சில பெற்றொர்களும் மறைமுக குற்றவாளிகள் 🙏🙏 |

0
என் பொண்ண வசதியான இடத்துலதான் கல்யாணம் பண்ணி கொடுப்பேனு சொல்லுற பெற்றோர்கள் சற்று இதை படியுங்கள்🙏🙏. திருப்பூர் மாவட்டம், அவிநாசி கைகாட்டி புதூரில் திருமணமான 78 நாட்களில் கணவர் வீட்டார் கொடுமை படுத்தியதா கூறி ரிதன்யானு ஒரு இளம்பெண் த*ற்கொ*லை பண்ணியிருக்காங்க... 
 
சில பெற்றொர்களும் மறைமுக குற்றவாளிகள்
எவ்வளவு ஆசையோடும், கனவுகளோடும் தன்னோட பொண்ண பெத்து,வளர்த்து, படிக்க வச்சு கல்யாணம் பண்ணி குடுத்திருப்பாங்க..?? 
 
இத்தனைக்கும் கல்யாணத்துக்கு, 500 பவுன் நகை பேசி, 300 பவுன் நகைகள், 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார் மற்றும் 2½ கோடி ரூபாய் செலவில் ஆடம்பரமா தான் திருமணம் பண்ணியிருக்காங்க... 
 
அப்படியாருந்தும் இது பத்தாத இந்த பேய்ங்க பாக்கியிருக்க 200 பவுன் நகைய கேட்டு, மாமனாரும், மாமியாரும் சித்திரவதை செஞ்சிருக்காங்க.
போதாகுறைக்கு அந்த புருஷன்னு இருக்க ஒருத்தன் அவுங்க அப்பா,அம்மா கூட சேர்ந்து மூணுபேரும் அந்த பொண்ணை தினமும் ஒரு மணி நேரம் நிக்க வைச்சு பேசி,பேசி மனரீதியாக துன்புறுத்தியிருக்காங்க... 
 
இந்த கொடுமைகார குடும்பத்திற்கு மாதம் வாடகை வருமானம் இருந்ததாகவும், அதனால அவுங்க வேலைக்கு எதுக்கும் போகாம வீட்டிலேயே தான் இருந்து இந்த வரதட்சணையும் வாங்கி திங்க பாத்துருக்கானுங்க... 
 
கல்யாணத்திற்கு பிறகா இந்த பொண்ணு சந்தோஷமா வாழவே இல்ல போல, தன்னோட புருஷன் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி மற்றும் மாமியார் சித்ராதேவி தன்னை மனரீதியாக துன்புறுத்துறதாகவும், இனிமேல் இந்த வாழ்க்கையை வாழ முடியாதுன்னும், ரிதன்யா தன்னோட அப்பாக்கிட்ட பலமுறை சொல்லியிருக்காங்க, 
 
ஆனா சில நாள்ல எல்லாம் சரியாகிடும், கவலைப்பட வேண்டாம்னு பெத்தவுங்க மகளுக்கு ஆறுதல் சொல்லியிருக்காங்க.
 
பொறுத்து பொறுத்து போய் ஒரு கட்டத்துக்கு மேல விரக்தியான பொண்ணு தன்னோட கார் எடுத்துக்கிட்டு பக்கத்துல இருக்க கோவிலுக்கு போறேன்னு போய், கார்லையே உக்காந்து விஷம் குடிச்சு இறந்துட்டாங்க.
 
ரெம்ப நேரம் ரோட்ல கார் கிடக்குறதை பாத்த பொதுமக்கள் போலீஸுக்கு தகவல் சொல்லவும் தான் போலீஸ் வந்து பாத்துட்டு, பொண்ணோட வீட்டுக்கு தகவல் சொல்லியிருக்காங்க.... என்ன சொல்றதுனே தெரியல, இதே போல செய்திகள் அடிக்கடி பாக்குறோம், 
 
கொஞ்ச நாள் முன்ன கோட ஒரு ஆசிரியை இதே தவறதான் செஞ்சாங்க, படிப்பு இருக்கு, வேலை வசதி, நல்ல பொருளாதார வசதி வாய்ப்புகள் இருக்கு, இந்த புருஷன்காரன போடா நா*யேன்னு விட்டுட்டு போய் வாழாம இந்த மாதிரி முடிவு எடுத்திருக்க கூடாது... 
 
முன்னல்லாம் த*ற்கொ*லை பண்றவுங்க மேல கோபம் வரும், இந்த மாதிரி ஒரு கையாலாகாதவனுக்காக ஏன் இவுங்க சாகுறாங்க வாழ்ந்து காட்டனும்னு, இப்போலாம் ரெம்பவே பரிதாபாம இருக்கு 
 
அந்த நேரம் அவுங்கள தேற்ற ஒருத்தர் கூட இருந்திருக்கலாம், இருந்திருந்தா அவுங்க மனசு மாறியிருப்பாங்க இந்த முடிவுக்கு போயிருக்க மாட்டாங்கன்னு... 
 
சில பெற்றொர்களும் மறைமுக குற்றவாளிகள்
இது மாதிரியான இறப்புகளுக்கு சில பெற்றொர்களும் மறைமுக குற்*றவாளிகள் தான், புருஷன் பண்ற கொடுமைகளை சொன்னா ஊர் பெருமைக்காக, சகிச்சுக்கிட்டு வாழுமா, பொருத்துப்போமானு இன்னும் அவுங்கள அழுத்தம் குடுப்பாங்க... 
 
ஆனா ஒன்னு எதுக்குமே த*ற்கொ*லை தீர்வு இல்ல, உங்க பெண் குழந்தைகளுக்கு மனதைரியம் சொல்லி குடுத்து வளங்க, எந்த சூழல்லையும் அவுங்களுக்கு அழுத்தம் குடுக்காம எதுனாலும் பாத்துக்கலாம் நாங்க இருக்கோம், 
நீ தைரியம இருன்னு பக்க பலமா இருங்க. தப்பு செய்றதுங்களே குற்ற உணர்ச்சியில்லாம வாழ்றப்போ, நமக்கு என்னன்னு அதுங்க முன்னாடி நல்லா வாழ்ந்து காட்டனும்... 🥺🥺🥺 
 
உலகம் என்னதான் நவீனமயம் ஆனாலும் இன்னும் இந்த மாதிரியான வரதட்ச*ணை கொ*டுமைகளுக்கு தீர்வே இல்ல...
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings