ஆபாச வலைதளங்களுக்கு கூகுள் தடை !

பேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்ற இன்றைய சமூக வலைத் தளங்களுக்கு இணையாக முன்பு பாப் புலராக இருந்தவை 'பிளாக்' எனப்படும் வலைப் பூக்கள்.
ஆபாச வலைதளங்களுக்கு  கூகுள் தடை !
சீனா உள்ளிட்ட சில நாடுகளில் ஆபாச தரவுகள் அடங்கிய விஷய ங்களை தேடுதலில் கிடைக்க செய்ய கூகுளுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில், கூகுளுக்கு சொந்தமான பிரபல 'Blogger'-ல் வரும் மார்ச் 23-ந்தேதி முதல் ஆபாச போட்டோக்கள், வீடியோக்களை 'ஷேரிங்' செய்ய தடை விதிக்கப்படுகிறது.

அதேபோல், பாலுணர்வை (sexually explicit) தூண்டக்கூடிய ஆபாசக்காட்சிகள் (graphic nudity) அடங்கிய வீடியோக்களை அப்லோடு செய்யவும் தடை விதிக்கப்படுகிறது.

இப்போது நடைமுறையில் இருக்கும் Blog-க்குகளில் ஏதாவது ஆபாச தரவுகள் (adult content) இருந்தால் கூகுள் விரைவில் அந்த Blog-களுக்கு Notification- களை அனுப்பும். 
எனினும், அந்த Blog-களில் உள்ள content எதையும் கூகுள் அழிக்காது. மாறாக, 'அது' மாதிரியான Blog-ஐ admin-கள் மட்டுமே பார்க்க முடிகிற வகையில் Private செய்யப்படும்.

ஏற்கனவே ஆபாச போட்டோ, வீடியோக்கள் அடங்கிய Blog-ஐ வைத்தி ருப்பவர்கள் Google Takeout- மூலமா கவோ 

அல்லது .xml file-ஆக எக்ஸ் போர்ட் செய்தோ Blog- லிருந்து நீக்கி சேமித்து வைத்துக் கொள்ளும் வசதியை யும் கூகுள் வழங்கி யுள்ளது.

புதிய பாலிசியை வெளி யி்ட்டுள்ள கூகுள் இது பற்றி மேலும் கூறுகை யில், ஆபாச காட்சிகளை நீக்குமாறு புதிதாக கட்டுப் பாடுகளை விதித்தாலும் எங்களால் முழுமை யாக அவற்றை இண்டர் நெட்டில் இருந்து 
நீக்கி விட முடியாது. கலை, ஆவணப் படங்கள், விஞ்ஞான ஆய்வறிக் கைகளின் வடிவில் அவை இருக்கவே செய்யும்.

பிளாக்-ல் ஏதேனும் ஆபாச காட்சிகள் இருந்தால் Blogger செட்டிங்க் ஸில் 'adult' என்பதில் மார்க் செய்து விடுங்கள். அப்படி அவர்கள் செய்ய வில்லை என்றால் நாங்களே செய்து விடுவோம் என தெரிவித்தது.
Tags:
Privacy and cookie settings