கடற்கரையில் அதிர்ச்சி.. பெங்களூரு இளைஞருக்கு... சோகம் !

0

பெங்களூரைச் சேர்ந்த ஹாரி (27), சரத் (27), சதீஷ் (28), மெல்வின் (20), அருண் (30), முனுஷ் (23), பாஹாபா (22) ஆகிய ஏழு இளைஞர்கள் கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி சுற்றுலா நோக்கில் வேளாங்கண்ணிக்கு வந்திருந்தனர். 

கடற்கரையில் அதிர்ச்சி.. பெங்களூரு இளைஞருக்கு... சோகம் !
இவர்கள் வேளாங்கண்ணி ஆரிநாட்டு தெருவில் உள்ள ஒரு தனியார் விடுதியில் 6 நாட்களுக்கு அறை எடுத்து தங்கியிருந்தனர். இந்நிலையில், நேற்று மதியம் 12 மணியளவில், வேளாங்கண்ணி கடற்கரை வடக்கு பகுதியில் கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். 


அப்போது, திடீரென கடல் அலையில் மூவர் சிக்கினர். அந்த நேரத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த வேளாங்கண்ணி கடற்கரை காவல் நிலைய போலீசார் உடனடியாக கடலில் இறங்கி மீட்பு பணியில் ஈடுபட்டனர். 


இதில் அருண் மற்றும் முனுஷ் ஆகிய இருவரையும் உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்து மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உடலில் வலி  இருக்கும் இடத்தில் ஐஸ் கட்டி ஜாலம் !

அதே நேரத்தில் கடலில் சிக்கிய பாஹாபா என்ற 22 வயது இளைஞர் மாயமாகி தேடுதல் பணி தொடங்கப்பட்டது. தீயணைப்பு துறை மற்றும் கடலோர போலீசார் இணைந்து தீவிரமாக தேடிவந்த நிலையில், இன்று காலை செருதூர் கடற்கரைப் பகுதியில் பாஹாபாவின் உடல் கரை ஒதுங்கியது. 


இதுகுறித்து புகாரின்பேரில் கடலோர காவல் குழும போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வேளாங்கண்ணிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெரும் துயரத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings