வேலைக்கான சிறந்த 10 ஐ.டி., சான்றிதழ் படிப்புகள் எவை !

ஐ.டி., துறை தொடர்புடைய ஒரு புதிய வேலையையோ, அல்லது வகிக்கும் பதவியில் ஒரு உயர்வையோ பெறுவதற்கு ஐ.டி., துறை தொடர்புடைய சான்றிதழ் படிப்புகள் பெரிதும் உதவி புரிகின்றன.


இன்றைய உலகம் சர்வ தேசப் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வரும்


இந்த நாட்களில் பொருளாதாரம் நல்ல வளர்ச்சி அடைந்து வருவதோடு, ஐ.டி., துறையும் இழந்த பெருமையை மீண்டும் பெறும் நிலைக்கு முன்னேறி வருகிறது. 

இந்த மாற்றங்களின் அடிப்படையில் எந்தெந்த ஐ.டி., சான்றிதழ் படிப்புகளுக்கு இனி வரும் நாட்களில்

நல்ல மதிப்பிருக்கும் என்ற ஒரு ஆராய்ச்சியை பூட் பார்ட்னர்ஸ் என்ற தொழில் ஆய்வு நிறுவனம் நடத்தியது. 

அந்த ஆராய்ச்சியில் அடையாளம் காணப்பட்ட முதல் 10 படிப்புகள் இவைதான் :

வி.எம்.வேர் சர்டிபைடு புரோபஷனல் :  

தற்போது வர்ச்சுவலைசேஷன் டெக்னாலஜிக்கு தேவை அதிகரித்து வருகிறது.

எனவே வி.சி.பி., என்ற வி.எம்.வேர் சர்டிபைடு புரோபஷனல் களுக்கான தேவையும் அதிகரிக்கிறது. 

இது தொடர்பாக நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியில் வி.சி.பி.,களுக்கு அதிக தேவை இருப்பதும் நிரூபிக்கப் பட்டுள்ளதால் இந்தப் படிப்பு முதலிடத்தைப் பெறுகிறது.

சர்டிபைடு இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ் ஆடிட்டர் : 

தகவல் தொழில் நுட்ப ஆடிட்டிங் பிரிவில் ஐ.எஸ்.ஏ.சி.ஏ., என்ற அமைப்பின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் சி.ஐ.எஸ்.ஏ.,

என்ற சர்டிபைடு இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ் ஆடிட்டர் சான்றிதழ் படிப்பு முன்னிலை வகிக்கிறது.


இருந்த போதும் இந்த சான்றிதழைப் பெற ஐ.எஸ்.ஏ.சி.ஏ., அமைப்பு வகுத்துள்ள நிர்ப்பந்தங்களை முழுமையாகப் பூர்த்தி செய்ய வேண்டும்.

ஜி.ஐ.ஏ.சி., செக்யூரிட்டி ஆடிட் எசன்சியல்ஸ் : 

ஒரு நிறுவனத்தின் திட்டம், செயல்முறை, ஆபத்துக்கள் போன்ற நிறுவனம் தொடர்புடைய தகவல் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த சான்றிதழ் படிப்பாகும் இது.


இந்தப் பிரிவில் ஆர்வம் கொண்டவர்கள் இந்தப் படிப்பைப் படிக்கலாம்.

சர்டிபைடு இன்பர்மேஷன் செக்யூரிட்டி மேனேஜர் : 

ஐ.எஸ்.ஏ.சி.ஏ., அமைப்பினால் தகவல் பாதுகாப்பு மேலாளர் களுக்கு வழங்கப்படும் சி.எஸ்.ஐ.எம்., சான்றிதழ் படிப்பாகும் இது.

பாயிண்ட் சர்டிபைடு செக்யூரிட்டி எக்ஸ்பர்ட் : 

ஐ.டி., தகவல் பாதுகாப்புத் துறையில் அனுபவம் கொண்ட தொழில் நுட்ப அறிவு படைத்தவர் களுக்காக சி.சி.எஸ்.இ., என்ற சான்றிதழ் படிப்பு வழங்கப் படுகிறது. 

இந்தப் படிப்பு முழுக்க நுகர்வோரின் தேவைகளை மனதில் வைத்து உருவாக்கப் பட்டுள்ளது சிறப்பாகும்.

இதனைப் படிப்பதன் மூலம் முழுமையான தகவல் பாதுகாப்பு குறித்த திறன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

பாயின்ட் சர்டிபைடு செக்யூரிட்டி அட்மினிஸ்டிரேடர் : 

இதுவும் பாயின்ட் சர்டிபிகேஷனில் மற்றொரு படிப்பாகும். சி.சி.எஸ்.ஏ., என்ற இந்தப் படிப்பில் உபயோகிப் பாளரின்

அன்றாட பாதுகாப்பு, வலையமைப்பில் தகவல்கள் சிதறாம லிருப்பதற்கான வழிமுறைகள் ஆகியவற்றைப் பற்றி பாடப் பகுதிகள் இருக்கும்.

மைக்ரோசாப்ட் சர்டிபைடு சிஸ்டம்ஸ் என்ஜினியர்(செக்யூரிட்டி) : 

எம்.சி.எஸ்.இ., என்ற இந்த சான்றிதழ் படிப்பை மேற்கொள்வதன் மூலம் வடிவமைத்தல், செயல்படுத்துதல்,


உள்கட்டமைப்பு நிர்வாகம் ஆகிய பகுதிகளில் ஒரு தனி நபரின் திறமைகளை வளர்த்துக் கொள்ள முடியும். 

வியாபாரத் தேவைகளை நிறைவேற்ற விண்டோஸ் 2003 மற்றும் விண்டோஸ் 2000 சர்வர்களை உபயோகிக்கும் நிறுவனங் களுக்கு இது முற்றிலும் பொருந்தும்.

சர்டிபைடு வயர்லெஸ் செக்யூரிட்டி புரபஷனல் : 

ஒயர்லெஸ் நெட் வொர்க்குகளைப் பெற உதவிடும் விதத்தில் வழங்கப்படும் மிக ஆழமான சான்றிதழ் படிப்பாக சி.டபிள்யூ.எஸ்.பி., படிப்பு இருக்கிறது.

இந்தப் படிப்பில் 802.11 வயர்லெஸ் லான் டெக்னாலஜி குறித்த ஆழமான பாடப் பகுதிகள் இருக்கும்.

ஜி.ஐ.ஏ.சி., சர்டிபைடு இண்ட்ரூஷன் அனலிஸ்ட் :  

ஜி.சி.ஐ.ஏ., என்ற இந்தப் படிப்பும் தகவல் பாதுகாப்பு குறித்த ஒன்றுதான். இதில் தொழில் நுட்ப ரீதியான

மற்றும் செயல்முறையுடன் கூடிய சிறப்பு அணுகுமுறைகள் உண்டு. இந்தப் படிப்பை சான்ஸ் என்ற கல்வி நிறுவனம் 1999 முதல் நடத்தி வருகிறது.சிஸ்கோ சர்டிபைடு நெட்வொர்க் புரபஷனல் : 

சி.சி.என்.பி., என்ற இந்தப் படிப்பை சிஸ்கோ நிறுவனம் நடத்துகிறது. இதுவும் உபயோகிப் பாளரின் தேவைக்கேற்ப வடிவமைக் கப்பட்டது தான்.


இந்தப் படிப்பில் லோகல் ஏரியா நெட் வொர்க்கில் திட்டமிடுதல், 

செயல் படுத்துதல், சோதனை செய்தல், பிரச்னைகளைக் கையாளுதல், திறனாள ர்களுடன் இணைந்து பாதுகாப்பு, ஒலி, வயர்லெஸ்,

மற்றும் வீடியோ தொழில் நுட்பம் போன்றவற்றில் பணியாற்றுதல் ஆகியவை கையாளப் படுகிறது.
Tags: