சொந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியதா பாக்.. இரு நாட்டு உறவு பாதிப்பு !

தங்கள் நாட்டு எல்லைக்குள் பறந்தபோது சுட்டு வீழத்தியதாக பாகிஸ்தான் கூறிய இந்திய ஆளில்லாத விமானம் (ட்ரோன்), உண்மையில் பாக்.,கிற்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. 
சொந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியதா பாக்.. இரு நாட்டு உறவு பாதிப்பு !
சில நாட்களாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டம் அதிகரித்துள்ளது. இன்று காலை பாக்., ராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டதில் இந்திய பெண் ஒருவர் இறந்தார்.

இதைத் தொடர்ந்து இந்தியாவும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் மீண்டும் இன்று ஒரு நாடகத்தை பாக்., அரங்கேற்றியது.

தங்கள் நாட்டுக்குள் பறந்த இந்தியாவின் ஆளில்லாத விமானத்தை எங்கள் ராணுவம் சுட்டு வீழ்த்தியது என பாக்., கூறியது.

இது குறித்து இந்தியா விசாரணை நடத்திய போது, அப்படி எந்த விமானத்தையும் இந்தியா பயன்படுத்தவில்லை என்பது உறுதியானது.

சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாக்., கூறும் விமானம், சீனாவில் தயாரிக்கப்பட்டது. கண்காணிப்பு பணிக்காக போலீசார் பயன்படுத்தும் வகையை சேர்ந்தது.
தங்களுக்கு சொந்தமான விமானத்தை சுட்டுவிட்டு, இந்தியா மீது பாக்., பழி போடுகிறது என இந்தியா சந்தேகிக்கிறது. 

பாக்., குற்றச்சாட்டை இந்திய வெளியுறவு செயலர் ஜெய்சங்கர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இதற்கிடையே இந்தியாவில் இருந்து பாக்., செல்லும் வெளியுறவு துறை அதிகாரிகளுக்கு விசா தருவதை பாக்., நிறுத்தி உள்ளது. இதற்கு பதிலடியாக இந்தியாவும் விசா தருவதை நிறுத்தி உள்ளது.
Tags:
Privacy and cookie settings