கீழ்வாதம் என்பது பொதுவாக கால் பெரு விரலையே தாக்கும். சிலருக்கு மணிக் கட்டு, முழங்கை, முழங்கால், முதுகென்பு போன்ற வற்றையும் பாதிக்கும்.
மூட்டுக்களில் யூரிக் அமில படிவம் காணப்படு மாயின் அம்மூட்டுப் பகுதியில் வீக்கம், எரிச்சல், வெப்ப உணர்வு விறைப்புத் தன்மை மற்றும் வலி ஏற்படும் என்கிறார் வைத்திய நிபுணர் கிர்ஷாந்த்.

கீழ்வாதம் என்றால் என்ன?

எங்கெல்லாம் இரண்டு எலும்புகள் இணைகி ன்றனவோ, அந்த இணையும் இடம் மூட்டு எனக் கூறப்படுகிறது. 

ஒவ்வொரு மூட்டின் இணைப்பு களையும் மூடி இருக்கும் ரப்பர் போன்ற அமைப்பு குருத்தெலும்பு (CARTILAGE)என அழைக்கப் படுகிறது.

இது குஷன் (CUSHION) ஆகவும் அதிர்ச்சியைத் தாங்கும் அமைப்பாகவும் செயல்படுவதால் எலும்புகள் ஒன்றுடன் ஒன்று உரசி தேயாமலும், சேதமடையாமலும் பாதுகாக்கிறது.

இந்த குருத் தெலும்பு ஸினோவியல் திரவம் (SINOVIAL FLUID) எனும் பசை போன்ற திரவத்தால் மசகுத் தன்மை அடைகிறது.
சிவந்த உதடுக்கு வீட்டிலேயே லிப் கிளாஸ் தெரியுமா?
இந்த திரவம் மூட்டுக்கள் இதமாய் இயங்க உதவுகிறது. கீல்வாதத்தின் போது, மூட்டுகளில் உள்ள குருத்தெலும்பில் தேய்வு ஏற்படுகிறது. இணக்கத் தன்மை கொண்டதாகவும் இருக்கும்.

கீழ்வாதம் எப்படி பாதிக்கிறது?
கீழ்வாதம், எடையைத் தாங்கும் உங்கள் உடல் உறுப்புகளான மூட்டுகளில் இடுப்பு, முழங்கால்கள் மற்றும் முதுகெலும்பை முக்கிய மாகப் பாதிக்கிறது. பெண்களுக்கு கைகளயும் பாதிக்கலாம்.

குறிப்பாக, விரல்களின் மூட்டுக்களையும், கட்டைவிரல் அடிப்பகுதி யையும் பாதிக்கலாம். முக்கியமான பிரச்சினை எதுவெனில் வலி தான்.
விளக்கெண்ணெய்யை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்வது நல்லதா?
பாதிக்கப்பட்ட மூட்டில் சாதாரண வலியில் இருந்து தாங்க முடியாத வலி வரை பலவிதமாக வலி ஏற்படலாம். 

அதிகமாக செயற்படும் போது தாங்க முடியாத வலியால் பாதிக்கப் படலாம் என்பதோடு, நடக்க முடியாத நிலையும் ஏற்படலாம்.

சில சமயங்களில், பாதிக்கப்பட்ட மூட்டில் வீக்கம் ஏற்படும். காலையில் எழுந்திருக்கும் போது மூட்டுகளில் விறைப்புத் தன்மையையும், சில சமயங்களில் இலேசான வலியையும் உணரலாம்.

உறக்கத்தின் போது நீண்ட நேரம் மூட்டு இயங் காததால், காலையில் இந்நிலை ஏற்படும். சில நிமிடங்களில் சரியாகி, சாதாரண நிலைக்கு வந்து விடும்.

இந்த நோயின் பாதிப்பு கூடும் போது, வலிகள், விறைப்பு உணர்வு போன்றவை ஒரு நாளில் பல முறைகள் ஏற்பட வாய்ப்புண்டு.

கீழ் வாதத்தை சமாளித்து கட்டுப் பாட்டுடன் வாழும் விதம், மருந்துகளை சரிவர உட்கொள் வதுடன் மட்டுமின்றி, உடற் பயிற்சி, வாழ்க்கை முறை மாற்றங்கள் 

மற்றும் பலவற்றைப் பற்றிய ஒருங்கி ணைந்த திட்டத்தை மேற் கொள்ள வைத்தி யரிடம் ஆலோச னைகளை பெற்று அதன்படி செயற்படவும்.

Gout எனப்படும் கீழ்வாதம் ஏற்படக் காரணம் என்ன?

மூட்டுக்களில் ஏற்படும் யூரிக்க அமில படிவினால் Gout ஏற்படு கின்றது.

