தோள்பட்டை தசை வலுப்பெற தூவிகோனாசனம் ! #Tuvikonacanam

செய்முறை:
தோள்பட்டை தசை வலுப்பெற தூவிகோனாசனம் ! #Tuvikonacanam
1. கால்களுக்கிடையே ஒரு அடி இடைவெளியிருப்பது போல் நிற்கவும். விரல்களைக் கோர்த்து, கரங்களைப் பின்பக்கமாக நீட்டி வைக்கவும்.

2. மூச்சை முழுவதுமாக உள்ளே இழுக்கவும்.

3. மூச்சை வெளிவிட்டுக் கொண்டே இடுப்பை வளைத்து எவ்வளவு குனிய முடியுமோ, அவ்வளவு தூரம் குனியவும்.

4. குனியும் போது பின்னிய கரங்களைப் பின்புறம் மேலே உயர்த்தவும். இதே நிலையில் சிறிதுநேரம்  இருந்து மெதுவாக ஆரம்ப நிலைக்கு வரவும்.
பலன்கள்:

1. தோள்பட்டை தசைகள் வலுப் பெறுகின்றன.

2. கழுத்தும் பிடரியும் வலுப் பெறும்.

3. இளம் வயதினர்கள் செய்யக்கூடிய ஆசனமாகும்.
Tags:
Privacy and cookie settings