ஒரு கொடூரனின் கரங்களில் சிக்கிய இரு உயிர்கள் !

என்னால் தமரா இல்லாமல் வீட்டில் இருக்க முடியவில்லை. நானும் அவளும் நீண்ட காலம் காதலித்தே திருமணம் செய்து கொண்டோம்.
ஒரு கொடூரனின் கரங்களில் சிக்கிய இரு உயிர்கள் !
ஆயினும், அப்போதிருந்தே தமராவின் தாய் அனோமாவுக்கு என்னைப் பிடிக்க வில்லை. எங்கள் இருவரையும் பிரிப்பதற்கு பல்வேறு சதித்திட்டங்களை தீட்டினாள்.

பிறகு நான் தமராவை அவளுடைய தாய்க்குத் தெரியாமல் அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டு என்னோடு அழைத்துச் சென்று விட்டேன்.

எனினும், அதன் பின்னும் அவர் எங்கள் இருவரையும் நிம்மதியாக வாழ விடவில்லை. தமராவிடம் என்னைப் பற்றி குறையாகக் கூறி எனக்கும் தமராவுக்கும் இடையில் பிரச்சினைகளை உண்டு பண்ணினாள்.

அது தான் தமரா என்னை விட்டு சட்ட ரீதியாகப் பிரிய முடிவெடுத்ததற்கு காரணம். இதனால் நான் பெரும் அவமானத்துக்கு உள்ளானேன். எனவே தான் ஆத்திரத்தில் இருவரையும் கொலை செய்யத் திட்டமிட்டேன்.
இது அனோமா என்ற 47 வயதான பெண்ணொருவரைக் கொலை செய்த சந்தேக நபர் போலீஸ் விசாரணையின் போது வழங்கிய வாக்குமூலத்தின் ஒரு பகுதியாகும்.

எனினும், இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது சந்தேக நபர் தொடர்பாக

கிடைக்கப் பெற்ற தகவல்கள் சந்தேக நபர் வழங்கிய இந்த வாக்கு மூலத்துக்கு பொருத்தமானதாக இருக்கவில்லை.

எனவே, இச்சம்பவம் தொடர்பாக மிகவும் துல்லியமாகத் தமது விசாரணைகளை கிரிஎல்ல போலீஸார் முன்னெடுத்திருந்தனர்.

அதன் அடிப்படையில், இச்சம்பவம் தொடர்பாக நோக்குவோமானால், அனோமா கிரிஎல்ல பகுதியை வசிப்பிடமாகக் கொண்டவள்.

திருமணமாகி இளம் வயதிலேயே கணவனை இழந்த நிலையில் தனது ஒரே மகள் தமராவுடன் தனியாக வாழ்ந்தாள். ஒரு தனி மனுஷியாய் நின்று தமராவை வளர்த்து ஆளாக்கினாள்.

எனினும், அவள் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீர் போல் பயனற்றுப் போனது.

தமராவுக்கு 19 வயதாகவிருக்கும் போது இரத்தினபுரி பிரதேசத்தைச் சார்ந்த சுகந்தாவின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது.) அறிமுகம் கிடைத்தது. ஆரம்பத்தில் இருவரும் நல்ல நண்பர்களாகவே பழக ஆரம்பித்தார்கள்.
ஒரு கொடூரனின் கரங்களில் சிக்கிய இரு உயிர்கள் !
எனினும், நாட்கள் செல்லச் செல்ல நட்பு என்னும் திரை மெல்ல மெல்ல விலகி. இருவரும் காதல் எனும் வானில் சிறகடிக்க ஆரம்பித்தார்கள்.

தமரா சுகந்தாவை கண் மூடித்தனமாக நம்பிக் காதலித்தாள். இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசி தமது காதல் உறவினை வளர்த்துக் கொண்டனர்.

இவ்வாறு சுமார் 6 மாதங்கள் தொடர்ந்த இருவருக்கும் இடையிலான காதல் விவகாரம் அனோமாவின் காதுகளுக்கு எட்டியது.

எனினும் அனோமா வழமையாக எல்லா தாய்மார்களையும் போல தமராவை கண்டிக்க நினைக்கவில்லை. மாறாக, அவளிடம் பக்குவமாகக் கேட்டாள்.

இதன்போது தமரா, அம்மா நான் சுகந்தா என்பவரைக் காதலிக்கின்றேன். அவரும் என்னைக் காதலிக்கின்றார். என்று கூறினாள்.

