கொழுப்பை குறைக்க நார்ச்சத்து உணவு !

உடல் எடை அதிகமாவதற்கு, உண்ணும் முறையும் பழக்க வழக்கங்களும் தான் காரணம். இதற்கு நாவை சரியாக கட்டுப்படுத்த முடியாததே ஆகும்.
கொழுப்பை குறைக்க நார்ச்சத்து உணவு !
இதனால் எந்த ஒரு உணவை பார்த்ததும், மனம் அலை பாய்ந்து, அதனை சாப்பிட தூண்டி, அதனை சாப்பிட்டால் என்ன தீமை ஏற்படும் என்பதை யோசிக்காமல் சாப்பிட்டு விடுகிறோம். 
அதற்காக சாப்பிடவே கூடாது என்று சொல்ல வில்லை. சாப்பிட வேண்டும், ஆனால் கட்டுப்பாடும் வேண்டும். சிலர் உடல் எடையை குறைப்பதற்கு டயட் மற்றும் உடற் பயிற்சியை மேற் கொள்வார்கள். 

இதனால் மட்டும் உடல் எடை குறையாது. எப்போதும் ஒரே மாதிரியான செயல்களையும், உணவு பழக்க வழக்கங்களையும் மேற்கொள்ள வேண்டும்.

ஒரு சில உணவுகளை சாப்பிடுவதால் தொப்பை ஏற்படுகிறது. அதே போல் தொப்பையை குறைக்கவும் ஒரு சில உணவுகள் உள்ளன. க்ரீன் டீயில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மட்டுமின்றி, கொழுப்புகளை கரைக்கும் பொருட்களும் உள்ளது.

எனவே உடல் எடையை குறைக்க தினமும் காலையில் க்ரீன் டீயை குடித்து வர வேண்டும். பீன்ஸ் வகைகளில் கருப்பு பீன்ஸ், காராமணி போன்றவற்றில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.

இவை உடலில் உள்ள டாக்ஸின்களை (வேதிப்பொருள்) வெளி யேற்றுவதோடு, தேவையற்ற கொழுப்புக் களையும் கரைத்து விடும். 
இதனை சாப்பிட்டால், அடிக்கடி பசி எடுக்காது. ஆப்பிளில் உள்ள பெக்டின் எனும் பொருள், உடலில் இருந்து தேவையற்ற கொழுப்புகளை வெளியேற்றி விடும். 
இதனால் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வர, தொப்பையும் குறையும். காய்கறிகளில் ப்ராக்கோலி, காலிஃப்ளவர் மற்றும் முட்டைகோஸ் போன்ற பச்சை காய்கறிகளில் 

அதிக அளவில் கால்சியம் மற்றும் வைட்டமின் ‘சி‘ உள்ளது. வைட்டமின் ‘சி‘ சத்தானது கொழுப்புகளை கரைக்கக் கூடியது. மேலும் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டால், கொழுப்புகள் கரைந்து உடலில் இருந்து வெளியேறி விடும். 
கொழுப்பை குறைக்க நார்ச்சத்து உணவு !
எனவே உணவை குறைத்து காய்கறிகளை அதிகளவு சாப்பிட்டால் தொப்பை குறையும். டார்க் சாக் லெட்டில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.
இதில் போதிய அளவில் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்புகளும் அதிக அளவில் கொக்கோவும் உள்ளது. இவற்றை சாப்பிட தொப்பை குறைந்து, உடல் எடையும் குறையும்.

மசாலா பொருட்களில் ஒன்றான பட்டை உடலில் உள்ள கொழுப்புகளை கரைத்து விடும். எனவே உணவுகளில் லேசாக பட்டையை பொடி செய்து சேர்த்து சாப்பிட்டால், தொப்பை குறைவதோடு, நீரிழிவு நோயும் வராது.

நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள ஓட்ஸ், ஒரு சிறந்த டயட் உணவு. உணவில் ஓட்ஸ் அதிகம் சேர்த்து உண்பது நல்ல பலனை தரும்.
நறுமண பொருளான பூண்டு, உடல் வெப்பத்தை அதிகரிப்பதோடு, உடலில் உள்ள சர்க்கரையின் அளவை சீராகவும், கொழுப்புகளை கரைக்கும் திறன் கொண்டது.

இஞ்சி ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்து, உடல் வெப்பத்தை அதிகரித்து, உடலில் உள்ள கொழுப்புகளை கரைத்து விடும். 
எனவே இஞ்சியை, டீயில் சேர்த்து குடிப்பது நல்லது. பெர்ரி பழங்களில் ஸ்ட்ராபெர்ரி, ராஸ்ப்பெர்ரி மற்றும் ப்ளாக்பெர்ரி போன்றவற்றில் உடலில் சர்க்கரையை மெதுவாக உறிஞ்ச செய்யும் நார்ச்சத்துக் களும், வைட்டமின் களும் உள்ளன.
இவற்றை சாப்பிட வைட்டமின் குறைபாடுகள் ஏற்படாமல் இருக்கும். ஆப்பிளை போன்று பேரிக்காயிலும் அதிகளவு சக்தியானது நிறைந்துள்ளது.

எனவே தொப்பை இருப்பவர்கள் பேரிக்காயை சாப்பிடுவது பலனை தரும்.தினையில் 5 கிராம் கொழுப்புகளை கரைக்கும் நார்ச்சத்தும், 8 கிராம் பசியை கட்டுப் படுத்தும் புரோட்டீனும் உள்ளதால், உடலில் தொப்பையானது விரைவில் கரைந்து விடும்.
சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடுவதால் மெதுவாக செரிமானமடை வதால், நீண்ட நேரம் பசி யெடுக்காமல் இருக்கும். மேலும் அதில் குறைந்த அளவில் கிளைசீமிக் இன்டெக்ஸ் இருப்பதால், நீரிழிவு உள்ளவர்களும் சாப்பிடலாம்.
காரபொருளான மிளகாயில் காப்சை சின் அதிகம் இருப்பதால், அவை உடலில் உள்ள கலோரியை கரைத்து, சர்க்கரையின் அளவை சீராக வைக்க உதவுகிறது. மேலும் இது காரமாக இருப்பதால், அதிகப் படியான உணவையும் சாப்பிட விடாமல் தடுக்கும்.
Tags:
Privacy and cookie settings