Gout ஏற்பட் டுள்ளது என்பதை சாதாரண மனிதரால் எவ்வாறு அறிந்து கொள்ள முடியும்?

Gout கீழ் வாதமானது பெண்களை விட ஆண் களையே அதிகளவில் தாக்கு கின்றது. பொதுவாக கால் பெரு விரலையே தாக்கும் சிலருக்கு மணிக் கட்டு, முழங்கை, முழங்கால், முதுகென்பு போன்ற வற்றையும் பாதிக்கும்.
மூட்டுக் களில் யூரிக் அமில படிவம் காணப்ப டுமாயின், அம் மூட்டுப் பகுதியில் வீக்கம், எரிச்சல், வெப்ப உணர்வு விறைப்புப் தன்மை மற்றும் வலி ஏற்படும்.

பொதுவாக வாத நோயாளர் களுக்கும் வலி ஏற்படுவதை போன்று வாத Gout நோயாளர்க ளுக்கும் வலி ஏற்படுமா?

Arthritis மற்றும் Gout என்பன மாறுப்பட்ட நோய் களாகும். Gout ஆல் பாதிக்க ப்பட்டவர்க ளுக்கு இரு வகையான வலிகள் ஏற்படலாம். ஒன்று மூட்டின் உள்ளே படிமங் களில் ஏற்படும் வலி.

மற்றையது தோல் பகுதியில் ஏற்படும் வலி. படிமங் களில் ஏற்படும் வலியை விட, தோலில் ஏற்படும் வலி அதிகளவில் வேதனையை தரும்.
மேட்டுப்பாளையம் மட்டன் குழம்பு செய்வது எப்படி?
காரணம், தோலில் நூல் போன்ற சிறிய திணிவு ஒன்று படுமேயா னாலும் கூட தாங்கிக் கொள்ள முடியாத அளவு வலி ஏற்படு வதுடன், தோல் சேதமடையும் வாய்ப்புக் களும் அதிகம்.

Gout ஏற்படுவ தற்கான காரணம் என்ன?

Gout ஏற்படுத்து வதற்கு முதன்மைக் காரணியாக தாய்வழி கடத்தல் காணப்ப டுகின்றது. பரம்பரையில் யாருக் கேனும் இந்நோய் இருந்திருந் தால் பரம்பரை அலகுகள் மூலம் கடத்தப்ப டலாம்.

சிறுநீரக நோயாள ர்களுக்கு ஏற்படலாம். காரணம் குருதியில் அதிக ரிக்கும் யூரிக்கமில கழிவுகள் சிறுநீரின் மூலம் சரியாக வெளி யேற்றப் படாமை காரணமாக மூட்டுக்களில் யூரிக்கமில படிமங்கள் தோன்றி Gout ஐ உருவாக்கும்.

பியூரின் அடங்கிய உணவுகள் (போயி கிராஸ், நண்டு, சாம்பென், போரம்) மற்றும் அல்ககோல் பாவனையாலும் ஏற்படலாம். 

குருதி அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயாளர் களுக்கு எற்படக்கூடிய சாத்தியக் கூறுகள் அதிக ளவில் உள்ளது. 

காரணம் அவர்கள் குறிப்பிட்ட சில மாத்திரைகளை தொடர்ந்து எடுத்து வருவதனால் உடலில் ஏற்படும் மாத்திரை இசைவாக்கத்தால் கழிவகற்றல் குறை வடைந்து, யூரிக் அமிலத்தின் அளவு உடலில் அதிகரிக்கும்.
இதய நோயாளர் களுக்கும் ஏற்பட வாய்ப் புண்டு. (RBC) செங்குருதி சிறுதுணி க்கையின் சடுதியான அதிகரிப்பு காரண மாக யூரிக் அமில உற்பத்தி கூடி அவை படியும் வாய்ப்பு க்கள் உண்டு.

இரத்த புற்று நோயாளர் களுக்கும் ஏற்பட வாய்ப்பு ண்டு. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தோ ருக்கும் ஏற்படலாம்.

Gout இதற்கான சிகிச்சை முறைகள் என்ன?

உடலில் யூரிக் அமிலம் படிவதை தடுப்பதே ஒரே சிகிச்சை முறையாகும். இதற்காக சிறுநீர், மலம் வெளியே றுவதை சீர்படுத்தும் சிகிச்சை முறைக ளையே அதிகளவில் பரிந்துரை செய்கின் றோம்.
கீழ்வாதம் (Gout) குறித்த அறிகுறிகள் காணப்படு மாயின், வைத்தி யரை நாடி ஆலோ சனை பெற்று அத்துடன் Gout இற்கான விசேட சிகிச்சை பெற்றுக் கொள்ளவும்... வைத்திய நிபுணர் கிர்ஷாந்த்.