இதனைத் தொடர்ந்து அதுபற்றி மேலதிகமாக எதுவும் தமராவிடம் அனோமா கேட்கவில்லை. மௌனமாக இருந்தாள். எனினும், அனோமா அத்துடன் நின்று விடவில்லை.
ஒரு பொறுப்புள்ள தாயாக தமரா காதலிக்கும் நபர் பற்றி விசாரித்துப் பார்க்க ஆரம்பித்தாள்.

அவ்வாறு விசாரித்துப் பார்த்ததில் சுகந்தா தன் மகளுக்கு பொருத்தமானவன் அல்ல என்பதை அவள் புரிந்து கொண்டாள். எனவே, அனோமா மகளிடம் இது பற்றி பக்குவமாய் எடுத்துக் கூறினாள்.

மகள், நீங்கள் சுகந்தாவை விட்டு விலகுவது நல்லது. அவன் உனக்குப் பொருத்தமானவன் அல்ல. நீ அவனை திருமணம் செய்து கொண்டால் உன் வாழ்க்கையே நரகமாக மாறிவிடும்.

உனக்கு தெரியும் தானே அம்மா எப்பவும் உன்னுடைய விருப்பத்துக்கு குறுக்காக இருக்க மாட்டேன் என்று.

அவன் மட்டும் நல்லவனாய் இருந்திருந்தால் உன்னுடைய காதலுக்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் நான் அவனையே உனக்குத் திருமணம் செய்து வைத்திருப்பேன்.

எந்த தாயும் தன் பெற்ற பிள்ளை நல்ல விதமாய் வாழ வேண்டும் என்று தானே நினைப்பாள் என்று எல்லாம் தமராவுக்கு பக்குவமாய் புரிய வைக்க முற்பட்டாள்.
ஒரு கொடூரனின் கரங்களில் சிக்கிய இரு உயிர்கள் !
எனினும், அவை அனைத்துமே செவிடன் காதில் ஊதிய சங்கு போல் தமராவுக்கு பயனற்றதாக விருந்தது. தமராவின் வயதும், சுகந்தா மீது இருந்த காதலும் அதை ஏற்றுக் கொள்ள மறுத்தது.

அச்சம்பவத்துக்கு பின்னர் தமரா, சுகந்தாவை சந்தித்து தாய் கூறிய அனைத்தையும் ஒன்று விடாது அவனிடம் கூறினாள்.

அத்துடன், எங்கள் அம்மாவுக்கு உன்னைப் பிடிக்கவில்லை. எனவே, என் அம்மாவின் சம்மதத்துடன் எங்களுடைய திருமணம் நடைபெறும் என்பது இனி சாத்தியமில்லை.

எனவே நான் வீட்டை விட்டு உன்னுடன் வந்து விடுகின்றேன். அதைத் தவிர, இனி வேறு வழியில்லை என்று கூறினாள்.

அதனைத் தொடர்ந்து சுகந்தா, சரி அம்மாவுக்கு விருப்பமில்லை என்றால் பரவாயில்லை. எனக்கு உன் விருப்பம் தான் முக்கியம்.

நீ வீட்டுக்கு தெரியாமல் நாளைக்கே புறப்பட்டு வா நாங்கள் பதிவுத் திருமணம் செய்து கொள்வோம் என்று கூறினான். அதற்கு தமராவும் உடன்பட்டாள்.

அதன்படி தமரா தாய்க்குத் தெரியாமல் வீட்டை விட்டு வந்து சுகந்தாவை திருமணம் செய்து கொண்டாள். அன்றைய நிலையில் சுகந்தாவும், சுகந்தாவின் காதலுமே தமராவுக்கு முக்கியமாக இருந்தது.
தாயைப் பற்றி அவள் சிறிதும் நினைத்துப் பார்க்கவில்லை. அதன்பின் கால சக்கரம் விரைவாக சுழன்றது.

ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்பது போல் திருமணமாகி சில நாட்கள் மட்டும் தமராவுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்த சுகந்தா, தனது சுயரூபத்தைக் காட்ட ஆரம்பித்தான்.

உழைக்கின்ற பணத்தில் பாதியை மதுபானக் கடைக்காரர்களின் வங்கிக் கணக்குகளை நிரப்பினான்.

அது மட்டுமின்றி, தமராவை தகாத வார்த்தைகளால் திட்டுவது, அடிப்பது என்று அவனுடைய அட்டூழியங்கள் தொடர்ந்தன. இதனால் தமராவுக்கு பல இரவுகள் நிம்மதியற்ற பொழுதாகவே கழிந்தன.
ஒரு கொடூரனின் கரங்களில் சிக்கிய இரு உயிர்கள் !
அப்போது தான் தமராவுக்கு அன்று தாய் கூறிய அறிவுரைகளும், தாய் எதற்கு தன்னுடைய காதலுக்கு எதிர்ப்பைத் தெரிவித்தாள் என்பதும் புரிந்தது.

ஆனால், அதனால் எந்தப் பயனும் இருக்கவில்லை. பல நாள் தனிமையிலேயே அழுத தமரா, தாய் தன்னை ஏற்றுக் கொள்வாள் என்ற நம்பிக்கையில் மீண்டும் தாயிடமே தஞ்சம் புகுந்தாள்.

அம்மா நீங்கள் கூறியது உண்மை தான். எனக்கு அந்த மனுஷனுடன் இனி வாழ முடியாது.

என்னைக் காரணமே இல்லாமல் தினமும் அடித்து, சித்திரவதை செய்கின்றான் என்று தாயைக் கட்டிப் பிடித்து அழுதவாறு கூறினாள்.

அதற்கு அனோமா சரி நீ இனி அங்கு போக வேண்டிய அவசியம் இல்லை, இங்கேயே இரு என்று தமராவை ஆறுதல்படுத்தினாள்.
எனவே, தமராவும் அதற்கு சம்மதித்து தாய் வீட்டிலேயே தங்கினாள். எனினும், அது நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.

சிறிது நாட்களில் மீண்டும் தமராவைத் தேடி சுகந்தா வந்தான். வந்தவன் தமராவை சமாதானப்படுத்தி அவனுடன் அழைத்துச் சென்றான்.

எனினும், அதன் பின் இரு வாரங்கள் மட்டும் தமராவுடன் அன்பாக நடந்து கொண்டவன் மீண்டும் தமராவின் உடலைப் பதம் பார்க்க ஆரம்பித்தான்.

எனவே, சுகந்தாவின் அட்டூழியங்களை இனியும் பொறுக்க முடியாது என்ற நிலையில் இரண்டாவது முறையும் தாய் வீட்டை வந்தடைந்தாள் தமரா.

எனினும், இந்த முறை தமரா அதை அவ்வளவு சீக்கிரமாய் விட்டு விடவில்லை.

தாயுடன் கிரிஎல்ல போலீஸ் நிலையத்துக்கு சென்று சுகந்தாவின் அட்டூழியங்கள் தொடர்பாக முறைப்பாடு ஒன்றினைப் பதிவு செய்தாள்.

இதனைத் தொடர்ந்து இது ஒரு குடும்ப பிரச்சினையாக இருப்பதால், சுகந்தாவையும் போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து கதைத்து சுகந்தாவை எச்சரித்ததுடன் அவர்கள் இருவரையும் சார்த்து வைக்கவும் முற்பட்டனர்.
ஒரு கொடூரனின் கரங்களில் சிக்கிய இரு உயிர்கள் !
எனினும், தமரா அதற்கு உடன்பட வில்லை. சுகந்தாவுடன் இனி சார்ந்து வாழ முடியாது என்பதில் உறுதியாக இருந்தாள். எனக்கு இனி இவனுடன் சார்ந்து வாழ முடியாது. சார்.

நான் இவனிடமிருந்து சட்டரீதியாக பிரிந்து செல்லவே விரும்புகின்றேன் என்று சற்றுக் கோபத்துடன் போலீஸார் முன்னிலையில் கூறினாள்.

அதற்கு சுகந்தா என்னால் அது முடியாது சார். நான் எப்போதுமே இந்த விவாகரத்துக்கு சம்மதிக்க மாட்டேன். எனக்கு தமரா வேண்டும். அவளுடன் நான் சார்ந்து வாழ வேண்டும்.

இத்தனை பிரச்சினைக்கும் இவளுடைய தாய் தான் காரணம். அவர் சொல்லிக் கொடுத்து தான் இவள் இப்படியெல்லாம் நடந்து கொள்கின்றாள் என்று கூறினான்.

எனினும் தமரா அவளுடைய முடிவில் உடும்பு பிடியாக இருந்தாள். எதற்கு மறுபடியும் உன்னோடு வா என்று அழைக்கின்றாய்.

உன்னிடம் அடி உதை வாங்குவதற்காகவா? நான் எக்காரணம் கொண்டும் இனி உன்னுடன் வரப் போவதில்லை என்று கூறினாள்.
அதன்பின் போலீஸ் நிலையத்திலிருந்து இருவரும் வெளியில் வர அவர்களுக்கு பின்னாலே சுகந்தாவும் வந்து சார்ந்தான். இருவரையும் தகாத வார்த்தைகளால் திட்டினான்.

எனினும் அனோமாவும், தமராவும் அதைச் சிறிதும் கண்டு கொள்ளாமல் வீட்டுக்கு வந்து சார்ந்தனர். ஆனால், அதன்பின்னும் சுகந்தா தமராவை விடுவதாய் இல்லை.

போலீஸ் நிலையத்தில் பட்ட அவமானத்தை மனதில் வைத்துக் கொண்டு வெறித்தனமாய் தமராவையும் அவளுடைய தாயையும் பழிவாங்கத் துடித்தான்.

தமரா செல்லும் இடங்களில் எல்லாம் சென்று தொந்தரவு கொடுத்தான். பின் பல நாட்கள் அவள் வீட்டுக்கு சென்று நீ என்னோடு வா,

இல்லை என்றால் உன்னைக் கொன்று விடுவேன், பலவந்தமாக சரி தூக்கிக் கொண்டு போவேன். என்றெல்லாம் அச்சுறுத்தினான்.

அதற்கு தமராவிடமிருந்து நான் உன்னை விவாகரத்து செய்வது என்று முடிவெடுத்து விட்டேன் எனது முடிவில் மாற்றமில்லை என்று கூறினாள்.
ஒரு கொடூரனின் கரங்களில் சிக்கிய இரு உயிர்கள் !
அதனை தொடர்ந்து ஒரு நாள் முச்சக்கர வண்டியில் இரு நபர்களையும் அழைத்துக் கொண்டு தமராவின் வீட்டுக்கு வந்தவன் அவர்களுடன் சார்ந்து கொண்டு

நாங்கள் இங்கு வந்தது உன்னை இங்கிருந்து அழைத்துக் கொண்டு செல்ல தான் சீக்கிரமாகப் புறப்படு என்று அச்சுறுத்தினான்.

எனவே அந்த நிலையில் சுகந்தாவுடன் செல்லாவிட்டால் பிரச்சினை பெரிதாகி விடும் என்ற எண்ணத்தில் அவர்களுடன் சுகந்தாவின் வீட்டுக்குச் சென்றாள்.

எனினும், வெகு நாட்கள் அங்கு அவள் இருக்கவில்லை. இரண்டு நாட்களின் பின் சுகந்தா வீட்டில் இல்லாத நேரம் பார்த்து மீண்டும் தாய் வீட்டை நாடி, ஓடி வந்தடைந்தாள்.

அவளிடம் அனோமா மகள் என்ன நடந்தது? என்று வினவினாள். எனினும் அவளிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை.

அனோமாவையும் அழைத்துக் கொண்டு மீண்டும் கிரிஎல்ல போலீஸ் நிலையத்துக்கு சென்று முறைப்பாடு செய்தாள். இதனைத் தொடர்ந்து மீண்டும் சுகந்தா போலீஸ் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டான்.
அங்கு போலீஸ் பொறுப்பதிகாரி, உன்னுடைய மனைவி உன்னுடன் வாழ விருப்பமில்லை என்று கூறும் போது நீ அவளை கட்டாயப்படுத்தி வைத்துக் கொள்ள முடியாது.

நீ விவாகரத்து செய்ய விருப்பமில்லை என்று கூறுவதில் எந்தப் பயனுமில்லை. எனவே, இது ஒரு குடும்ப பிரச்சினை நீ விவகாரத்துக்கு சம்மதம் தெரிவித்து இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப் பார்.

மாறாக நீ சம்மதிக்காமல் தொடர்ந்து பிரச்சினை கொடுத்தால் உன்னை விளக்கமறியலில் வைத்து வழக்குப் போடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறினார்.

சுகந்தா அதற்கு, நான் விவாகரத்துக்கு சம்மதிக்கின்றேன். என்று கூறினான். எனினும் அது அவன் மனதிலிருந்து வந்த வார்த்தையல்ல என்பதை எவரும் அறிந்திருக்கவில்லை.

போலீஸ் நிலையத்திலிருந்து வெளியில் வந்தவன் நீங்கள் இருவரும் என்னை போலீஸ் நிலையத்துக்கு எல்லாம் அழைத்து வந்து அவமானப்படுத்தி விட்டீர்கள்.
ஒரு கொடூரனின் கரங்களில் சிக்கிய இரு உயிர்கள் !
இன்று நீங்கள் இருவருமே வீடு செல்ல மாட்டீர்கள் என்று அச்சுறுத்தினான். எனினும் அதைத் தமராவும் தாய் அனோமாவும் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை.

இருவரும் பஸ்ஸில் ஏறிக்கொண்டார்கள். பின் சிறிது நேரத்தில் அவர்கள் இருவரும் ஏறிய இடத்திலிருந்து முச்சக்கர வண்டியொன்றில் இனம் தெரியாத நபர் ஒருவர் பின்தொடர்ந்து வருவதை தமரா அவதானித்தாள்.

எனவே அது அவளுடைய மனதுக்குள் சந்தேகத்தை உண்டு பண்ணியது. உடனே 119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக இச்சம்பவம் தொடர்பாக போலீஸாருக்கு அறிவித்தாள்.

பின் தன்னுடைய வீட்டுக்கு செல்வதற்காக இறங்கும் பஸ்தரிப்பிடம் வந்ததும் அங்கு இறங்கினார்கள். அப்போது அந்த முச்சக்கர வண்டி அங்கு எங்கும் இருக்கவில்லை.

எனினும், பஸ் தரிப்பிடத்திலிருந்து வீட்டுக்கு நடந்து செல்லக் கூடிய தூரமாக இருந்திருந்தும் எதற்கும் ஒரு பாதுகாப்புக்கு 
முச்சக்கர வண்டியில் செல்வோம் என்று எண்ணியவாறு இருவரும் ஒரு முச்சக்கர வண்டியில் ஏறினார்கள்.

பின் அவர்கள் இருவரும் ஏறிய முச்சக்கர வண்டி அவர்கள் வீட்டுக்கு செல்லும் ஒழுங்கைக்குள் சிறிது தூரம் செல்லும் போது

பஸ்ஸின் பின்னால் தொடர்ந்து வந்த அதே முச்சக்கர வண்டி மீண்டும் தொடர்வதை தமரா அவதானித்தாள்.

தமராவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அந்த முச்சக்கர வண்டி இவர்களை முந்திக் கொண்டு முன்னால் சென்று குறுக்காக நின்றது.

பின் அதிலிருந்து சுகந்தாவும், வேறு ஒரு நபரும் இறங்கினார்கள்.

பின் சுகந்தா நேராக தமராவிடமும், அனோமாவிடமும் சென்று எதுவுமே பேசாமல் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இருவரையும் சரமாரியாகக் குத்தினான் இருவரும் கீழே வீழ்ந்து துடித்தனர்

அதன்பின் அவன் அந்த முச்சக்கர வண்டியி                     லேயே அங்கிருந்து தப்பி யோடினான். பின் கிராமத்தவரின் உதவியுடன் இருவரும் கிரிஎல்ல வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஒரு கொடூரனின் கரங்களில் சிக்கிய இரு உயிர்கள் !
எனினும் துரதிஷ்டவசமாக அனோமாவின் உயிர் பாதிவழியிலேயே பிரிந்தது. அதே வேளை தமரா உயிருக்குப் போராடிய நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றாள்.

மேலும் சுகந்தா விசாரணைகளுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளான்,

எனவே, பெற்றோர், பெரியவர்கள், அனுபவசாலிகள் கூறும் அறிவுரைகள் எமது நன்மைக்காகத் தான் இருக்கும் என்பதை சற்றும் சிந்தித்துப் பார்க்காது

கண்மூடித்தனமாக எடுக்கும் முடிவுகள் இத்தகைய பாராதுரமான விளைவுகளையே இறுதியில் ஏற்படுத்தும் என்பதற்கு மேற்படி சம்பவம் ஒரு சிறந்த உதாரணமாகும்.
Tags: