ஐ.பி.எல். சூதாட்ட வழக்கு தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் !

2013–ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நடை பெற்றது கண்டு பிடிக்கப் பட்டதை தொடர்ந்து, குற்றவாளி களுக்கான தண்டனை குறித்து முடிவு செய்ய முன்னாள் தலைமை நீதிபதி ராஜேந்திர மால் லோதா தலைமையில் குழு அமைக்கப் பட்டது.


இந்த குழு இன்று தனது தண்டனை விபரத்தை வெளியிட் டுள்ளது. அந்த தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

1. அணியின் முக்கிய நிர்வாகிகள் சூதாட்டத்தில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து சென்னை மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்க 2 ஆண்டுகள் தடை விதிக்கப் பட்டுள்ளது.

2. அணி விபரங்களை சூதாட்ட தரகர்களுடன் பகிர்ந்து சூதாட்டத்தில் ஈடுப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கவுரவ உறுப்பினர் என்று கூறப்படும் குருநாத் மெய்யப்பன்,

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளர்களில் ஒருவரான ராஜ்குந்த்ரா ஆகியோருக்கு கிரிக்கெட் தொடர்பான விஷயங்களில் ஈடுபட வாழ்நாள் தடை விதித்துள்ளது.

3. குருநாத் மெய்யப்பன் மற்றும் ராஜ்குந்த்ரா ஆகிய இருவரும் தொடர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டுள்ளது.   முக்கியமாக மெய்யப்பனின் நடத்தை கிரிக்கெட் விளையாட்டிற்கு மிக மோசமான அவமானத்தை தேடிதந்து விட்டது என நீதிபதி லோதா தெரிவித்தார்.

4. ராஜ் குந்த்ரா ஒரு நன்கு பரிச்சயமான ஒரு சூதாட்ட தரகர் மூலம் சூதாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார். புக்கிகளுடன் தொடர்ந்து  தொடர்பில் இருந்துள்ளார்.

குந்த்ராவின் செயல் பி.சி.சி.ஐ. மற்றும் கிரிக்கெட் விளையாட்டு மீது இருந்த நம்பிக்கையை சிதைத்துள்ளது என நீதிபதி லோதா தெரிவித்துள்ளார்.

5. சென்னை அணியின் உரிமையாளர் சீனிவாசன் சூதாட்டத்தில் ஈடுபட்ட தனது மருமகனான குருநாத் மெய்யப்பன் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டார் என்றும் லோதா கூறியுள்ளார்.

6. இந்த வழக்கில் ஐ.பி.எல். தலைமை செயல் அதிகாரி சுந்தர் ராமனுக்கு உள்ள தொடர்பு பற்றி மேலும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என நீதிபதிகள் குழு தெரிவித்துள்ளது.

7. சூதாட்டத்தில் ஈடுப்பட்டது மற்றும் ஆட்டங்களை முன்கூட்டியே தீர்மானித்தது உட்பட குற்றங்களில் ஈடுபட்ட அனைவர் மீதும் சட்டப்படி கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதிபதி லோதா தெரிவித்துள்ளார்.
Tags:
Privacy and cookie settings