இந்திய பெருங்கடலில் உள்ள மொரிசியஸ் தீவு அருகே ஆழ் கடலுக்குள் நீர்வீழ்ச்சி போன்று இருக்கும் புகைப்படம் வானில் இருந்து எடுக்கப் பட்டுள்ளது.
உலகில் பசிபிக், அட்லாண்டிக் பெருங்கடல் களுக்கு அடுத்தபடியாக பெரிய கடலாக விளங்குவது இந்திய பெருங் கடலாகும்.

தெற்கே தெற்கு பெருங்கடலும், மேற்கே ஆப்பிரிக்காவும், வடக்கே ஆசியாவும், கிழக்கே ஆஸ்திரேலியாவும் இப்பெருங் கடலின் எல்லைகளாக அமைந்துள்ளன.

இன்ஸ்டன்ட் இட்லி மாவு யூஸ் பண்றீங்களா?

இதன் மொத்த பரப்பளவு 6,85,56,000 சதுர கி.மீ. ஆகும். இந்திய பெருங் கடலின் மிக ஆழமானப் பகுதி ஜாவா நீர்வழியாகும். இதன் ஆழம் 7,258 மீட்டர் ஆகும்.

உலக பெட்ரோலிய பொருள்கள் உற்பத்தியில் 40 சதவிகிதம் இந்தியப் பெருங் கடலிலிருந்து கிடைக்கிறது. 

மற்றும் பிற அபூர்வ வளங்கள், முக்கியமான கடல் பாதைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

இந்திய பெருங்கடலில் உள்ள மொரிசியஸ் அருகே ஆழ்கடலுக்குள் நீர்வீழ்ச்சி போன்று இருப்பது தொடர்பான புகைப்படம் வானில் இருந்து எடுக்கப் பட்டுள்ளது.
பிரமிக்கத் தக்க சேட்டிலைட் புகைப்படம் வியப்பு ஏற்படுத்தும் வகையில் கடல் நீருக் கடியில் நீர்வீழ்ச்சி இருப்பதை காட்டுகிறது. 

கடலோரத்தில் மணல் திட்டு மற்றும் படிவம் காரணமாக இது ஏற்பட்டுள்ளது.
இந்த நீர்வீழ்ச்சியை தீவில் இருந்து தென்மேற்காக கழுகுப் பார்வையுடன் மிகவும் கூர்மையாக உற்றுப் பார்த்தால் காணமுடியும்.

தற்போது இக்காட்சியை கூகுள் மேப்பிலும் காணமுடியும். தீவின் கடற்கரை யொட்டிய பகுதியில் நீருக்கடியில் உள்ள நீர்வீழ்ச்சி தோற்றம், உண்மையில் மாயை ஆகிறது.

1810-ல் பிரித்தானிய ஆளுகைக்குட் பட்ட மொரிசியஸ் 1968-ல் சுதந்திரம் பெற்றது. 1992 குடியரசானது.