நடிகர் சூர்யா இன்று தன்னுடைய ஐம்பதாவது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். இவருடைய வீட்டிற்கு நேரில் சென்று வாழ்த்து சொல்வதற்காக பல ரசிகர்கள் போய் இருக்கின்றனர்.
சமீபகாலமாக அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருந்தாலும் சூர்யாவுக்கு அவருடைய ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகிறார்கள். நடிகராக மட்டுமல்லாமல் சமூக சேவகராக பலருக்கு உதவிகள் செய்து வரும் சூர்யாவை பலரும் பாராட்டியும் வருகிறார்கள்.
படிக்க ஆர்வத்தோடு இருக்கும் ஏழை எளிய குழந்தைகளுக்காக படிப்பின் செலவை சூர்யா ஏற்றுக்கொண்டு வருகிறார். அதோடு சமீபத்தில். வேட்டுவம் திரைப்பட சூட்டிங் போது ஸ்டண்ட் மாஸ்டர் மோகன் ராஜா உயிரிழந்திருந்தார்.
இது பலரையும் வருத்தம் அடைய செய்து இருந்தது. சினிமாவில் ஹீரோவுக்கு டூப்பு போடும் பல ஸ்டண்ட் மாஸ்டர்கள் தங்களுடைய இன்னுயிரை துறந்தால் அவருடைய குடும்பத்தினர் அதிகமாக கஷ்டப்படுவார்கள் என்று ஸ்டாண்ட் மாஸ்டர்கள் அதிகமானோருக்கு சூர்யா தன்னுடைய சொந்த பணத்தில் இன்சூரன்ஸ் கட்டிக் கொண்டிருக்கிறார்.
இப்படி பலருக்கு பல உதவிகளை செய்து வரும் சூர்யாவிற்கு இன்று 50ஆவது பிறந்தநாள். அதற்காக அவர் நடிக்கும் திரைப்படங்களில் இருந்து அவருக்காக இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்கள். சூர்யா சமீபத்தில் நடித்து வரும் கருப்பு திரைப்படத்தின் போஸ்டர் நேற்று இரவு 11 மணிக்கு வெளியானது.
இதனால் இவர் இந்த திரைப்படத்தில் இரண்டு கேரக்டரில் நடித்திருக்கிறார் என்ற கேள்விகளும் எழுகிறது. அது போல சூர்யா கஜினி திரைப்படத்தில் தர்பூசணி பழம் சாப்பிட்டுக் கொண்டு தன்னுடைய பாடி கார்டை கண்ணாலே போக சொல்லி சொல்லுவார்.
அதே போல இப்போது கருப்பு திரைப்படத்தின் டீசரிலும் செய்திருக்கிறார். அது போல இந்த டீசரில் திரிஷாவை எங்கேயும் காட்டவில்லை. இதனால் த்ரிஷாவின் கேரக்டர் சர்ப்ரைஸ் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Thanks for Your Comments