ. வின் மேற்புறத்தில் ஏற்படும் எபிஜெனிடிக் இரசாயன மாற்றங்கள் ஏதும் இருக்கின்றனவா என்று பரிசோதிக்கப் பட்டது. 

இவ்வகையான டி. என். ஏ. மாற்றங்களில், ஒரு மரபணுவின் டி. என். ஏ. வில் மீதைல் இரசாயன மூலக்கூறு சேர்க்க ப்பட்டிருந்தால் அம்மரபணு க்களின் செயல்பாடுகள் தடுக்கப்பட்டும்,

மீதைல் இரசாயன மூலக்கூறுகள் சேர்க் கப்படாத மரபணுக்களின் செயல்பாடுகள் தூண்டப் பட்டும் இருக்கும் என்பது இயல்பு.

ஆய்வில் கலந்துகொண்ட 40 பேரின் டி. என். ஏ. வில் சுமார் 20 ஆயிரம் இடங்களில் இவ்வகையான இரசாயன மாற்றங்கள் இருக்கி ன்றனவா என்று பரிசோதிக்கப் பட்டது. 

பரிசோதனையின் முடிவில் வறுமையில் வாழ்ந்த வர்களின் டி. என். ஏ. மாற்றங் களுக்கும், செல்லவச் செழிப்பில் வாழ்ந்த வர்களின் டி. என். ஏ. மாற்றங் களுக்கும், 

பரிசோதி க்கப்பட்ட சுமார் மூன்றில் ஒரு பங்கு டி. என். ஏ. இடங்களில் நிறைய வித்தியா சங்கள் இருந்தது கண்டறியப் பட்டது.

அதாவது வறுமையில் வாடியவ ர்களின் டி. என். ஏ. வில் சுமார் 1252 இடங்களில் மீதைல் இரசாயனக் கூறுகள் சேர்க்கப் பட்டிருந்தன.

ஆனால் செல்வச் செழிப்பில் வாழ்ந்தவர் களின் டி. என். ஏ. வில் 545 இடங்களில் மட்டுமே இக்கூறுகள் சேர்க்கப் பட்டிருந்தன.
டி. என். ஏ. இராசாயன மாற்ற ங்களால் பாதிக்கப் பட்டுள்ள மரபணுக்கள் தனித்தனி யானவை அல்ல என்பதும் மாறாக குறிப்பிட்ட மரபணுக் குழுக்களைச் சேர்ந்தவை என்பதும் குறிப்பிடத் தக்கது.
 
ஆக, ஒரு மரபணுக் குழு பாதிக்கப் பட்டால் அதன் கட்டுப்பாட்டில் இருக்கும் உடலியல் செயல்பாடுகள் அனைத்தும் பாதிக்கப்படும் என்பதே இயற்கை.

இவ்வகையான டி. என். ஏ. இரசாயன மாற்றங்கள் ஒரு சந்ததியி லிருந்து மற்றொரு சந்ததிக்கும் கடத்தப்படுகின்றன என்று நம்பப் படுகிறது. 

உதாரணமாக எலிகளில் நடத்தப்பட்ட சோதனையில் இவ்வகையான எபிஜெனடிக் இரசாயன மாற்றங்கள் ஒரு சந்ததியி லிருந்து அதற்கு அடுத்த 2 சந்ததிகளுக்கு கடத்தப்பட்டது தெரிய வந்தது.

இப்பரிசோதனை க்கு உட்படுத்தப் பட்டவர்கள் அனைவரும் நடுத்தர வயதானவர்கள் என்பதால், இந்த டி. என். ஏ. இரசாயன மாற்றங்கள் எந்த வயதில் ஏற்பட்டிருக்கும் என்பது பற்றி தெரியவில்லை.

சிசுப்பருவம், குழந்தைப் பருவம் என எந்தக் கால நிலையிலும் இம்மாற்றங்கள் தோன்றியிருக்கக் கூடும்.  ஆனால், இம்மாற்றங்கள் எந்த காலத்தில் தோன்றி யிருந்தாலும், நடுத்தர வயது வரை அழியாமல் இருந்திருக் கின்றன என்பதே உண்மை என்கிறார் ஆய்வாளர் பெம்ப்ரே.

இவரது அடுத்தகட்ட ஆய்வு, இம்மாற்றங்கள் தோன்றிய காலத்தைக் கண்டுபிடிப்பதே, இதற்காக சுமார் 14 ஆயிரம் மக்களின் இரத்தத்தை சேகரித்து வைத்திருக்கும் ஒரு பெரும் ஆய்வை பயன்படுத்தப் போகிறார் பெம்ப்ரே.

இந்த 14 ஆயிரம் பேரையும் குழந்தைப்பருவம் முதல் கண்காணித்து வருகிறது இந்த ஆய்வுக்குழு. என்ன,

இப்போது புரிந்திருக்குமே, தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை மட்டுமல்ல, அதையும் தாண்டி, சில பல சந்ததிகள் வரை தொடரக் கூடியது என்று! 

அது மட்டு மல்லாமல், ஒருவரது வாழ்க்கைச் சூழலும் மரபணுக்களின் பதிந்து போவதால், ஒருவரின் டி. என். ஏ. வை பரிசோதனை செய்தால் போதும், அவரது வரலாற்றையே சொல்லி விடலாம்.
Tags: