பொதுவாக ஒரு மனிதனை வசைப்பாடும் போது 'போடா நாயே' என்று திட்டுவதுண்டு. அதன் உள்நோக்கம் என்ன வென்று பார்த்தால் 'நன்றி கெட்ட தனம்' என்று அர்த்தம். 
நாய்கறி உண்ணும் பழக்கத்தை பின்பற்றும் நாடுகள்... சிறு கதை !
இந்த நாலு கால் பிராணியின் நன்றி உணர்வை மிஞ்சுவதற்கு இப்போது வரை ஆறு அறிவு படைத்த மனிதனால் முடிய வில்லை. 
நாய்யை பைரவர் என்ற பெயரோடு இந்து மதத்தில் கடவுளாகவும் வழிபடுவதுண்டு. தெருவிற்கு ஒரு மின் விளக்கு இல்லாமல் கூட இருக்கலாம் ஆனால் கண்டிப்பாக ஒரு நாய் இருக்கும். 

நம் வீட்டில் மிஞ்சம் சோற்றை வெளியே கொண்டு வந்து 'தோ.,தோ' என்றால் தன் வாலை ஆட்டிக் கொண்டு துள்ளிக் குதித்து ஓடிவரும். 

நாம் போடும் ஒருவேளை சோற்றுக்கு விஸ்வாசத்தோடு இரவு முழுவதும் காவலனாக தெருவை பாதுகாக்கும். பலரின் வீட்டில் ஒருவராக நாய்யை வளர்ப்பதுண்டு. 

இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் அசைவ உணவு என்றால் ஆடு, கோழி, மீன் வகைகள் தான். இவ்வளவு ஏன் மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி கூட ஒரு சில பகுதிகளில் அசைவ உணவுப் பழக்கமாக இருக்கிறது.
இதில் சிறிதளவும் எதிர்பாராத அளவிற்கு இணைந்துள்ளது நாய்கறி. 21ஆம் நூற்றாண்டில் நாய்கறி மனித உணவின் ஒரு அங்கமாக வகித்துள்ளது. 
நாய்கறி உண்ணும் பழக்கத்தை பின்பற்றும் நாடுகள்... சிறு கதை !
காலப்போக்கில் நாய்கறி என்பது உணவுப் பழக்கங்களில் இருந்து மறைந்தாலும் தற்போது வரை ஏணைய நாடுகளிலும், பல இன மக்களிடமும் பாரம்பரிய உணவாக நாய் இறைச்சி இருக்கிறது. 
2014 இன் கணக்கெடுப்பின் படி ஒரு வருடத்திற்கு 25 மில்லியன் நாய்கள் அசைவ உணவிற்காக கொல்லப் படுகிறது.

மனிதர்களின் செல்லப் பிராணியாக இருக்கும் நாய் இறைச்சியாக உண்பது கலாச்சார சீரழிவு என்று அமெரிக்கா நாய்கறிக்கு தடை விதித்தது. 

அதைத் தொடர்ந்து நாய்கறி உண்பதை குற்றமாகவும் பல நாடுகளில் சட்டம் இயற்றப் பட்டது. 

இருப்பினும் பென்சில்வேனியா போன்ற நகரங்களில் நாய்கறி மற்றும் பூனைகறி விற்பதற்கும் உண்பதற்கும் அரசு அங்கீகாரம் வழங்கி யுள்ளது.

மேலும் சீனாவில் உள்ள யுலின் போன்ற நகரங்களில் 'நாய் கறி திருவிழா' என்று கொண்டாடப்பட்டு வகை வகையான நாய்கள் இறைச்சிகள் விற்பனை செய்யப் படுகிறது. 
அதே போல் பல நாடுகளில் உள்ள உணவு விடுதிகளின் மெனு கார்டில் நாய்கறி வகைகளும் சேர்க்கப்பட்டு வருகிறது.

சீனா:
நாய்கறி உண்ணும் பழக்கத்தை பின்பற்றும் நாடுகள்... சிறு கதை !
பொதுவாகவே சீனாவின் அசைவ உணவு வகைகளை கேட்கும் போது பெரும் பாலான இந்தியர்கள் முகம் தானாகவே சுளித்துக் கொள்ளும். 

சீனாவில் நாய்கறி என்பது ஏராளமான இறைச்சி யகங்களில் காணப்படும். பெய்ஜிங் ஒலிம்பிக் போது மட்டும் நாய்கறி விற்பதற்கு சீன அரசாங்கம் தடை விதித்திருந்தது.
கனா:

நாய்கறி என்பதை ஆன்மீக வழி உணவாக எண்ணு கின்றனர். நாய்கறி சாப்பிட்டால் வாழ்க்கையில் உண்மையோடு நடந்து கொள்ளலாம், 

சாவில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளலாம், சதை இருக்க மடையும் போன்ற மூட நம்பிக்கைக்காக இங்கு நாய்கறி சாப்படப் படுகிறது.
நைஜீரியா:

வட அமெரிக்கர்களை பொருத்த வரை நாய்கறி என்பது தினமும் உணவில் சேர்த்து கொள்ளும் ஒன்றாகும். 
நாய்கறி உண்ணும் பழக்கத்தை பின்பற்றும் நாடுகள்... சிறு கதை !
அது மட்டுமின்றி நாய்கறி சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தியும், ஆண்மையும் அதிகரிக்கச் செய்யும் என்று பலர் நம்பி வருகின்றனர்.
போலாந்து:

நாய் மற்றும் பன்றிக் கொழுப்புகளை சிறந்த மருத்துவ உணவாக உட்கொண்டு வருகின்றனர்.

அன்டார்டிக்கா:

ஆர்டிக் மற்றும் அன்டார்டிக்கா போன்ற குளிர் பிரதேசத்தில் நாய்கறி சாப்பிட்டால் புரோடின் அதிகரிக்கச் செய்யும் என்று கூறி இயல்பான உணவு பழக்கமாக நாய் இறைச்சியை சாப்பிடு கிறார்கள்.
வியட்நாம்:

இங்கு நாய்கறிக்கு டிமாண்ட் அதிகம். பார்டிகளிலும், விழாக்களிலும் நாய்கறி பறிமாறும் பழக்கமுண்டு. 
நாய்கறி உண்ணும் பழக்கத்தை பின்பற்றும் நாடுகள்... சிறு கதை !
இந்த பகுதிகளில் பலரின் வீட்டில் உள்ள நாய்களை இறைச்சிக் காக திருடப் படுவது வழக்கமாக நிகழ்ந்து வரும் சம்பவம். 

நாய்களை திருடி இறைச்சி யகங்களில் விற்கும் கும்பல் இந்த பகுதியில் அதிகமாக உள்ளனர்.
ஸ்விட்சர்லேன்ட்:

இங்கு ஒருசில மாவட்டங்க ளில் உள்ள விவசாயிகள் நாய்கறியை தங்களது உணவு பழக்கமாக வைத்துள்ளனர்.

இந்தோனேசியா:
நாய்கறி உண்ணும் பழக்கத்தை பின்பற்றும் நாடுகள்... சிறு கதை !
நாய்கறி தடை செய்யப் பட்டிருந்தாலும் அவ்வப்போது திருமண நிகழ்ச்சிகளிலும் விடுமுறை நாட்களிலும் நாய்கறி உண்ணும் பழக்கும் இங்கு நிலவி வருகிறது.

தென் கொரியா:

இந்த நாட்டில் தான் வருடத்திற்கு 2 முதல் 2.5 மில்லியன் வரை நாய்கள் இறைச்சிக்காக கொல்லப் படுவதாக கூறப்படு கிறது.
இந்தியா:

நாய் இறைச்சி நுகர்வு இந்தியாவில் சட்ட விரோதமானது. இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளான நாகலாந்து, மிசோரம், மனிப்பூர் போன்ற பகுதிகளில் நாய்கறி உணவுப் பழக்கத்தில் ஒன்றாகும். 
நாய்கறி உண்ணும் பழக்கத்தை பின்பற்றும் நாடுகள்... சிறு கதை !
குறிப்பாக நாகலாந்தில் பாரம்பரிய உணவுப் பழக்கம் என்ற பேரில் நாய்கறி அதிகமாக உண்ணும் பழக்கம் உண்டு. 

இந்த பகுதியில் வருடத்திற்கு சுமார் 30,000 நாய்கள் இறைச்சிக்காக கொல்லப் படுவதுண்டு. 

நாய்யின் தலையை மட்டும் துண்டித்து கொதிக்கும் நீரில் உள்ளே போட்டு விடுவார்கள் பின் தோல்கள் உரிந்த பின்பு அதை பேக் செய்து விற்பனை செய்து வருகின்றனர். 
மேலும் நாய்கறியில் அதிக ஊட்டச் சத்தும் மருத்துவ தன்மையும் இருப்பதாக கூறுகின்றனர்.

இதில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 2 டன் நாய்கறி பறிமுதல் செய்யப் பட்டது தமிழக மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி யுள்ளது.

  • படித்து விட்டு மற்றவர்களுக்கும் சேர் பண்ணுங்க.... அவர்களும் பயன் பெறட்டும்....
  • Follow on Google News