தயாநிதிக்கு தரப்பட்ட முக்கியத்துவங்கள் - சன்குழுமம் !

0
அரசியலில் அடிஎடுத்து வைத்த வுடனேயே தயாநிதி மாறனுக்கு மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி தாரை வார்க்கப் பட்டது.


முதன் முதலாக பாராளு மன்றத்தில் கால் பதிக்கும் போதே 'காபினெட்' அந்தஸ்த்து அமைச்சரா னார் தயாநிதி மாறன்.

ஸ்டாலினை அரசியலில் முன்நிறுத்தும் போதெல்லாம் கருணாநிதி வாரிசு அரசியல் செய்கிறார் என்று

வரிந்து கட்டிய ஊடகங்கள் தயா நிதியை முன் நிறுத்திய போது பெரியளவு விமர்சனக் கணைகளை வீசவில்லை.

அதே சமயம் தொலைப்பேசி யில் ஒரு ரூபாய் கட்டணத்தில் இந்தியா முழுவதிலும் பேசலாம்

என்ற திட்டத்தை கொண்டு வந்தது, ரோமிங் கட்டணத்தை சமச்சீராக்கியது,

ஏராளமான வெளிநாட்டு நிறுவனங் களை இந்தியாவில் - குறிப்பாக தமிழ் நாட்டில் செய்ய தூண்டியது,

மாறன் சகோதரர் களால் தொடர்ந்து செய்த துரோகங்கள் - சன்குழுமம் !

தகவல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஆர்வம் காட்டியது... போன்ற வற்றால் படித்தவர்கள் மத்தியில் பிரபலமானார் தயாநிதி மாறன்.

திஹிந்துவும், தினமலரும், விகடன் குழும இதழ்களும் தயாநிதியை தாங்கிப் பிடித்து, தனிப்பெரும் திறமை யாளராக அடையாப் படுத்தினர்.

மு.க. ஸ்டாலினைக் காட்டிலும் தயாநிதி மாறன் தமிழகத் திற்கு தலைமை தாங்க பொறுத்த மானவர் என்று

மிக வெளிப்படை யாக தினமலர் வாசகர் கடிதப் பகுதியில் விலா வாரியான கடிதங்கள் வெளியாகின.

தயாநிதி மாறன் தனிபெரும் திறமையாளரா...?

புதுப்புது அறிவிப்புகள் மூலம் நாளும் தன்னை பிரபலப் படுத்திக் கொண்டார் தயாநிதி.

ஆனால் அவரது செயல் பாடுகளால் BSNL எனப்படும் தொலைத் தொடர்பு துறை வளர்ந்ததா? பலன் பெற்றதா என பார்க்க வேண்டும் .


'தனியார் தொலைப் பேசிகள் புழக்த்திற்கு வந்து விட்ட பிறகு அதற்கு ஈடாக BSNLஐ வளர்ப்பதற்கு

மாறாக வாட்டி வதக்கினார் தயாநிதி' என BSNLன் உயர் அதிகாரி களும், ஊழியர் சங்கங்களும் பல முறை குற்றசாட்டி யுள்ளனர்.

ரிலையன்ஸ் நிறுவனம் அத்துமீறல் மூலமாக BSNLக்கு சுமார் 7,000 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படுத்தியது. 

ஆனால் ரிலையன்ஸு க்கு ஆதரவாக இந்த விஷயத்தை தயாநிதி மூடி மறைக்க முயன்றார்.
இது போன்ற நடவடிக்கை களால் இடது சாரி உறுப்பினர்கள் பாராளு மன்றத்தில் தயாநிதி மாறனை எச்சரிக்கும் சூழலும் ஏற்பட்டது.

சர்வதேச நிறுவனங்கள் ஜி.எஸ்.எம் நெட்வொர்க் அமைப் பதற்கான சாதனங் களை வழங்குதல் மற்றம் 

ஜி.எஸ்.எம் இணைப்புகள் அமைப்ப தற்காக வழக்கமான சந்தை மதிப்பை விடவும் 

கூடுதல் தொகையை BSNL லாபம் பெற்று கொள்ளை யடித்து வந்துள்ளனர் என இப்போது அம்பலமாகி யுள்ளது

புதிய தகவல் தொழில் நுட்ப துறை அஅமைச்சராக வந்த ஆ.ராசா சமீபத்தில்

இதை கண்டு பிடித்து ஒரு டெண்டரை நிறுத்தி வைத்ததன் மூலம் BSNL இழக்க விருந்த ரூ 1, 800காடி காப்பாற்றப் பட்டது.

ஆனால் இதற்கு முன் நிகழ்ந்த இழப்புகள் எவ்வளவோ?

மற்றொரு சிறிய புள்ளி விவரத்தை பார்ப்போம் BSNL வலுவான கூட்டமைப்பும்,


மிகப்பெரிய ஊழியர் பலமும் சுமார் 50000 கோடிக்கு மேல் கையிருப்பு முள்ள மிகப்பெரிய நிறுவனம்.

ஆனால் கடந்த டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய மாதங்களில் தனியார் நிறுவனங்கள் 8,82,000 புதிய இணைப்பு களை

தந்துள்ள நிலையில் BSNL வெறும் 5,006 இணைப்புகள் மட்டுமே தந்துள்ளது.

இப்படிப்பட்ட திறமையுடன் துறையை நிர்வகித்த தயாநிதி மாறனின் பதவி பறிப்பின் போது
சன் குழுமத்தில் எப்போது முதல் இந்தப் பிளவு ஏற்பட்டது? - சன்குழுமம் !
சில ஊடகங்கள், "ஐயோ ஒரு நல்ல திறமை யாளரை இழந்து விட்டோமோ....." என புலம்பி தீர்த்ததை நினைத்தால் வியப்பாக இருக்கிறது

போட்டி யாளர்களை பொசுக்குவேன்

'தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சகம் தான் வேண்டும்' என தாத்தாவிடம் வாதாடி

பதவிப் பெற்ற தயாநிதி மாறன் செய்த அதிகார அத்துமீறல்கள் அளவற்றவை.


தென் இந்திய மொழிகளில் குறிப்பாக தமிழில் சேனல் ஆரம்பிக்க வேண்டி வந்த விண்ணப் பங்களை அலட்சியம் காட்டினார்.

TRAI லைசென்சும், W.P.C கிளியரன்சும் இல்லை யென்றால் தொலைக் காட்சி ஆரம்பிக்க முடியாது.

இவை இரண்டையும் அனுமதிக்கும் அதிகாரம் தம்பி தயாநிதியின் கையிலிருந்தது.

அண்ணன் கலாநிதியின் கட்டளைப்படி காட்சி ஊடகங்கள் எதையும் கால் பதிக்க விடாமல் தடுத்தாண்டார் தயாநிதி.

'மலர் தொலைக்காட்சி' என்பதாக தினமலர் குழுமத்தி லிருந்து திட்டமிட்ட சேனல் முயற்சி களுக்கு

மூன்றாண் டுகள் முட்டுக் கட்டை. இதே நிலை ஜெ. தொலைக் காட்சியி லிருந்து திட்ட மிட்ட 24மணிநேர நியூஸ் சேனலு க்கும் ஏற்ப்பட்டது.
வாரிசு போட்டி வந்தது எதனால்? - சன்குழுமம் !
(ஜெயா தொலைக் காட்சி நீதி மன்றம் சென்று போராடியும், அரசியல் பலத்திலும் உரிமம் பெற்று விட்டது)

'தமிழ்த்திரை' தடம் தெரியாமல் மறைந்தது. 'லைசென்சை' புதுப்பிக்க கால தாமதமானதை

காரணங் காட்டி 'ராஜ் ப்ளஸ்' சேனல் ஒளிப்பரப்பு ரத்துச் செயப்பட்டது.

இப்படியாக சுமார் 60 சேனல் களுக்கு அணைப்போட்டு தடுத்து அண்ணன் கலாநிதிக்கு அனுசரனை யாக அதிகார த்தை கையாண்டார் தயாநிதி.

ராஜ் தொலைக் காட்சியிலும், விஜய் தொலைக் காட்சியிலும் செய்திகள் ஒளிப்பரப்பு தடை செய்யப் பட்டது


விஜய் தொலைக் காட்சியில் 'மக்கள் யார் பக்கம்' என்ற பிரபல அரசியல் நிகழ்ச்சியை 'உடனே நிறுத்தா விட்டால்

விளைவுகள் விபரித மாகும்' என தயாநிதியே தொலை பேசியில் மிரட்டி நிறுத்தினார்.

'சன் தொலைக் காட்சி பார்வையாளர் களை திசை திருப்பும் எந்த ஒரு ஊடக செயல் பாட்டையும்

சகித்து கொள்ள முடியாது' என்பதே தயாநிதி அமைச்சக த்தின் எழுதப் படாத தாரக மந்திரமா யிருந்தது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings