கும்பகோணம் கோயிலில் சிறுமிக்கு நேர்ந்த... பூசாரி கைது !

0

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் கோயிலில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கும்பகோணம் கோயிலில் சிறுமிக்கு நேர்ந்த... பூசாரி கைது !
கடந்த செப்டம்பர் மாதம் 08ஆம் தேதி, திருவாலஞ்சுழியில் உள்ள கோயிலுக்கு, பாதிக்கப்பட்ட சிறுமி தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளார். கோயிலில் வைக்கப்பட்டுள்ள உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்காக அந்த சிறுமி தனியே சென்றுள்ளார். 


அப்பொழுது கோயிலில் தலைமை பூசாரிகளாக பணிபுரிந்து வரும் 75 வயதான விஸ்வநாதாய ஐயர் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

உலகின் நம்பர் 1 உணவுச் சங்கிலி மெக்டொனால்ட்ஸ் உருவானது எப்படி?

புகாரின் அடிப்படையில் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட போலீசார், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து கோவில் பூசாரி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். 


இது குறித்து பேசிய போலீசார், "இந்த குற்றச் சம்பவம் கோயிலில் வைத்து நடைபெற்றது உறுதி செய்யப்பட்டுள்ளது. தீவிர விசாரணைக்கு பிறகு உண்மையை கண்டறிந்து குற்றவாளியின் கைது செய்துள்ளோம்" என ஒரு தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் சாமி கும்பிடுகின்ற சிறுமிக்கு கோயில் பூசாரி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார். அவருக்கு நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. 


அதே போல் கடந்த மே மாதம், தேனி மாவட்டத்தில் பூசாரியாக பணிபுரிந்து வந்த திலகர் கோயிலுக்குள் வைத்து சிறுவர், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். 


ஈரோடு மாவட்டம் பவானியில் 22 வயதான கோயில் பூசாரி 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். கடந்த ஜூன் மாதம், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மது போதையில் பெண்கள் முன்பாக, பூசாரிகள் ஆபாச நடனம் ஆடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

கும்பகோணம் கோயிலில் சிறுமிக்கு நேர்ந்த... பூசாரி கைது !
தொடர்ந்து சாமி தரிசனம் செய்வதற்கு வரும் பெண்களிடமும் கோயில்களில் அத்துமீறல் நடைபெறுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் கோயில்களின் குற்றச் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருவதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். 


பெரும்பாலும் கோயில் பூசாரிகளே கோயிலுக்கு குற்ற செயல்களில் ஈடுபடுவதால் பக்தர்கள் முகம் சுளிக்கின்றனர். எனவே இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 

துருவப் பகுதியில் மணி நேர இரவும், பகலும் ஏன்? 

கோயிலுக்குள் அத்துமீறும் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும், பக்தர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings