ஆதார் விவரம் கேட்பது போல தொடர் திருட்டு !

ஆதார் அட்டைக்கான விவரங்களை சரிபார்ப்பது போல வீட்டுக்குள் நுழைந்து கொள்ளை யடித்தவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இது குறித்து சீனியர் காவல் கண்காணி ப்பாளர் சந்திரன் கூறியது: 
புதுச்சேரி வெங்கட்டா நகர் பகுதியை சேர்ந்த பேபி (74) என்பவர் கடந்த ஜனவரி 21-ஆம் தேதி பெரிய கடை காவல் நிலை யத்தில் புகார் அளித்தார்.

அதில் ஆதார் அட்டை விவரங்களை கேட்பது போல வீட்டுக்கு வந்த 2 பேர் நகைகளை கொள்ளை யடித்துச் சென்றனர் என்று தெரிவித்தார். 

இது குறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப் பட்டது. கண்காணிப்பு கேமராக்களில் பதிவான தகவல்கள், செல்லிடப்பேசி சிக்னல் போன்றவற்றின் அடிப்படையில் விசாரித்ததில் வேலூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த விஜய் (30), 

கனேஷ் ஆகியோர் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இந்த நிலையில் விஜய் கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி கைது செய்யப் பட்டார். அவரிடம் இருந்து 8 சவரண் நகை பறிமுதல் செய்யப் பட்டது. 

ஆனால் கனேஷ் அடிக்கடி இடத்தை மாற்றி யதாலும் செல்லிடப்பேசி எண்ணை மாற்றியதாலும் அவரை கைது செய்ய முடிய வில்லை.

இந்த நிலையில் கிடைத்த ரகசிய தகவலின் படி கனேஷ் இருக்கும் இடம் தெரியவந்தது. இதனை யடுத்து கனேஷ் செவ்வாய்க் கிழமை கைது செய்யப் பட்டார். 

விசாரணையில் முத்தியால் பேட்டை, உருளையன் பேட்டை காவல் நிலைய எல்லையிலும் சிதம்பரத்திலும் நடைபெற்ற திருட்டு சம்பவ ங்களில் சம்பந்தம் இருப்பது தெரியவந்தது.

அவரிடம் இருந்து ரூ. 10 லட்சம் மதிப்பிலான 40 சவரண் நகை பறிமுதல் செய்யப்பட்டது. விஜய், கனேஷ் மீது தமிழகத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. 

இவர்கள் ஆதார் அட்டை சரிபார்ப்பதாகவும், தூய்மை இந்தியா திட்டத்தில் கழிவறை கட்டி கொடுப் பதாகவும் கூறி கொள்ளையில் ஈடுபட் டுள்ளனர். சென்னை போன்ற இடங்களில் குடிநீர் இணைப்பு தருவதாக உள்ளே புகுந்து கொள்ளை யடித்துள்ளனர். 

இவர்கள் தனியாக வசிக்கும் வயதான வர்களையே இலக்கு வைத்து கொள்ளை யடித்து வந்தனர். தற்போது கைது செய்யப்பட்ட கனேஷிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று சந்திரன் தெரிவித்தார். 

 கைது செய்யப்பட்ட கனேஷ் ஆம்பூர் துத்திபேட் பகுதி தேமுதிக கவுன்சிலரின் கணவன் என கூறப்ப டுவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
Tags: