அரியலூரில் இருசக்கர வாகனத்தில் வரும் ஆண்களிடம் லிப்ட் கேட்பது போன்று ஏறி, செயின் பறிப்பில் ஈடுபட்ட காதல் ஜோடியை, பொறி வைத்து போலீசார் பிடித்துள்ளனர்.
உலகின் நம்பர் உணவுச் சங்கிலி மெக்டொனால்ட்ஸ் உருவானது எப்படி?
இருசக்கர வாகனம் சிறிது தூரம் சென்றதும் லிப்ட் கொடுத்த நபரிடம் நீண்ட நாட்களாக பழகியவர் போன்று கலகலவென பேசியுள்ளார். பின்னர், வேண்டும் என்றே உரசியவாறு, தொட்டு, தொட்டு பேசியுள்ளார்.
ஒரு கட்டத்தில் தனது மாய வலையில் அந்த நபர் விழுந்ததை உறுதி செய்த பெண், மதுபானம் வாங்கி வந்தால் குடித்து விட்டு உல்லாசமாக இருக்கலாம் என்று கூறியுள்ளார். பின்னால் இருப்பவர், யார், எப்படி பட்டவர் என்பது எதுவும் தெரியாமல் 60 வயதான நபர் பெண்ணின் மகுடிக்கு மயங்கியுள்ளார்.
தொடர்ந்து லிப்ட் கொடுத்தவர், மது மற்றும் மாதுவுடன் தனது இருசக்கர வாகனத்தை வங்காரம் காப்பு காடு பகுதிக்கு ஓட்டிச் சென்றுள்ளார். அங்கு, மது போதையில் சுயநினைவை இழந்த 60 வயது நபரிடம் இருந்து, 4 சவரன் தங்க நகையை பறித்துக் கொண்டு அந்த பெண் சிட்டாய் பறந்துள்ளார்.
தண்ணீர் அலர்ஜியா அப்படி வேறயா இருக்கு? இத படிங்க முதல்ல?
இதுகுறித்து பாதிக்கப்பட்ட அந்த நபரும் செந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் சாஸ்திரி உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
விசாரணையில், பைக்கில் லிப்ட் கேட்டு செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவேறு சம்பவங்களிலும் பல்வேறு ஒற்றுமைகள் இருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து, சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் அரியலூர் மாவட்டம் சிலம்பூர் கிராமத்தை சேர்ந்த பெண் தில்லாலங்கடியில் வேலையில் ஈடுபட்டது தெரியவந்தது.
35 வயதான பாஞ்சாலை என்கின்ற கலையரசிக்கு திருமணமாகி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கணவனை பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது.
பின்னர், நவீன்குமார் என்பவருடன் அவர் பழகி வந்துள்ளார். காதல் ஜோடியாக உலா வந்த இவர்கள், பைக்கில் தனியாக வரும் ஆண்களை குறிவைத்து கைவரிசை காட்டியதும் அம்பலமானது.
லிப்ட் கொடுத்து ஏமாந்தவர்கள் உண்மை வெளியே தெரிந்தால் தர்மசங்கடமாகிப் போகும் என்ற நினைப்பில் புகார் அளிக்காமல் இருக்கலாம் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இனிப்பில் இருக்கும் அபாயம் என்ன?
தனியாக செல்லும் ஆண்கைளை குறி வைத்து லிப்ட் கேட்பது போல் நடித்து செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த காதல் ஜோடி கைது செய்யப்பட்ட சம்பவம் அரியலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Thanks for Your Comments