எலும்புக்கு வலு சேர்க்கும் வைட்டமின் டி.. Vitamin D !

வைட்டமின்கள் - சிறு வயதில் இருந்து அறிவியலில் நாம் அடிக்கடி படித்தது ஞாபமிருக்கிறதா? வைட்டமின்கள் என்றால் என்ன? எனக் கேட்டால், உடனே நீங்கள் என்ன பதிலளிப்பீர்கள்? வைட்டமின் சத்துக்கள் உடலுக்கு மிகவும் தேவை என்று தானே..
எலும்புக்கு வலு சேர்க்கும் வைட்டமின் டி.. Vitamin D !
ஆனால், உண்மையில் வைட்டமின் எந்த விதமான சத்துக்களையும் தருவதில்லை என்பது தான் உண்மை.

வைட்டமின்களின் வேலை என்னவென்றால் நம் உணவில் உள்ள கார்போ ஹைட்ரேட், புரதம், கொழுப்பு முதலிய உணவுச் சத்துக்கள் இயல்பான வளர்சிதை மாற்றம் அடைந்து உடலில் செயல் படுவதற்குத் தேவையான ஒன்றாகும்.
வைட்டமின்கள் பல வகைப்படும். இதில் வைட்டமின் -டி மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில், இது நமக்கு இலவசமாகக் கிடைக்கிறது. எப்படி என்கிறீர்களா? 

வீட்டில் இருந்து வெளி உலகுக்குக் காலை, மாலை வேளைகளில் வெளியே வரவேண்டும். அது போதும். வைட்டமின் -டி, உண்ணும் உணவை காட்டிலும் எளிதாகச் சூரிய ஒளி வெளிச்சம் மூலமே கிடைக்கக் கூடியது. 
எலும்புக்கு வலு சேர்க்கும் வைட்டமின் டி.. Vitamin D !
நமது உடலில் உள்ள எலும்புகளைக் காப்பதில் வைட்டமின்-டிக்கு முக்கியப் பங்கு உள்ளது. சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் இந்த வைட்டமின் பெயர் கொலிகால்சிபெரால் (kolekalciferol ) 
வைட்டமின் டி -3 இது தான் குழந்தை களுக்கு வரும் ரிக்கெட்ஸ் என்ற நோயை தடுக்கும் வைட்டமின் ஆகும். வைட்டமின் -டி சத்துக் குறையும் போது குழந்தைகளுக்கு ரிக்கெட்ஸ் எனப்படும் நோய் வரும் இந்த நோய் வரும் பட்சத்தில் முதுகில் கூன். 

கால் எலும்புகள் வித்தியாசமாக வளைந்து காணப்படும். உடலில் ஆங்காங்கே எலும்புகள் தனியாக நீட்டி கொண்டிருக்கும். 

அதே போலப் பெரியவர்களுக்குக் குறிப்பாகப் பெண்களுக்கு ஆஸ்டியோ மலேசியா (osteomalacia ) என்ற நோய் வைட்டமின்-டி குறைபாடால் வரக்கூடும்.
ஆஸ்டியோமலேசியா என்ற நோய் வரும் பட்சத்தில் கால்சியமும், பாஸ்பரசும் முறையாக உடலில் சேராமல் எலும்புகள் மெலியும், எலும்புகளைத் தொட்டாலே வலிக்கும், மூட்டு வலி அதிகமாகி, நடக்கவே முடியாத சூழ்நிலை ஏற்படும்.

ஒருவருக்கு அடிக்கடி களைப்பு, உடல் பலவீனம், மூட்டுவலி, முதுகுவலி, தசை வலி,  தசைபிடிப்பு ஏற்படுகிற தென்றால் அவருக்குப் பெரும்பாலும் வைட்டமின் -டி குறைபாடு இருக்கும்.
எலும்புக்கு வலுசேர்க்கும் வைட்டமின் டி - Vitamin D !
பெரும்பாலும் சூரிய ஒளி வெளிச்சம் படாமல் வீட்டுக்குள்ளும், குளிர்சாதன வசதி பொருத்தப்பட்ட அறையில்  வேலை செய்பவர்களுக்குமே இந்தப் பிரச்னை இருப்பதை கண்கூடாகக் காணலாம்.

பொதுவாக ஒரு நாளைக்குத் தினமும் 5 முதல் 10 மைக்ரோ கிராம் வரை வைட்டமின்- டி மனிதர் களுக்குத் தேவை. 
அதுவும் 60 வயதானவர் களுக்கு 15 மைக்ரோ கிராம் வரை தேவைப்படும். சூரிய ஒளி மட்டுமின்றி உணவிலும் கூட வைட்டமின்-டி இருக்கிறது. சைவ உணவு வகைகளில் பெரும்பாலும் வைட்டமின் -டி இல்லை. காளான், பாலில் மட்டும் குறைந்த அளவு இருக்கிறது.

அசைவ உணவுகளில் மீன், முட்டை மஞ்சள் கரு, ஆட்டிறைச்சியின் கல்லீரல் போன்றவற்றில் வைட்டமின் -டி மிகுதியாக இருக்கிறது. இன்றைய உலகில் சுமார் 100 கோடி மக்கள் வைட்டமின்-டி குறைவால் பாதிக்கப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறது ஒரு ஆய்வு. 

இந்தியாவில் 75% பேருக்கு வைட்டமின் -டி குறைபாடு இருப்பதாக வும் அதிர்ச்சி முடிவுகளை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
எலும்புக்கு வலுசேர்க்கும் வைட்டமின் டி - Vitamin D !
எனவே தான், உடல் வலு குறைந்தும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் அதிகரித்தும், மூட்டு வலியால் பாதிக்கபடுபவர்கள் நம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறார்கள்.

இதற்கு ஒரே தீர்வு, தினமும் நீங்கள் வெயில் படும்படி (காலை வெயில் அல்லது மாலை வெயிலில் ) 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை நடக்க வேண்டும்.
உங்கள் குழந்தைகளை வீடியோ கேம்ஸ்கள், பயிற்சி வகுப்புகள் என ஏ,சி. ரூமிலோ, வெயில் படாமலோ அடைத்து வைத்திருப்பதைத் தவிர்த்து அவர்களைத் தினமும் வெயிலில் பாதுகாப்பான முறையில் விளையாட அனுமதியுங்கள்.
Tags:
Privacy and cookie settings