அல்சர் நோய்க்கு அருமருந்தாவது இளநீர் !

வயிற்றுப்புண் நோய் (அல்சர்) என்பது நமது உடலில் உள்ள சிறு குடலில் ஏற்படுவது. நேரம் தவறி சாப்பிடுவது, நீண்ட நேரம் சாப்பிடாமல் இருப்பது, அதிக காரமான தின்பண்டங்களை சாப்பிடுவது போன்ற பல காரணங்களால் அல்சர் உருவாகிறது.
அல்சர் நோய்க்கு அருமருந்தாவது இளநீர் !
அல்சர் உருவாகி இருந்தால் சாப்பிடும் போது வயிற்றில் எரிச்சல், நெஞ்செரிச்சல், குமட்டல், வாந்தி உள்ளிட்டவைகள் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். 

வயிற்று புண் நோய் இருப்பவர்கள் சாக்லெட், குளிர் பானங்கள், மது, பெப்பர்மிட், காபி, கருப்பு தேனீர், ஆரஞ்சு, திராட்சை, பூண்டு, மிளகாய், பால் உணவுகள், காரம், வெங்காயம், தக்காளி விழுது, தக்காளி பொருட்கள் உள்ளிட்ட வைகளை தவிர்க்க வேண்டும்.
வயிற்றுப்புண் ஏற்பட்டிருந்தால் கோதுமை, கோழி, மீன், பீன்ஸ், முட்டை, தயிர்,  அத்திப்பழம் உள்ளிட்டவை களை கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு குறைவாக சேர்த்து சாப்பிட வேண்டும். 

அத்துடன் புளிப்பான, பழங்கள் மற்றும் காரம்மான உணவுகளையும் தவிர்க்க வேண்டும். வயிற்றுப்புண் நோய் குணமாக முக்கிய இயற்கை மருந்தாக விளங்குவது இளநீர். 

இதில் உள்ள தண்ணீர், வழுக்கை உள்ளிட்டவைகள் நம் உடலில் உண்டாக்கும் நோயை தடுக்கும் இயற்கை மருந்தாக பயன்படுகிறது. இதில் நாட்டு இளநீர், செவ்விளநீர், பச்சை இளநீர் என பல வகைகள் உண்டு.

இதனை தினமும் காலை மற்றும் மாலை என இரண்டு வேலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் நோய் விரைவில் குணமடையும். 

மேலும் உடல் சூட்டை தணிப்பதோடு, கண்களுக்கு குளிர்ச்சி, அதிக உணவு சாப்பிட்ட பிறகு ஜுரணமாகும், அஜுரண கோளாறுகளை சரி செய்யும்.
மேலும், இதனை தினமும் மதியம் நேரத்தில் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்தி, ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற அகத்த நீர்களை வெளியேற்று வதுடன், ரத்த சோகையை போக்குகிறது.

அத்துடன் ரத்த கொதிப்பு குறைக்க, இரத்த அழுத்தம், மஞ்சள் காமாலை, காலரா, அம்மை நோய், கல்லீரல் பாதிப்பு, நாவறட்சி, தொண்டை வலி ஆகிய வற்றையும் நீக்குவதுடன், உடல் பருமனையும் அதிகரிக்க செய்யும்.
மேலும் வேர்க்குரு, வேனற்கட்டி, அம்மை, தட்டம்மையில் ஏற்படும் தடிப்புகளை குணப்படுத்தவும் இளநீரை உடம்பின் மீது பூசிக் கொள்ளலாம்.
Tags:
Privacy and cookie settings