தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.. அம்பானி பிரதர்ஸ் !

இந்தியாவில் போட்டி மிகுந்து டெலிகாம் துறையில், ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் தனது 4ஜி சேவையை 2015ஆம் ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் அறிமுகப்படுத்த, அனில் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவன உதவியை நாடியுள்ளது.
 
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தன்வசம் உள்ள ஸ்பெக்டரத்தை ‘trading and sharing' முறையில் முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனத்தின் 4ஜி சேவைக்காகப் பிகிர திட்டமிடப்பட்டுள்ளது. 

இதற்கான பேச்சுவார்த்தை துவங்கியதாக அனில் அம்பானி ரிலையன்ஸ் குழுமத்தின் வருடாத்திர கூட்டத்தில் அறிவித்தார்.

அனில் அம்பானி 

இந்திய டெலிகாம் துறையில் RJIO மற்றும் RCOM இணைந்து செயல்படுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் என் அண்ணனுடன் இணைவதில் மிகுந்த அளவற்ற மகிழ்ச்சி அடைகிறேன் எனப் புதன்கிழமை நடந்த ரிலையன்ஸ் குழுமத்தின் வருடாந்திர கூட்டத்தில் அனில் அம்பானி பேசினார்.


RJIO-RCOM ஸ்பெக்டரம் பங்கீடு.. 

இந்த இணைப்பின் மூலம் ரிலையான்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவன வாடிக்கையாளர்கள் RJIOவின் மேம்படுத்தப்பட்ட சேவை பெறுவார்கள்.

வர்த்தகம் மற்றும் பங்கீடு 

மத்திய அரசு அடுத்தச் சில வாரங்களில் வெளியிட உள்ள வர்த்தகம் மற்றும் பங்கீடு எனப்படும் ‘trading and sharing' வழிமுறைகளைக் கொண்டு இந்த இணைப்பு நடக்க உள்ளதாகவும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.


தம்பி உடையான் படைக்கு அஞ்சான்... 

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர் கணக்கில் இந்தியாவில் 4வது மிகப்பெரிய தொலைத்தொடர்பு சேவை நிறுவனமாகும். இந்நிலையில் ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனத்தின் 4ஜி சேவையை இந்தியாவில் அம்பானி பிரதர்ஸ் இருவரும் இணைந்து அறிமுகப்படுத்த உள்ளனர்.

மீண்டும் இணைப்பு.. 

பல வருடங்களுக்கு முன் அனில் மற்றும் முகேஷ் ஆம்பானி சில முக்கிய வர்த்தகத்தில் ஒன்றிணைந்து செயல்பட்டனர், ஆனால் அவரது தந்தை துருபாய் அம்பானியின் மறைவிற்குப் பின்னர் இருவரும் தனித்தனியாகவே தங்களது வர்த்தகம் மற்றும் தொழில்துறைகள் கவனித்து வருகின்றனர்.


போட்டி.. 

ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் 4ஜி சேவை அறிமுகப்படுத்தினால் இந்திய டெலிகாம் துறையில் மிகப்பெரிய போட்டி உருவாகும். குறிப்பாக ஏர்டெல், ஐடியா போன்ற நிறுவனங்களால் அதிகளவில் லாபத்தைப் பெற முடியாது.
Tags: