ரேடியோகிராபி படித்தால் வேலை ரெடி !

இன்றைய உலகில் மருத்துவத் துறையின் வளர்ச்சி அதிகரித்து வருகிறது. மருத்துவத் துறையின் ஒவ்வொரு பிரிவிலும் துறை வல்லுனர்களின் தேவை உள்ளது.
தற்போதைய சூழலில் மாணவர்கள் மருத்துவத் துறையில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் மருத்துவத் துறையின் ஒரு பகுதியான ரேடியோகிராபி துறையில் மாணவர்களுக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

மருத்துவத்துறையில் நோய் கண்டறியும் பகுப்பாய்வு சோதனை என்பது மிகவும் முக்கியமானது.

ஒரு நோயை குணப்படுத்துவதற் கான முதல் படிநிலை இதுவாகும்.

எக்ஸ்ரே, ப்ளுரஸ்கோபி, அல்ட்ராசவுண்ட், சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ., ஆங்கியோ கிராபி, பி.இ.டி. தொழில் நுட்பம்


போன்றவற்றை பயன்படுத்தி நோய் மற்றும் உடலுறுப்புகளின் சிக்கல்களை அறிவது ரேடியோகிராபி எனப்படும்.

எக்ஸ்ரே கருவி கண்டுபிடித்த பின்னர் 1895ம் ஆண்டு இந்தத் துறை உருவானது.

பின்னர் மருத்துவ சோதனை முறையில் பல்லாண்டு காலமாக வளர்ச்சியடைந்து வருகிறது.

இந்த ரேடியோ கிராபி டயக்னோஸ்டிக், தெரபெடிக் என இரண்டு வகைப்படும்.

டயக்கோஸ்டிக் ரேடியோகிராபி என்பது ரேடியோ இமேஜிங் சாதனைகளை இயக்கி முடிவுகளை விளக்குவதாகும்.

தெரபெடிக் ரேடியோகிராபி என்பது ரேடியேஷன் தொழில் நுட்பத்தின் மூலமாக கேன்சர், அல்சர் மற்றும் கட்டிகளுக்கு சிகிச்சை யளிப்பதாகும்.

ரேடியோகிராபி படிக்க:

ரேடியோகிராபி என்பது துணை மருத்துவ அறிவியலின் ஒரு பகுதி. எனவே இதை படிக்க விரும்பும் மாணவர், பள்ளிப் படிப்பில் பயாலஜி, பிசியாலஜி, அனாடமி

போன்ற படிப்புகளை படித்திருந்தால் மட்டுமே இத்துறையில் சாதிக்க முடியும்.

இளநிலை அளவில் ஒருவர் பி.எஸ்.சி. ரேடியோ கிராபி படிப்பை மேற்கொள்ளலாம்.

இதில் சேர்வதற்கான குறைந்தபட்ச தகுதியாக இயற்பியல், வேதியியல், கணிதம் போன்ற படங்களை பள்ளிப் படிப்பில் முடித்திருக்க வேண்டும்.

மேலும் ஒருவருட சான்றிதழ் படிப்பு, 2 வருட டிப்ளமோ படிப்பு போன்றவை இத்துறையில் நுழைவதற்கான சிறந்த வாய்ப்புகளாகும்.

அதே சமயம் இவற்றைவிட பட்டப் படிப்பிற்கே மதிப்பு அதிகம். இத்துறையில் நுழைபவர்கள்

பொதுவாக இளநிலைப்படிப்பை முடித்திருந் தாலும், முதுநிலை மற்றும் பி.எச்.டி படிப்புகளை முடிப்பது அரிதான ஒன்றாக இருக்கிறது.

படிப்பினை வழங்கும் கல்வி நிறுவனங்கள்:

இத்துறையில் அதிகளவில் நிபுணர்கள் தேவைப் படுவதால் இந்தியாவில் ஏராளமான மருத்துவக் கல்வி நிறுவனங்கள் இப்படிப்பை வழங்குகின்றன.
சென்னை, மங்களூர், டெல்லி, லூதியானா, விசாகப்பட்டினம், செகந்திராபாத், சிம்லா, போன்ற

பகுதிகளில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் இது தொடர்பான படிப்பினை வழங்குகிறது.

இத்துறையின் வேலைவாய்ப்புகள்:

ரேடியோகிராபி நிபுணர்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மருத்துவத் துறையில் பல

நுட்பமான இயந்திரங்கள் தொடர்ந்து அறிமுகப் படுத்தப்படு வருவதால் இத்துறை நிபுணர்களின் தேவையும் அதிகரித்துள்ளது.

இத்துறை சார்ந்தவர்களுக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன.


அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் இவர்களின் பங்கு மிக முக்கியமானது.

மருத்துவ மனைகளை தவிர்த்து டயக்னோஸ்டிக் மையங்கள், சூப்பர் ஸ்பெஷாலிட்டி

 மருத்துவ மனைகள் போன்றவற்றில் ரேடியோகிராபி நிபுணர்கள் அதிக வேலை வாய்ப்பை பெறலாம்.

மேலும் இத்துறையில் சுயதொழில் வாய்ப்புகள் அதிகம். சொந்தமாக டியக்னோஸ்டிக் மையங்களை அமைத்து நடத்தலாம்.

மேலும் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களாக பணியாற்றலாம்.

இந்திய ரேடியோ கிராபர்களுக்கு ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளில் அதிக வேலை வாய்ப்புகள் உள்ளன.

சம்பளம்:

அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் ரேடியோ கிராபர்கள் ஆரம்பத்தில் 8 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை சம்பளம் பெறுகிறார்கள்.

தனியார் துறையில் இப்பிரிவிற்கு அபிரிமிதமான சம்பளம் கிடைக்கிறது.

2 வருட அனுபவம் இருந்தாலே ஒரு நல்ல ரேடியோ கிராபர் ரூ. 40 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை எதிர் பார்க்கலாம்.

இத்துறையில் தொடர்ச்சியான ஏற்றம்காண ஒருவர் தனது திறமையை தொடர்ந்து நிரூபித்து வரவேண்டும்.


இத்துறையில் பட்டப் படிப்பு முடிக்காமல் சான்றிதழ் அல்லது டிப்ளமோ முடித்திருந்தால்

ஒரு ரேடியோ கிராபருக்கு உதவியாளராய் சேர்ந்து மாதம் ரூ.3 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை ஊதியமாகப் பெறலாம்.


அதே சமயத்தில் முதுநிலை பட்டம் பெற்றவர் எந்தப் பணி அனுபவமும் இல்லாமலேயே ஆரம்ப ஊதியமாக ரூ.20 ஆயிரத்திற்கு மேல் பெறலாம்.

இதில் அனுபவம் வந்து விட்டால் சம்பளம் மிகவும் அதிகம். வெளி நாட்டில் பனியாற்றும்

இந்திய ரேடியோ கிராபர்கள் நல்ல சம்பளத்துடன் பல சலுகை களையும் பெறுகின்றனர்.
Tags: