சீனாவில் பெய்து வரும் கனமழையால் ஒரு ஆற்றில் இரு வண்ணங்களில் தண்ணீர் ஓடும் நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தி யுள்ளது.
இரண்டு வண்ணங்களில் நீர் செல்லும் நீர் ஓடை

சீனாவின் டியான்பா (Tianba) கிராமத்தில் ஓடும் ஆற்றில் ஒரு புறம் நீர் பச்சை வண்ணத்திலும், மறுபுறம் மண்ணின் வண்ணத்திலும் ஓடுகிறது. 

இந்த வித்தியாசமான நிகழ்வு காடுகள் அழிப்பினால் ஏற்படுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
வுடாஷு (wudaoshui) நகரப்பகுதியில் இருந்து வரும் இதன் கிளை ஆறு மண்ணை அரித்துக் கொண்டு ஓடி வருவதால் வண்ணம் மாறி வருகிறது.
அந்தப் பகுதியில் 60 சதவீத காடுகள் அழிக்கப்பட்டதால் மண் அரிப்பு அதிகமாக ஏற்பட்டு தண்ணீரோடு கலந்து ஓடி வருகிறது.

ஆனால் டியான்பா கிராமப் பகுதியில் காடுகள் பாதுகாக்கப்பட்டதால் அந்தப் பகுதியில் இருந்து வரும் நீர் தூய்மையாகவும், பச்சை வண்ணத்திலும் காட்சி அளிக்கிறது.
நீடித்த ஆயுளைத் தரும் கார்போ ஹைட்ரேட் !
இதனால் கிளை ஆறு பிரதான ஆற்றுடன் இணையும் பகுதியில் இரு வண்ணங்களாகப் பிரிந்து ஆற்று நீர் ஓடுகிறது.