கர்நாடக மாநிலம் பெங்களூருவிலும் குற்ற சம்பவங்கள் அதிகரித்தபடியே உள்ளன.. நேற்று முன்தினம் நடந்த ஒரு கொலை சம்பவம் பெங்களூருவாசிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.. இது தொடர்பான விசாரணையை போலீசார் முன்னெடுத்து வந்த நிலையில், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை அதிரடியாக கைது செய்துள்ளனர்.
பிறகு அந்த ஆட்டோவில் எட்டிப் பார்த்த போது, ஏதோ ஒரு பொருளை, போர்வையில் சுற்றி வைக்கப்பட்ட நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனால் பயந்துபோய் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
ஆட்டிஸம் (Autism) என்பது நோயல்ல, அது ஒரு குறைபாடே !
இதையடுத்து அங்கு விரைந்து வந்த போலீசாரும், ஆட்டோவை சோதனை செய்த போது, போர்வையை விலக்கி பார்த்தனர்.. அப்போது தான் அதற்குள் ஒரு பெண்ணின் சடலம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை நடத்திய போது, இறந்த பெண்ணின் பெயர் சல்மா என்பதும், திருமாணமான சல்மாவுக்கு சுப்பிரமணியன் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டதாகவும், பிறகு சுப்பிரமணியனுடன் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்ததாகவும் தெரியவந்தது.
இந்நிலையில், இந்த கொலை விஷயத்தில் மேலும் பல அதிர்ச்சிகர தகவல்களை போலீசார் தற்போது வெளிக்கொணர்ந்துள்ளனர்.. அதாவது, சல்மாவுக்கு திருமணம் ஆகி 4 குழந்தைகள் இருக்கிறார்கள். ஆனால், சல்மாவின் கணவர் சமீபத்தில் உயிரிழந்துள்ளார்..
இதனால் சல்மா 4 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்த நிலையில், சுப்பிரமணி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் இருவருக்கும் கள்ளக்காதலாக மாறி உள்ளது. கள்ளக்காதல் தகராறு இந்நிலையில், கள்ளக் காதலர்களுக்குள் தகராறு வெடித்துள்ளது.
முதுகு வலி ஏற்படுவது எதனால்? எப்படி போக்குவது !
அதாவது, KHB காலனியை சேர்ந்தவராம் இந்த சுப்பிரமணி,.. 32 வயதாகிறது.. இவரது நண்பர் பெயர் செந்தில்.. 28 வயதாகிறது.. இவர்கள் இருவருமே தினக்கூலிகளாக வேலை செய்து வந்திருக்கிறார்கள்.. இதனை தவிர ஓவியம் வரைதல், ஆட்டோ ரிக்ஷா ஓட்டுவது போன்ற வேலைகளையும் செய்து வந்திருக்கிறார்கள்.
சல்மாவின் கணவர் ஒரு வருடம் முன்பு இறந்துவிட்ட நிலையில், சல்மா அங்குள்ள பகுதியிலேயே வீட்டு வேலை செய்து வந்துள்ளார்.. ஆனால், சல்மாவிடம் சுப்பிரமணியன், செந்தில் இருவருமே தவறான உறவில் இருந்து வந்துள்ளனர்.. இருவருமே சல்மாவுக்கு பண உதவியை செய்து வந்துள்ளனர்..
எனினும்கூட, இவர்கள் 2 பேரை தவிர, சல்மாவுக்கு வேறொரு ஆணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.. இந்த விஷயத்தை கேள்விப்பட்டு சுப்பிரமணியனும் செந்திலும் அதிர்ச்சியடைந்தனர்..
இது குறித்து தான் சம்பவத்தன்று, சல்மாவிடம் இருவருமே கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.. அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் தான், சல்மாவை இருவருமே கூர்மையான பொருளால் தலையில் தாக்கி கொன்றுள்ளனர்..
அந்த வழியாகச் சென்ற ஒருவர் தான், போர்வையை பார்த்து பயந்து போய், போலீசுக்கு சொல்லி உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவிலும் குற்ற சம்பவங்கள் அதிகரித்தபடியே உள்ளன.. நேற்று முன்தினம் நடந்த ஒரு கொலை சம்பவம் பெங்களூருவாசிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது..
சிறுநீரக செயலிழப்பை கண்டறிவது எப்படி?
இது தொடர்பான விசாரணையை போலீசார் முன்னெடுத்து வந்த நிலையில், சம்பந்தப்பட்ட 2 குற்றவாளிகளை அதிரடியாக கைது செய்துள்ளனர். அத்துடன் கொலைக்கான காரணத்தையும் போலீஸார் தெரிவித்துள்ளனர். இது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.



Thanks for Your Comments