ஃபேஷன் படிக்கலாம்… பிரமாதமா ஜெயிக்கலாம் !





ஃபேஷன் படிக்கலாம்… பிரமாதமா ஜெயிக்கலாம் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
ட்டப் படிப்புக்கும் பார்க்கிற வேலைக்கும் சம்பந்தமில்லை…’ என்ற திரைப்பாடல், பலரின் வாழ்க்கையில் நிஜமாகிறது. 


அதிலும், இன்று எல்லா துறைகளிலும் வழங்கப்படும் ‘சப்போர்ட்டிவ் கோர்ஸ்’கள் எனப்படும் துணைப் படிப்புகள், ஒரு துறையில் பட்டம் பெற்றாலும்,

மற்றொரு துறையில் வேலை கிடைக்கும் வாய்ப்பை அருகில் கொண்டு வந்து நிறுத்துகின்றன.


”அந்த வகையில், பொறியியல் தொடங்கி, இலக்கியம், கணினி, அறிவியல் என எந்தப் பட்டப்படிப்பு படித்தவர் களுக்கும் ஆர்வத்தை தூண்ட வல்லது, ஃபேஷன் துறை. 

இந்தத் துறையில் வழங்கப்படும் டிப்ளோமா படிப்புகள், திறமையுடன் கைகோத்தால்,

சிறப்பான எதிர்காலம் நிச்சயம்!” என்கிறார், மதுரை, ட்ரீம் ஸோன் கல்வி நிறுவன மேலாளர் தங்க ராஜேஸ்வரி.
 
”ஃபேஷன் என்கிற வார்த்தையே, புதுமையின் உறைவிடம்தான். காலத்துக்கு ஏற்ற மெருகேற்றலுடன் வளர்ந்து கொண்டே இருக்கும் கிரியேட்டிவ் துறை. 

எனவே, ஃபேஷன் சார்ந்த படிப்புகளுக்கான எதிர்காலம், எவர்கிரீன்.

இன்று இந்தியாவில் மட்டுமே ஏறக்குறைய 400-க்கும் அதிகமான பிராண்டுகள் (ரெடிமேட் கார்மென்ட்) விற்பனையில் உள்ளன. 

 

தவிர, எண்ணற்ற டெக்ஸ்டைல் நிறுவனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

இந்த நிறுவனங்களில் எல்லாம் டிசைனிங் பணி வாய்ப்புகள் விரிந்து கிடக்கின்றன. 

சொந்தமாக பொட்டீக், டிரெஸ் டிசைனிங், மீடியாவில் டிசைனிங் வாய்ப்புகள் என்று திறமை இருப்பின், இதில் ஒருவர் தனக்கான இடத்தை நிலை நிறுத்திக் கொள்ளலாம். 


இன்று வருடத்தின் எல்லா மாதங்களிலும் ஏதோ ஒரு காரணத்துக் காக ஷோரூம்களில் பில் போடும் குடும்பங்கள் அதிகரித்து வருகின்றன.

பிளவுஸ் டிசைனிங், புடவை டிசைனிங் போன்றவற்றுக்கே பல ஆயிரங்கள் வசூலிக்கப் படுவது கண்கூடு”

என்று சொன்ன தங்க ராஜேஸ்வரி, ஃபேஷன் துறை டிப்ளோமா படிப்பு பற்றி பேசினார்.

”ஃபேஷன் துறை படிப்புகளில், உடையை ஸ்கெட்ச் செய்து அந்த பேட்டர்னை தயாரிப்பது முதல், சாஃப்ட்வேர் டிசைனிங்,

தனியாக ஒரு பொட்டீக் வைத்து நடத்துவது தொடர்பான ஃபேஷன் மேனேஜ்மென்ட் வரை அனைத்தும் கற்றுத் தரப்படும். 

‘டிப்ளமோ இன் ஃபேஷன் டிசைனிங்’ ஒன் இயர் கோர்ஸாக வழங்கப் படுகிறது.

இதற்கான தகுதி, டென்த் அல்லது ஐ.டி.ஐ அல்லது அதற்கு இணையான படிப்பு. அட்வான்ஸ் டிப்ளோமா இன் ஃபேஷன் டிசைனிங் அல்லது டெக்னாலஜி இரண்டு வருட கோர்ஸ். 

இதற்கான தகுதி ப்ளஸ் டூ அல்லது அதற்கு இணையான படிப்பு.

மாஸ்டர் டிப்ளோமா இன் ஃபேஷன் டிசைனிங் படிக்க யு.ஜி அல்லது அதற்கு இணையான படிப்பு தகுதியாக இருக்கிறது. 

இந்த படிப்புகளுக் கான ஃபீஸ் என்பது நாம் படிக்கும் இடம், காலேஜைப் பொறுத்தது.

திறமை, கற்பனை, ஃபேஷன் அப்டேட்களுடன் தொடர் முயற்சி இருந்தால், நிச்சயம் சாதிக்கலாம்!” என்று நம்பிக்கை யூட்டுகிறார் தங்கராஜேஸ்வரி.

பி.பி.ஏ படித்து முடித்துவிட்டு, ஃபேஷன் துறை ஆர்வத்தால், அட்வான்ஸ் டிப்ளோமா இன் ஃபேஷன் டிசைனிங் முடித்து,

இன்று ஒரு திரைப்  படத்துக்கு காஸ்ட்யூம் டிசைன் செய்யும் வாய்ப்பைப் பெறும் அளவுக்கு உயர்ந்திருப்பவர்,

மதுரையைச் சேர்ந்த நதியா. ”சின்ன வயசுல இருந்தே ஃபேஷன் டிசைனிங்தான் ஆசை. 

ஆனா, இதுல பெருசா வேலை வாய்ப்புகள் இல்லைனு சொல்லி, பி.பி.ஏ படிக்க வெச்சுட்டாங்க.

வீட்டோட விருப்பத்தை நிறைவேற்றின பிறகு, என் விருப்பத்துக் காக ஃபேஷன் டிசைனிங் சேர்ந்து, ஒரு கிரியேட்டரா கிட்டேன். 


டிசைன் செய்யும் ஒவ்வொரு ஆடையிலயும் புதுமையைக் கொண்டு வர்றதுக்காக ரொம்பவே அக்கறை எடுத்துப்பேன்.

சொந்தமா ஒரு பொட்டீக் ஆரம்பிக்க ணும்ங்கிறது தான் லட்சியம். இதுக்கு நானே பணம் சேர்க்கணும். 

இப்போ ஒரு குறும்படத்துக்காக டிரெஸ் டிசைன் பண்ணிட்டு இருக்கேன்.

அடுத்ததா, ஒரு படத்துக்கும் காஸ்ட்யூம் டிசைன் பண்ணப் போறேன்” என்று படபடத்த நதியா,

”என்னோட பி.பி.ஏ படிச்ச வங்களுக்கு எல்லாம் முன்னதாவே இப்போ நான் சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டேன்.

இது என் பேரன்ட்ஸுக்கு மட்டுமில்ல, ஃபேஷன் ஃபீல்டின் வேலைவாய்ப்பை சந்தேகிச்சு,

பிள்ளைங்களோட வண்ணக் கனவுகளை மறுக்கிற எல்லா பேரன்ட்ஸுக்கும் நான் கொடுக்கிற உறுதிமொழி!” என்கிறார் ஸ்மார்ட்டாக!
Tags: