ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹராரே நகரில் நடைபெற்று வருகிறது. ஜிம்பாப்வே டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது.
அதன்படி இந்திய அணியின் ரகானே, விஜய் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கடந்த போட்டியில் அரைசதம் அடித்த இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். ரகானே 15, விஜய் 13 ரன்கள் எடுத்தனர்.
அம்பதி ராயுடு காயத்தால் வெளியேறியதால் உத்தப்பா 3-வது நபராக களம் இறங்கினார். இவர் 44 பந்தில் 31 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த மனோஜ் திவாரி 10 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
அப்போது இந்தியா 21.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 82 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின்னர், 5-வது விக்கெட்டுக்கு அறிமுக வீரர் மணீஷ் பாண்டேவுடன் கேதர் ஜாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஜிம்பாப்வே பந்து வீச்சை விளாசித் தள்ளியது.
இருவரும் போட்டிக் போட்டுக்கொண்டு ரன் சேர்த்தனர். இதனால் இந்தியாவின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.
அரைசதத்தை கடந்து விளையாடிய மணீஷ் பாண்டே 86 பந்தில் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 71 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 144 ரன்கள் குவித்தது.
மறுமுனையில் விளையாடிய கேதர் ஜாதவ் கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தில் சிக்சர் அடித்து தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இருவரின் அபார ஆட்டத்தால் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் குவித்தது.
கேதர் ஜாதவ் 105 ரன்களுடனும் (87 பந்தில் 12 பவுண்டரி, ஒரு சிக்சர்), பின்னி 18 ரன்களுடனும் (8 பந்தில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர்