மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று, 3-0 என தொடரை கைப்பற்றி ஜிம்பாப்வேவை ஒயிட் வாஷ் செய்தது.
இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று 2-0 என தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் இன்று 3-வது ஒருநாள் போட்டி தொடங்கியது. டாஸ் வென்று ஜிம்பாப்வே பீல்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, கேதர் ஜாதவ் (105), மணீஷ் பாண்டே (71) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 276 ரன்கள் குவித்தது.
277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே தன் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர் சிபாபாவைத் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். சிபாபா மட்டும் தாக்குப்பிடித்து 82 ரன்கள் எடுத்தார்.
இதனால் ஜிம்பாப்வே அணி 42.4 ஓவரில் 193 ரன்களில் ஆல் அவுட் ஆனது. எனவே இந்தியா 83 ரன்களில் அபார வெற்றி பெற்று ஜிம்பாப்வேவை 3-0 என ஒயிட் வாஷ் செய்தது.
இந்திய பந்து வீச்சாளர் பின்னி 3 விக்கெட்டுகளும், மோகித் சர்மா, ஹர்பஜன் சிங், அக்சார் படேல் தலா இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள். சதம் அடித்த கேதர் ஜாதவ் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
இரு அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடர் 17-ந்தேதி தொடங்குகிறது.