ஏன் கரூரில் நான் அழுதேன்? அமைச்சர் அன்பில் மகேஷ் !

0

மருத்துவமனையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் கதறுவதை பார்த்து அவர் கண்ணீர் சிந்தினார். அவரின் அழுகை வீடியோ இணையத்தில் பேசு பொருளானது. கண்ணீர் வடித்ததை நடிப்பு என்று ஒரு தரப்பும் ஈர நெஞ்சம் கொண்ட யாராக இருந்தாலும் கண்ணீர் வரும் என்று மறு தரப்பும் கூறி வந்தது. 

ஏன் கரூரில் நான் அழுதேன்? அமைச்சர் அன்பில் மகேஷ் !
இது குறித்து இன்று விளக்கம் அளித்த அவர், கல்லை கடவுளாக மாற்றிய மனிதம், மனிதனாக மாற மறந்து விட்டான் என்று தெரிவித்தார். கரூறில் அவர் கண்ணீர் சிந்துவதற்கு முன்பவாக அவர் வேறு ஒரு இடத்திலும் அழுதுள்ளார். 


கரூர் சம்பவத்திற்கு இரண்டு தினங்களுக்கு முன்பு, கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற நிகழ்வினை தமிழக அரசு நடத்தியது. அப்போது அரசு பள்ளியில் பயின்று சாதித்த மாணவர்கள் அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உணர்ச்சி வசப்பட பேசினார்கள். 

அதில் பெரும்பாலான மாணவர்கள், மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்து வந்தவர்கள். அவர்கள் பட்ட கஷ்டங்களை கண்ணீர் மல்க கூறினர். 


அதனை கேட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி கண் கலங்கினார். அப்போது அவர் கண் கலங்கியது குறித்து பேசியபோது, எங்கள் பிள்ளைகள் சாதிப்பதை பார்கையில் கண்ணீர் வருகிறது. இது ஆனந்த கண்ணீராக கூட இருக்கலாம். 

அரசாங்கம் கொண்டு வரும் திட்டம் ஒரு குடும்பத்தை எப்படி மாற்றுகிறது என்பதை நினைத்து மகிழ்ச்சியாக உள்ளது என்று அவர் தெரிவித்து இருந்தார். கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். 


இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மொத்தம் 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தமிழகம் மட்டும் இல்லாமல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


இதனைத் தொடர்ந்து, கரூரில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அழுத காட்சி இணயத்தில் வைரலாக பரவியது. சமூக வலைதளங்களில் பலரும் இதனை கிண்டல் செய்தனர்.


இது குறித்த கேள்விக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் அளித்து பேசுகையில் : “உணர்ச்சிகளும், அறிவும் சார்ந்து சமமான பேச்சுகள் அமைந்திட வேண்டும்,. இது பேச்சாளர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்கு எடுத்துக்காட்டாக கூறலாம்.

உணர்ச்சிகள் அதிகமாகி அறிவு குன்றி இருந்தால் விலங்குக்கு சமமானது. அறிவு அதிகமாகி உணர்ச்சிகள் குன்றி இருந்தால் மரத்திற்கு சமமானது என வள்ளுவர் கூறியுள்ளார்.

முதலில் நாம் மனிதர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு கல்லை கடவுளாக மாற்ற தெரிந்த மனிதனுக்கு தன்னை மனிதனாக்க தெரியாமல் மறந்து விட்டான்” என கூறினார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings